துன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 01

  • 11

 

தனக்கும் சரி பிறருக்கும் சரி துன்பம் துடைத்திடும் பயணமொன்றில் சேகரித்த அம்சங்கள் இவை வாழ்தல் எனும் நீழ்தலில் அனைவருக்கும் உதவிடும் சில கருத்துக்கள் இங்கே!

எம்மில் பலரும் நாள் தோறும் கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் போராட்டமென வெளிப்படையாகவோ உள்ரங்கமாகவோ ஆழ்மனதில் நின்று கொஞ்சம் திக்குமுக்காடிக் கொண்டு எம்மை பலவீனப்படுத்தும் கவலைகளில் இருந்தும் எம்மைத் துழைத்திடும் துன்பங்களில் இருந்தும் விடுமைறை எடுக்க பெரிதும் ஆசை கொண்டுள்ளோம்.

அல்லாஹ் எம் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருளும் மனமகிச்சியும் புரிவானாக என்று பிரார்த்தித்தவளாய்.

வழியனுப்பவும் வரவேற்கவும் உன்னை நீ தயார் செய்துகொள்!

துன்பகர வாழ்க்கையில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டுமெனில் எம்மில் காணப்படும் துன்பங்களுக்கு இட்டுச் செல்லும் சில பண்புகளை வழியனுப்பிடவும், இன்பகர வாழ்க்கையின் பால் இட்டுச் செல்லும் பண்புகளை வரவேற்றிடவும் நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும்.

○ மகிழ்ச்சியை உன்னுள் தளிர் விடச் செய்யும் அம்சங்களை உன் வாழ்க்கையில் நீ வரவேற்கதத் தயாரா???

அழகிய புன்னகை!

பிறருக்கு மெளனத்தால் கதைசொல்லக் கூடிய அழகிய ஆத்மார்த்தமான அமைதியான நட்புகரமான இதழோரப் புன்னகைகளை தராதரம், கெளரவத்திற்கப்பால் பிறருக்குப் பரிசளிக்கும் பண்பினை உன்னுள் வரவேற்றுக் கொள்!

மென்மையான வார்த்தைகள்!

எப்போதும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் இக்கட்டான நிலைகளில் கூட அமைதியாக கனிவாக உறவுகளை ஒன்று சேர்க்கக்கூடிய, உடைந்த உள்ளத்தைக் கூட ஒட்டக் கூடிய மென்மையான வார்த்தைகள் பேசி நாம் சொல்லால் அழகானவர் என்ற முன்னுதாரணத்தை பிறர் உணரும் வகையில் அவர்களின் உள்ளத்துடன் தாக்கம் செலுத்தும் பண்பை உன்னுள் வரவேற்றுக் கொள்!

பசியாற்றிடும் பண்பு!

ஆகுமான வழிகளில் பசியோடிருப்பவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ பசியாற்றிடும் பண்பை உன்னுள் வரவேற்றுக் கொள். உனக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்பதில் உள்ள மகிழ்ச்சியை விட; உன்னால் தான் உயிர் வாழ்கிறேன் என்பதில் உள்ள மனநிறைவே மகோன்னதமானது.

ஈமானிய பலம்!

கஷ்டமோ, சந்தோசமோ தொழுகை மூலம் அல்லாஹ்வுடன் உரையாடுவதையும், அல்குர்ஆனுடன் ஓரிடத்தில் அமர்வதையும், அதைப் படித்து மன அமைதி பெறுவதையும், அதில் கூறப்பட்டவற்றை வாழ்தல் எனும் நீழ்தலில் பேணி நடப்பதையும் தினசரி வழக்கமாகக் கொள்ளும் தன்மையை உன்னுள் வழக்கமாக்கிக் கொள்.

அல்லாஹ்வை நினைவில் கொள்ளல்!

சுன்னத்தான தொழுகைகளில் ஈடுபடுவதையும், பாவமன்னிப்புக் கோருவதையும், அல்லாஹ்வை திக்ர் செய்வதையும், தனக்காகவும் பிறருக்காகவும் முழு சமூகத்தவருக்காகவும் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தைப் பழக்கமாக்குவதை உன்னுள் வரவேற்றுக் கொள்!

குழந்தைகளின் எதிர்காலம்!

உமது குழந்தைகளை / குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அல்குர்ஆன்; சுன்னா வழிகாட்டலில் முன்மாதிரியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அம்சத்தை உன் வாழ்க்கையில் வரவேற்றுக் கொள்.

ஆடைகளை அழகாக்கிடு!

முன்மாதிரியான, பிறரைச் சுண்டியிழுத்திடாத, உனக்கும் பிறருக்கும் கலங்கம் ஏற்படா வண்ணம் அழகிய ஆடைகளை அணிந்து கொள்வதை உன்னுள் வரவேற்றுக் கொள்.

ஆத்மார்த்தமான நட்பு!

அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடிய, இஸ்லாத்தை மதிக்கக் கூடிய, உயர்ந்த மதிப்பைத் தரக்கூடிய, வாழ்க்கையில் வெற்றியைத் தரக்கூடிய அழகிய ஆத்மார்த்தமான நட்புக்களை உன்னைச் சுற்றி வைத்தைக் கொள்வதை உன்னுள் வரவேற்றுக் கொள்.

மனதிற்கு இனிமை சேர்த்திடு!

பெற்றோர்கள், அயலவர்கள், அநாதைகளை இன்முகத்தோடு சந்தித்தல், கொஞ்சம் உரையாடுதல், உதவிடுதல், கண்ணியப்படுத்தல் போன்ற மனதிற்கு இனிமை சேர்க்கும் அம்சங்களை உன்னுள் வரவேற்றுக் கொள்.

வாசிப்பை சுவாசி!

அழகிய, பயனுள்ள, ஆர்வம் கொள்ளச் செய்யும் புத்தகங்களை வாசி. ஆரவாரமான இந்த உலகிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்திடு! புத்தகங்கள் வாங்கிடு. ஓர் அமைதியான பொழுதொன்றில் உன்னை நீயே இருத்தி புத்தகங்களில் மூழ்கிடு. இவற்றை எம் நாட்குறிப்பில் பதிந்து தினம் தினம் நடைமுறைப்படுத்த முயல்வோம். இனி எல்லாம் இன்பமே. வழியனுப்பி வைக்க வேண்டிய பண்புகளுடன் அடுத்த பதிவு மலரும்.

இன் ஷா அல்லாஹ்

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) R  SEUSL
Psychological Counsellor. R
Maruthamunai.

  தனக்கும் சரி பிறருக்கும் சரி துன்பம் துடைத்திடும் பயணமொன்றில் சேகரித்த அம்சங்கள் இவை வாழ்தல் எனும் நீழ்தலில் அனைவருக்கும் உதவிடும் சில கருத்துக்கள் இங்கே! எம்மில் பலரும் நாள் தோறும் கொஞ்சம் சந்தோஷம்…

  தனக்கும் சரி பிறருக்கும் சரி துன்பம் துடைத்திடும் பயணமொன்றில் சேகரித்த அம்சங்கள் இவை வாழ்தல் எனும் நீழ்தலில் அனைவருக்கும் உதவிடும் சில கருத்துக்கள் இங்கே! எம்மில் பலரும் நாள் தோறும் கொஞ்சம் சந்தோஷம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *