நிகழ்வுகளுக்குப் பதில் கூறக் கற்றுக்கொள்வோம்!

  • 216

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (2 : 216)

மனிதன் தனது வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புக்களை வழங்குகிறான். உதாரணமாக: ஒரு இழப்பு நேர்ந்தால் கவலையினைப் பிரதிபலிக்கிறான். மேலும் வெகுமதிகளைப் பெறும் போது மகிழ்ச்சியடைகிறான். நிகழ்வுகளுக்கும் பிரதிபலிப்புகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது மனச்செயன்முறையாகும். நிகழ்வுகளுக்கான பதிலை மனம் வழங்குகிறது. அதனால் தான் மனித நடத்தையில் அது பிரதிபலிக்கப்படுகிறது. உதாரணமாக : நெருங்கிய ஒரு உறவு மரணித்தால் ; மனம் , “உன் மீது அன்பு செலுத்தியவர் உன்னை விட்டுச் சென்று விட்டார்” என்று பதிலளிப்பதனால் தான் கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. நிகழ்வுகளை மாற்ற முடியாது. ஆனால் நாம் நிகழ்வுகளுக்கு வழங்கும் பதிலை மாற்றினால், அதற்கான பிரதிபலிப்புக்கள் வினைத்திறனாக அமையும். இது உளவியல் கருத்தியலாளரான அல்ப்ஃரட் பண்டூரா முன்வைத்த சமூக உளவியல் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாகும்.

நமக்கும் அனைத்து நிகழ்வுகளும் நடந்த வண்ணமே உள்ளன. அது இறைவனது நாட்டம். அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இழப்புகளும் – துயரங்களும், வெற்றிகளும் – தோல்விகளும், சாதனைகளும் – சோதனைகளும் தினம் தினம் நம்மைக் கடந்து செல்வது உலக நியதி. ஆனால் நாம் அவற்றுக்குக் கொடுக்கும் பதில் ஆரோக்கியமானதாக இல்லாத போதே நமது உள்ளத்தில் அனாவசியமான துயரங்களும், பீதிகளும் , சோகங்களும் இழையோடுகின்றன. இதனால் மனிதனது நடத்தையிலும் மனதிலும் பிறழ்வுகள் ஏற்பட்டு, மனிதன் மனநோய்களுக்கு ஆளாகின்றான்.

இறைவனால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளுக்கு சரி – பிழை, நல்லது – கெட்டது என்று பதிலளிப்பதற்கு இஸ்லாம் வழிகாட்டவில்லை. மனித மனங்களால் நிகழ்வுகளை மதிப்பிட முடியாது என்கிறது இஸ்லாம்.

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (2 : 216)

இவ்வசனத்தின் படி ;
  1. உங்கள் மனம் வெறுப்பவை, வெறுப்புக்குரியவை அல்ல!
  2. உங்கள் மனம் விரும்புபவை, விருப்பத்திற்குரியவை அல்ல!
  3. உங்கள் மனம் ஆசைப்படுபவை, ஆசைக்குரியவை அல்ல!
  4. உங்கள் மனம் வருந்துபவை, வருத்தத்துக்குரியவை அல்ல!
  5. நிகழ்வுகள் , செயற்பாடுகள் அனைத்திற்குமான பெறுமானத்தை இறைவனே அறிவான்.

“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே (நாட்டத்தின்படி) படைத்திருக்கின்றோம்.” (54 : 49)

அனைத்து நிகழ்வுகளும் இறைவனின் நாட்டத்தின்படியே இடம்பெறுகின்றன என்ற மனப்பாங்குடன் செயல்படுவதற்கான வழிமுறைகளை , இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு முஸ்லிம் நிகழ்வுகளுக்குப் பதில் கூறும் போது உடைந்து போக வேண்டிய அவசியமில்லை. துவண்டு போக வேண்டியதுமில்லை. நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் போது சிந்தனையுடன் செயல்படுவோம்! வினைத்திறனான பிரதிபலிப்புகளை உருவாக்குவோம்!

Fazlan A Cader (B.A)R
Motivator & psychological Counsellor

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.”…

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.”…

14 thoughts on “நிகழ்வுகளுக்குப் பதில் கூறக் கற்றுக்கொள்வோம்!

  1. Pretty nice post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!

  2. It’s a shame you don’t have a donate button! I’d most certainly donate to this brilliant blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to brand new updates and will talk about this blog with my Facebook group. Chat soon!

  3. After looking into a few of the blog articles on your web site, I honestly like your way of blogging. I saved it to my bookmark site list and will be checking back soon. Please check out my web site as well and let me know what you think.

  4. Does your website have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it expand over time.

  5. Hi there! Would you mind if I share your blog with my facebook group? There’s a lot of people that I think would really enjoy your content. Please let me know. Thanks

  6. I was wondering if you ever considered changing the layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *