இறந்த உடலை தகனம் செய்ய முடியுமா ?

  • 9

அல்லாஹ் உலகத்தில் படைத்த அனைத்து படைப்பினங்களை விடவும் மனிதனை சங்கைப் படுத்தியிருக்கிறான் கண்ணியப் படுத்தியிருக்கிறான் அல்லாஹ் அவன் திருமறையில் கூறுகிறான் :

{அல்லாஹ் ஆதமின் மக்களை சங்கைப் படுத்தியிருக்கிறான் } அவனின் சங்கைப் படுத்துதல், கண்ணியம் என்பது அவன் உயிரோடும் மரணித்த பிறகும் அதே கண்ணியத்தோடு இருப்பதை பாதுகாப்பதே , அல்குரானிய வசனம் பொதுவாக வந்துள்ளமையால் ( முஸ்லிம் காபிர் என்ற வேறுபாடின்றி) அனைத்து ஜனாஸாக்களையும் அது உள்ளடக்கும் .

அல்லாஹ் ஆதமுடைய இரு புதல்வர்களின் கதையில் மரணித்த உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை ஒரு காக்த்தின் மூலம் கொலை செய்த ஆதம் அலை அவர்களின் மகனுக்கு கற்றுக் கொடுக்கிறான் .

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற் காகப்) பூமியைத் தோண்டிற்று.

பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.

மேலுள்ள அல் குர்ஆனின் வசனங்கள் மனிதனை கன்னியப் படுத்தும் விதமாக இறந்த உடலை புதைக்க (அடக்கம்) செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லித் தருகிறது .இது தான் ஆதம் நபி இந்த பூமியில் வாழ்ந்த காலம் முதல் இன்று வரைக்குமான இஸ்லாமிய சட்டம் ஆகும் .

நபி ஸல் அவர்கள் : மரணித்தவரின் எழும்பை முறிப்பது உயிரோடு இருப்பவரின் எழும்பை முரிப்பதைப் போன்றது என்று கூறினார்கள் . மரணித்த உடலை இழிவு படுத்துவதில் ஆகப் பெரிய இழிவு அதனை தகனம் செய்வது . தகனம் செய்யும் பொது அதன் எழும்புகள் உடைந்து சாம்பாலாக மாறிவிடுகிறது . அவனுடைய உடலில் எந்த ஒரு பாகமும் மிகுதியாக எஞ்சி இருக்கப் போவதில்லை . அடக்கம் செய்வதற்கு மாற்றமாக .

மற்றொரு இடதில் நபி ஸல் அவர்கள் மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த கப்ரின் மேல் உக்காருவதை கூட தடுத்திருக்கிறார்கள் அந்த அளவிட்கு ஒரு மனிதனின் கண்ணியத்தை பேணிப் பாதுகாத்திருக்கிறார்கள் உயிரோடு இருந்த போதும் மரணித்த போதும் . இஸ்லாத்தின் சட்டப் படி எந்த மரணித்த உடலையும் தகனம் செய்யக் கூடாது.

ஆனால் விதி விளக்காக ஏதாவது பேரழிவு ஏட்பட்டாள் அந்த பேரழிவின் மூலம் பல்லாயிரம் உயிர்கள் காவு கொள்ளப் பட்டு இந்த உடல்களை புதைப்பதின் மூலம் மானிடத்துக்கு தீங்கு ஏட்படும் என்று துறைசார்ந்தவர்களால் ஊர்ச்சிதம் செய்யப் பட்டால் மாத்திரம் அந்த உடலை பொது நலத்தை கருத்தில் கொண்டு தகனம் செய்யலாம் என்று அறிஞர்கள் பத்வா வழங்கி இருக்கிறார்கள்.

அண்மையில் நடை பெற்றுக் கொண்டிகிக்கின்ற கொரோனா வின் மூலம் இறந்த உடலை தகனம் செய்ததை இதற்கு சான்றாக நாம் காணலாம். அதனை தகனம் செய்யாமல் இருப்பதற்கு பொறுப்பானவர்கள் அனைத்து முயசிகள் எடுக்க வேண்டும். அதற்குறிய முயற்சிகள் பொறுப்பு தாரிகள் எடுத்த போதும் அது பயன்ளிக்கவில்லை. எங்களின் சக்திக்கு மீறிய விடைங்களில் அல்லாஹ் எங்களை குற்றம் பிடிக்க மாட்டான். ஆன போதும் கொரோனா வைரசின் மூலம் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்ற ஒரு வசதி இருக்கும் பொது அதனை தகனம் செய்வது மகாபெரிய குற்றமாகும். மனித உரிமை மீறலாகும்.

அதே நேரம் நாம் முஸ்லீம்கள் என்ற அடிப் படையில் நமது சக்திக்கு மீறி நடக்கும் விடையத்தில் அல்லாஹ் எங்களை குற்றம் பிடிக்க மாட்டான். முன்னைய சமூகம் நபிமார்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் என்ற காரணத்திற்காக வாளால் இரண்டாக பிளக்கப் பட்டிருக்கிறார்கள், இரும்பு சீப்புகள் மூலம் எழும்பு தோல் வேறாக பிரியக் கூடிய அளவிற்கு வாரப் பட்டிருக்கிறார்கள், கொதிக்கும் எண்ணையில் தூக்கி வீசப் பட்டிருக்கிறார்கள், சூடு மணலில் வெட்டார வெயிலில் ஓட்டு ஆடையின்றி தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள், அஸ்காபூல் உக்தூத் என்று அல் குர் ஆனில் கூறப் பட்டிருப்பவர்கள் நெருப்புக் கிடங்குகளில் போட்டு எரிக்கப் பட்டிருக்கிறார்கள் அந்த நேரம் ஒரு பாலகனைக் கொண்டு அந்த நெருப்புக் கிடங்கில் பாய்வதற்கு தயங்கிய தாயிடம் கூறினான் தாயே அஞ்ச வேண்டாம் என்னைக் கொண்டு நெருப்பு கிடங்கில் பாயுங்கள் நீங்கள் சத்தியதில் இருக்கிறீர்கள் என்று பால் குடிக்கும் அந்த சிறுவன் பேசுகிறான் . இதன் மூலம் நான் சொல்ல வருவது எமது சகிக்கு மீறி நடக்கும் விடைய்ங்களில் பொறுமை காத்து அதற்குறிய நட்கூலியை அல்லாஹ்விடம் எதிர் பார்ப்பதே சிறந்தது.

ஒரு முஸ்லிமுக்கு சோதனை ஏட்படும் போது அதனை அல்லாஹ்வின் கலா கத்ரில் உள்ளது எனக்கு நடக்குது என்று அல்லாஹ்வின் வீதியை ஏற்று பொறுமை செய்து நன்மையை எதிர் பார்ப்பவன் நம்பிக்கையில் உயர்ந்தவனாக இருக்கிறான் .

அந்த வகையில் நமது நாட்டில் நடந்த சம்பவம் மனக் கசப்பாக இருந்தாலும் பொறுமையை கடை பிடித்து நன்மை அல்லாஹ்விடம் எதிர் பார்ப்போம் .

P.T. Kaseer Azhary

அல்லாஹ் உலகத்தில் படைத்த அனைத்து படைப்பினங்களை விடவும் மனிதனை சங்கைப் படுத்தியிருக்கிறான் கண்ணியப் படுத்தியிருக்கிறான் அல்லாஹ் அவன் திருமறையில் கூறுகிறான் : {அல்லாஹ் ஆதமின் மக்களை சங்கைப் படுத்தியிருக்கிறான் } அவனின் சங்கைப் படுத்துதல்,…

அல்லாஹ் உலகத்தில் படைத்த அனைத்து படைப்பினங்களை விடவும் மனிதனை சங்கைப் படுத்தியிருக்கிறான் கண்ணியப் படுத்தியிருக்கிறான் அல்லாஹ் அவன் திருமறையில் கூறுகிறான் : {அல்லாஹ் ஆதமின் மக்களை சங்கைப் படுத்தியிருக்கிறான் } அவனின் சங்கைப் படுத்துதல்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *