Covid – 19 – Stay Home

  • 16

இன்று பல இளைஞர் யுவதிகளின் நிலை மன வேதனை தரும் ஒன்றாக மாறிவிட்டது.வானில் ஒரு காகம் பறந்தால் கூட இன்று அவர்களின் whatsapp, facebook status ஆக மாறிவிடும். அது போலவே இந்த corona virus ம் ஊரடங்கு சட்டமும் மாறிவிட்டது.

வெற்று பேச்சும் அர்த்தமற்ற கவிதைகளும் ஆக்ரோஷமான கட்டுரைகளும் எந்த விதமான முடிவுகளையும் தர போவதில்லை. அது மட்டுமன்றி Social Media வினால் எந்த வைரஸ் இனை கட்டுப்படுத்த முடியும். வெறும் விழிப்புணர்வுகளை மாத்திரமே ஏற்படுத்த முடியும். ஆனாலும் அது தேவையான இடத்தில் மாத்திரம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இன்றைய நிலமை அதற்கு மாற்றமாக உள்ளது. இந்த வைரஸ் ஊரடங்குச்சட்டம் என்பவற்றை பயன்படுத்தி Memes, Funny Videos, Stickers போன்றவற்றை பயன்படுத்தி யதார்த்த நிலையின் உண்மைத்தன்மை அறியாது அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்கின்ற ஒரு சிலர் எம்மில் காணப்படுகின்றனர்.இவ்வாறு செய்வது மடமையின் உச்ச கட்டமே.

இந்த வெட்டி பேச்சுக்களை விட்டுவிட்டு சோசியல் மீடியாவை மூட்டை கட்டிவிட்டு உங்களால் முடியுமான உதவிகளை செய்ய முன்வாருங்கள். எத்தனையோ வீடுகளில் பசிக்குரல் கேட்கிறது. கூலி வேலை சம்பளம் என நாட்கள் கடத்திய உறவுகள் பல இன்று ஒரு நேர உணவுக்குக் கூட வழியின்றி வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். நோய், வறுமை, மரணம், அச்சம் போன்ற பல வேதனைகளில் உலகம் துடித்துக் கொண்டிருக்கின்றது ஆனால் எமது நேரத்தை அதனை உற்று நோக்காமல் அதனை கிண்டல் செய்து கேளிக்கையாக மாற்றுவதில் மட்டும் கழித்து கொண்டிருக்கின்றோம்.

இது மனவேதனையை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. பல வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இதனை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். மனிதன் இருப்பதைக் கொண்டு அனுபவிக்காமல் இல்லாத ஒன்றிற்காக எப்போதும் தேடி அலைபவர்களாக மாறிவிட்டார்கள்.

உதாரணமாக எம்மில் எத்தனை பேர் இந்நோய் பரவுவதற்கு முன்னர் இவ்வாறான இக்கட்டான நிலை ஏற்படுவதற்கு முன்னர் லீவு நாட்களை மட்டும் நாற்காட்டியில் எண்ணிய நாட்களும் உண்டு.

ஆனால் இன்று எமக்கு வீட்டில் இருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது அது ஒரு துன்பமான நிலையாக காணப்பட்டாலும் அதனை பயனுள்ளதாக கழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இயந்திர வாழ்க்கை என்று எம்மில் பலர் புலம்பிக் கொண்டிருந்த கால கட்டங்களைத் தாண்டி இன்று ஓய்வு வேண்டாம் என்று கூறும் அளவிற்கு வெறுத்துப்போன ஒரு நிலை காணப்படுகின்றது. இவ்வாறு கிடைத்துள்ள ஓய்வு நாட்களை வீட்டிலிருந்து பயனுள்ளதாக மாற்ற இதுவே சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் மனம் திறந்து பேசுங்கள் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி மனைவி தாய் குடும்ப உறுப்பினர்கள் என அவர்களுடைய நலன்களைப் பேணி அவர்களுக்கு உதவிகளை செய்து குடும்ப சூழலை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலாக மாற்றுங்கள். இவ்வாறு நீங்கள் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்துவதற்கு பல வழிகள் உண்டு. அதனை இழந்துவிட வேண்டாம் குறிப்பாக ஒரு முஸ்லிமாக இதனைப் பார்க்கும்போது ஓய்வு நேரத்தை மிக உன்னிப்பாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

“ஒரு மனிதன் இரண்டு விடயத்தில் பொடுபோக்காக உள்ளான். ஒன்று ஓய்வு நேரம் மற்றும் அவனது ஆரோக்கியம்”

அதுமாத்திரமன்றி அல்லாஹ் தன்னுடைய அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்

“காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் உள்ளான்”

இந்த அல்குர்ஆன் வசனத்தை பார்க்கும்போது நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் உள்ளான். அதாவது அல்லாஹ் ஒன்றின் மீது சத்தியம் செய்யும்போது அது மிகப் பெறுமதியான ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு அல்லாஹ் காலத்தை சுட்டிக்காட்டி சத்தியம் செய்துள்ளான் ஆகவே அந்தக் காலம் மிகவும் பொன்னான ஒன்றாக காணப்படுகின்றது. இன்று நாம் தூங்கி மறுநாள் விழிக்கும் போது நம்மை அறியாமல் பல துன்பகரமான செய்திகளை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு வருகின்றோம்.

விடியும் பொழுதுகள் துன்பமோ இன்பமோ விடியும் பொழுதில் நாம் இருப்போமா இல்லையா என்றநிலை கூட எம்மில் பலருக்குத் தெரியாது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் காலத்தினை மிகப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வுடைய பிடி கடுமையானது. அது எம்மை வந்தடையும் முன் அதற்காக நாம் தயாராக வேண்டும். சந்தர்ப்பங்கள் எப்போதும் எமக்கு அமைவதில்லை. தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வு நாட்களும் இந்த சந்தர்ப்பங்களை ஒரு நல்ல விடயங்களை செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்.

வைரஸ் பரவல் காரணமாக எத்தனையோ கூலித் தொழிலாளிகள் தங்களுடைய வீடுகளில் முடங்கி காணப்படுகின்றர். அவர்களுடைய அன்றாட உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை வழங்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

Rahna Binth Mahnathur Rahman

இன்று பல இளைஞர் யுவதிகளின் நிலை மன வேதனை தரும் ஒன்றாக மாறிவிட்டது.வானில் ஒரு காகம் பறந்தால் கூட இன்று அவர்களின் whatsapp, facebook status ஆக மாறிவிடும். அது போலவே இந்த corona…

இன்று பல இளைஞர் யுவதிகளின் நிலை மன வேதனை தரும் ஒன்றாக மாறிவிட்டது.வானில் ஒரு காகம் பறந்தால் கூட இன்று அவர்களின் whatsapp, facebook status ஆக மாறிவிடும். அது போலவே இந்த corona…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *