துயரம் களைந்திடுங்கள் !

  • 13

உலகையே உலுக்கிய
கோரக் கொரோனா!
அதன் கொடுமையோ
மிகக் கொடுமை!

சீனாவில் தோன்றி
வீனாய் வந்ததிங்கே
இலங்கை எம் தாயகத்திற்கு!
இருக்கும் உயிர்களை பறிப்பதற்கு!

மனிதனின் அறிவீனம்
இயற்கைக்கான ஆப்பு!
இயற்கை தந்ததோ
ஒன்றல்ல இரண்டல்ல
இழப்புக்கள் ஏராளம்!!

இதனை மனிதனும்
தனக்கமைத்த சாதகம்
சாதி மத இனவாத பெறும்
இரும்பு முத்திரை!

திரைக்குப் பின்னாலோ
அருவருப்பான அவலம்
வெடிப்பின் விம்பங்கள்
விளம்பர இடைவேளையிலே!

கொரோனாவின் கோரம்
உறவுகளைப் பிரித்திடும்!
உயிரையும் பறித்திடும்!
உடலையும் எரித்திடும்!
ஓ… மக்களே கவனம்!!
மிகக் கவனம்!!!
தூரம் பேணிடுங்கள் !
துயரம் களைந்திடுங்கள் !

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
(SLPS-2)
பஸ்யால

உலகையே உலுக்கிய கோரக் கொரோனா! அதன் கொடுமையோ மிகக் கொடுமை! சீனாவில் தோன்றி வீனாய் வந்ததிங்கே இலங்கை எம் தாயகத்திற்கு! இருக்கும் உயிர்களை பறிப்பதற்கு! மனிதனின் அறிவீனம் இயற்கைக்கான ஆப்பு! இயற்கை தந்ததோ ஒன்றல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *