சோதனைகளின் போது இஸ்லாம் கூறும் போதனைகள்

  • 251

உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கி பயணிக்கிறது. மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதியும், பதட்டமும் அதிகரித்து வருகின்றது. உலகையே அடக்கி, ஆள நினைத்த, வல்லரசுகள் கூட அமைதி பெற்றன. உலகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றதென வெளியுலகத்திற்கு அவர்கள் படம் பிடித்துக் காட்டினாலும், அந்தரங்கம் என்னவெனில், உலகமே பாரிய வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வளவு கண்டுபிடிப்புகள், நவீன ரக இயந்திரங்கள் இருந்தும்கூட உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி நோய்க்கு முன்னால் அனைவரும் தலைகுனிய நேரிட்டது. அதற்கு எதிராக கைநீட்டக் கிடைக்கவில்லை! அவர்கள் இச்சோதனைக்கு முன்னாள் நடுநடுங்கிப் போய் விட்டார்கள்.

தற்போது நாம் அனைவரும் ஒருவகை பீதியில் உள்ளோம் எதிர்வரும் நாட்கள் எப்படி அமையப் போகிறது? என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் அகப்பட்டிருக்கும் நாம், இறை விசுவாசிகள் என்ற வகையில் என்ன செய்யவேண்டும்…? எமது எண்ணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..? இஸ்லாம் எமக்கு சோதனைகளின் போது கூறிய போதனைகள் எவை…? என்பது பற்றி சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

சகோதரர்களே! உலகை எவர் ஆட்சி செய்ய நினைத்த போதிலும், எவ்வகையான சோதனைகள், வேதனைகள், நோய்கள் வந்தபோதிலும், கால சுழற்சிக்கு ஏற்ப கெடுதிகள் எம்மை தொட்ட போதிலும், அவைகள் அனைத்தும் எம்மை படைத்த இறைவன் புறத்திலிருந்து வந்தன’ என்று ஏற்றுக் கொள்வது எமது ஈமானிய பண்பாகும். அகிலத்தை ஆளுகின்ற அருளாளன் அல்லாஹ்வின் அருள் இன்றி அணுவும் அசையாது. இதுவே அவனைப் பற்றியுள்ள எமது இறை விசுவாசமாகும். அல்லாஹ்வின் தூதர் எமக்கு கற்றுத்தந்த ஈமானியப் பாடமாகும். இதையும் மீறி இறைவனை மறந்து எமது அகீதாவை எதிர்த்து எரிகின்ற வார்த்தைப் பிரயோகங்களை பேசிக் கொண்டு, வாழ்கின்ற ஒரு கூட்டம் எம்முடன் இருக்கத்தான் செய்கின்றனர்.

சோதனைகள் எம்மை சீர்திருத்திக் கொள்வதற்கே….! அழிப்பதற்கல்ல… !

அல்லாஹ்வை விசுவாசம் கொண்டவர்கள் சோதனைகளுக்கு முன்னால் மனமுடைந்து போக மாட்டார்கள் ஏனெனில், சோதனைகளை உருவாக்குபவன் இறைவனே என்பது பற்றியுள்ள அறிவு அவர்களிடம் இருக்கிறது. அவ்வப்போது அவர்களுக்கு ஏற்படுகின்ற சோதனைகளை அழகாக அணுகவும் தெரியும். ஆனால் எம்மில் அனேகர் சோதனைகளின் போது இறை நிராகரிப்பிற்ககுரிய வார்த்தைகளைக் கூறி, தோல்வி அடைவதை பார்க்கிறோம்.

நண்பர்களே! சில சந்தர்ப்பங்களில் சோதனைகளின் பின்பு மனிதன் சீர்திருத்த வாய்ப்புண்டு தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளில் பொடுபோக்கு உள்ளவர்கள் சோதனைகளுக்குப் பிறகு கடமைகளை முறையாக நிறைவேற்ற காலம் பிறக்கலாம். இன்னும் சிலர் வாழ்நாளில் இறைவனுக்கு முன்னால் பிரார்த்தனை செய்தது கிடையாது! சோதனைகளுக்கு பின்பு அவர்கள் அல்லாஹ்வை அழைத்து, அழுது புலம்பலாம். எனவே மனிதனுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பொருளாதாரத்தில் வீழ்ச்சி, வியாபாரத்தில் பின்னடைவு போன்றன இறைவனின் பால் மீள்வதற்கேயாகும். இதுபற்றியே பின்வரும் இறை வசனம் கூறுகிறது.

وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏

32:21. மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.

மனிதன் செய்த குற்றத்திலிருந்து தௌபா செய்து மீள வேண்டும் என்பதற்காக, இறைவனிடம் நெருங்குவற்காகவே இவைகளை அவன் உண்டு பண்ணுகின்றான். ஓர் அரபு நாட்டுப் புலவர் இவ்வாறு பாடுகின்றார்.

قال أبوتمام :
قدْ ينعمُ اللهُ بالبلوى وإنْ عظمتْ

ويَبْتَلي اللَّه بعضَ القَوْم بالنعَمِ

பொருள் : சிலவேளை அல்லாஹ் பெரும் சோதனைகளினால், ஒரு சமூகத்தாருக்கு அருள் செய்யக்கூடும்! இன்னும் சிலபோது அவன் அவனது அருட்கொடைகளினால், மற்றுமொரு கூட்டத்தாரை சோதிக்கலாம்.

மேற்படி அரேபிய கவிஞர் பாடியது போன்று சோதனைகள் அருளாக மாறலாம். அவனது அருள் சோதனையாகும் மாறலாம். சிலரின் மரணம் இன்னும் சிலரின் நல்வாழ்விற்கு காரணமாகிவிடுகிறது. அல்லாஹ்வின் அச்சமின்றி வாழ்ந்தவர் தனது குழந்தையின் உயிரிழப்பை அடுத்து இறை பக்தியுள்ள மனிதராக மாறுகின்றார். ஆகவே, வாழ் நாட்களில் முகம் கொடுக்கின்ற சோதனைகள் எம்மை நெறிப்படுத்த வந்தன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது இதனூடாக அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கற்றுத்தந்து அருமையான பிரார்த்தனையை பின்வருமாறு பார்க்கலாம்.

‫اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا.‬
~ (رواه الترمذي)

பொருள்: இறைவனே! எங்களுக்கும் உனக்கு நாங்கள் மாறு செய்வதும் இடையே அத்தகைய சத்தையும் உன்னுடைய சுவர்க்கத்தை அடைய செய்யுமே அத்தகைய உன்னுடைய வழிபாட்டையும் உலகத் துன்பங்களை, கஷ்டங்களை எங்களுக்கு இலேசாக்கி வைக்குமே அத்தகைய உறுதிப்பாட்டையும் எங்களுக்கு பங்கிட்டுக் தந்தருள்வாயாக…! எங்களை உலகில் நீ வாழச் செய்யும் காலமெல்லாம் எங்களுடைய செவிகளின் மூலமாகவும் எங்களுடைய கண்களின் மூலமாகவும் எங்களுடைய சக்தியின் மூலமாகவும் எங்களை சுகம் பெறச் செய்வாயாக! எங்களிலிருந்து அதற்கு வாரிசெய்யும் ஏற்படுத்துவாயாக! எங்களுடைய பழிவாங்குதலை எங்களுக்கு அநியாயம் செய்தவரின் மீது நீ ஆக்குவாயாக! எங்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! எங்களுடைய துன்பத்தை எங்கள் தீனில் மார்க்கத்தில் நீ ஆக்கிவிடாதே! உலகத்தை எங்களுடைய பெரும் கவலையாகவும் எங்களுடைய அறிவின் நோக்கமாகும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இறக்கம் காட்டாத வரை எங்கள் மீது அதிகாரியாக சாட்டி விடாதே!

இப் பிரார்த்தனையில் உலகினுடைய சோதனைகளை இறைவன், இலேசாக்கி வைப்பான் என்கின்ற அளவிற்கு உறுதிப்பாடு வேண்டும்! இறைவன் கொடுத்த பிரச்சினையை அவனே, இலகு படுத்துவான், என்ற நம்பிக்கை வேண்டும்!

எமக்குரிய சோதனைகள் தீனில் வந்துவிடக்கூடாது! அதுவே உலகில் மிகப் பெரும் சோதனையாகும்.சில நேரங்களில், நான் நன்றாக தொழுகின்றேன், மார்க்கக் கடமைகளை முறையாக செய்கின்றேன். பாவத்தில் நான் ஈடுபடாதவனாக காலத்தை கழிக்கின்றேன். ஆனால், எனக்கு பல வகையிலும் பிரச்சினைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. என்று நினைக்கின்றோம்.

இந்த எண்ணம் தவறானது. இப்போதுதான் சைத்தானுக்கு இடம் கிடைத்துவிடுகிறது .இதுபோன்ற நிலை உண்டாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்து அந்த பிரார்த்தனையில் , தீனிலே சோதனைகளை கொடுத்து விடாதே! என்று எமக்கு பிரார்திக்க கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே சோதிக்கப் பட்டார்கள். அபூலஹப் அவனுடைய இரு மகன்களான உதுபா – ருக்கையா ரழி அவர்களையும், உதைபா – உம்மு குல்தூம் ரழி அவர்களையும் திருமணம் முடித்தனர். நபி ஸல் அவர்கள் தபித்துவம் கிடைத்து, நான்காம் ஆண்டு அல்லாஹ்வின் அழைப்பு பணியை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்கள். அப்போது அபூலஹப் அவனது மனைவி இருவரின் வேண்டுகோளுக்கிணங்க உன்னுடைய இரு மகள்களையும் விவாகரத்து செய்யுங்கள் எனக்கூற உடனடியாக ருக்கையா (ரழி), உம்மு குல்தூம் (ரழி) இருவருமே விவாகரத்து பெற்று வீடு திரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதருடைய இரு மகள்களும் ஒரே நேரத்தில் விவாகரத்து பெற்று வீடு திரும்பியது பெரும் சோதனையாக அமைந்தது. ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உள்ளத்தால் உடைந்து போகவில்லை! அல்லாஹ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள். இது நபிகளாரின் வாழ்க்கையில் எமக்கு இருக்குபெரும் பாடமாகும்.

இறைத்தூதரின் வாழ்க்கையில் சகித்துக்கொள்ள முடியாத இன்னுமொரு சோதனைகளில் ஒன்றுதான் தனது அன்பு மனைவியின் விடயத்தில் விபச்சாரம் செய்ததாக இட்டுக் கட்டப்பட்டதாகும். , அப்போதும் அச் சோதனையை அழகாக அணுகினார்கள். அல்லாஹ் அவர்களை மென்மேலும் உயர்த்தினான். அண்ணாரின் குடும்பத்தையும் கௌரவப் படுத்தினான். இவ்வாறு சோதனைகள் அனைத்திற்கும் தைரியமாக முகம் கொடுத்து அனைத்திலும் வெற்றி பெற்றார்கள். அன்னாரின் சோதனைகள் சாதனைகளாக மாறின. அவைகளை இப்போது, நாம் போதனைகளாக பார்க்க வேண்டும்! படிக்கவேண்டும்! படிப்பினை பெறவேண்டும்!

நபித்தோழர்களும், பல போது சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள்.

இன்று உலகம் முகம் கொடுத்துள்ள ஆட்கொல்லி நோயான “கொரோனா வைரஸ்” போன்றே அன்று வரலாற்றில் பதியப்பட்ட பெரும் சோதனைகள் ஒன்றுதான், அமவாஸ் என்றழைக்கப்படுகின்ற கொலரா நோயாகும். இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது.

‘அமவாஸ்’ என்பது பலஸ்தீனின் ஜெரூஸலம் நகருக்கும், இஸ்ரேலின் ரமல்லா நகருக்குமிடையிலுள்ள குக்கிராமம் ஒன்றின் பெயராகும். ‘கொலரா’ (கொள்ளை நோய்) எனும் உயிர்க்கொல்லி வாந்திபேதி நோய் அக்கிராமத்தில் முதன்முதலாக அப்போது தோன்றியதால் அக்கிராமத்தின் பெயரைக்கொண்டு அதற்கு ‘அமவாஸ் கொலரா’ என்று வரலாற்றில் பதிவானது. பின்னர் இந்நோய், ‘அம்வாஸ்’ கிராமத்திலிருந்து ‘ஷாம்’ பிரதேசத்திற்குள் (இன்றைய சிரியா, துருக்கி, பலஸ்தீன், ஈராக், லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குள்) பரவியது.

இந்நோய் 25,000 முஸ்லிம்களை காவுகொண்டது. முஆத் பின் ஜபல் (ரழி), அபூ உபைதா (ரழி), யஸீத் பின் அபீ சுப்யான் (ரழி) போன்ற சிறப்புமிகு நபித்தோழர்களும் மரணித்தார்கள். [நூல்: ‘அல்பிbதாயா வந்நிஹாயா’, 19/76 ]

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘ஷாம் நாட்டிற்குப் போகலாமா?’ என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள். அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து விரண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன்’ என்று கூறினார்கள். (சுருக்கம்) (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5729).

உமர் ரலி அவர்கள் அவர்களுடைய காலத்தில் இடம்பெற்ற இச் சம்பவம் சமூக தனிமைப்படுத்தலை அரசியல் தலைவராக அவர்கள் கடைப் பிடிக்க முற்பட்டபோது சிலர் இது கழாகத்ருக்கு முரணானது என்றும் அல்லாஹ்வின் கத்ர் எனும் ஏற்பாட்டை விட்டு விரண்டோடும் செயற்பாடு என்று விமர்சித்த போது நோய் ஏற்படுவது ஒரு ஏற்பாடு என்றால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது மற்றும் ஒரு ஏற்பாடு என்று விடையளித்து தொற்று ஏற்பட்ட இடத்திற்கு செல்வதை விட்டும் தன்னையும் சமூகத்தையும் தனிமைப்படுத்தி, தற்காத்துக் கொண்டார்கள்.

தனிமைப்படுத்தல் என்பது இஸ்லாத்தின் பார்வையில் இன்று, நேற்று உருவானதல்ல! அப்போதே அபாயகரமான நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாக்க, தனிமைப்படுத்தலை அல்லது, தற்பாதுகாப்பை பற்றி இஸ்லாம் பேசி விட்டது.

உமர் (ரழி) அவர்களின் இந்த செயற்பாட்டை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சுன்னாவை சரியாக நீங்கள் செய்தீர்கள் என பாராட்டினார்கள்.

உமர் ரலி அவர்கள் எமது வாழ்க்கையில் படிக்கவேண்டிய நல்ல, பல பாடங்களை கற்றுத் தந்துள்ளார்கள். எமக்கெல்லாம் ஒருநாள் மரணம் இருக்கின்றது. யாருக்கும் ஓடி ஒழிக்க முடியாது! மரணத்தை விட்டு மறைய முடியாது! அதற்காக, தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறவுமில்லை. அப்படியென்றால் உமர் (ரலி) யும், நபித்தோழர்களும் அமவாஸ் என்ற ஊருக்குள் புகுந்திருப்பார்கள். ஆனால் விடயத்தை தோழர்களுக்கு புரிய வைத்தார்கள் அல்லாஹ்வின் விதியை பற்றிய பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

சோதனைகளால் பீடிக்கப்பட்டோரை வேறு காரணம் கூறி, தூற்றாதீர்கள்!

சோதனைகள் பாவிகளுக்கு மாத்திரமே உண்டாகும் என சிலர் நினைக்கின்றனர்.அவ்வாறல்ல நல்லவர்களும் இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டில் உருவெடுத்த அந்த உயிர்க்கொல்லி நோயான طاعون عمواس அமவாஸ் என்றழைக்கப்படுகின்ற கொலரா நோயினால் பல சஹாபாக்கள் உயிரிழந்தார்கள்.

சமூக வலைத்தளங்களில் எமது இளைஞர்கள் கற்றவர்கள், கல்லாதவர்கள் யாவரும், கருத்துப்பரிமாற்றம் செய்வதை அவதானிக்க முடிகிறது. சீனா முஸ்லிம்களுக்கு அநியாயம் அட்டூழியம் செய்ததன் பிற்பாடு இவ்வாறான உயிர்க்கொல்லி நோய் உருவாகக் காரணம் என தீர்ப்பு கொடுத்து விடுகின்றனர். மேலும் குறித்த நாடுகளை மேற்கோள்காட்டி விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சிறியவர், பெரியவர், முதியவர் வேறுபாடின்றி சகலரும் forward பண்ணுகின்றனர் கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தாமல் நம்பகத்தன்மை புரியாமல் பிறருக்கு அவைகளை அப்படியே அனுப்பிவிடுகிறோம். சமூக வலைத்தளங்களின் ஊடாக எவ்வளவோ பாவங்களை சம்பாதிக்கிறோம். சில ஊடகவியலாளர்களும் கூட, ஊடக தர்மத்தை மறந்து செய்யப்படுகின்றனர். அவ்வூடகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

மேற் கூறுகின்ற திருவசனம் இறைவிசுவாசிகளை நோக்கியே விழிக்கின்றது. இப்போது எமக்கு ஆதாரமற்ற செய்திகள், இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறுகின்ற போது அப்போதே அதை அலசி ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.இது பற்றி இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறியதாவது

وعن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ أن النبي ﷺ قال: (كفى بالمرء كذباً أن يحدث بكل ما سمع) رَوَاهُ مُسْلِمٌ.

பொருள்; ஒரு மனிதன் செவியால், கேட்பதெல்லாம் பேசுவது , அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமானதாகும். (நூல் ; முஸ்லிம்)

எனவே இந்த சோதனைகளின் போது நான் நாவை பேணிப் பாதுகாத்து, கேட்பதையெல்லாம் பேசிவிடாமல், எழுத்துருவாக்கி விடாமல், நோயினால் வாடுபவர்களுக்கு தேக ஆரோக்கியத்தை வேண்டி இறைவனைப் பிரார்த்திப்போம். உண்மையில் எமது மார்க்கம் பிறர் பிறருடைய கஷ்ட நஷ்டங்கள் பங்கு கொள்கின்ற மார்க்கம். அது எதிரியாக இருந்தாலும் அவர்களின் துன்பத்தில் துயரத்தில் இணைந்து கொள்ளும் மார்க்கம். சோதனைகளின் போது பொறுமை, செல்வ செழிப்பின் போது நன்றி, ஒரு இறை விசுவாசியிடம் இருக்கவேண்டிய சிறந்த பண்பாகும்.

சோதனைகள் வேதனைகள் எக்கோணத்தில் வந்தாலும், அல்லாஹ்வின் விதியை ஏற்றுக் கொண்டு, பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! அல்லாஹ்விடமே நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்க வேண்டும்! உண்மையில், இறைவன் நமக்களித்துள்ள அருட்கொடைகள் ஏராளம், தாராளம். ஆனால், அவைகளை மறந்து நன்றி கெட்டுப் போய் இறை நிராகரிப்பு சார்ந்த சொற்களை, உபயோகித்து விடுகின்றோம் அல்லது அது சார்ந்த எண்ணங்களை வரவழைத்துக் கொள்கிறோம். கஷ்டங்களின் போதும் செல்வ செழிப்பின் போதும் அவனது அருட்கொடைகளை முன்வைத்தே நன்றி செலுத்துகின்ற சமூகமாக மாற முயற்சிப்போமாக!

யா அல்லாஹ்! எங்களுக்கு தாங்கமுடியாத சோதனை தந்து, எங்களை சோதித்து விடாதே! நாம் செய்த குற்றத்திலிருந்து முழுமையாக மீண்டு விடுகின்றோம். எங்களின் பாவத்தால் எம்மை குற்றம் பிடித்து விடாதே! இந்த ஆபத்தான நோயிலிருந்து எங்கள் சமூகத்தை பாதுகாத்து விடுவாயாக! முழு உலகத்திலும் யாரெல்லாம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாயும் அருள்வாயாக! எம் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றியை தந்தருள்வாயாக.!

முப்தி யூஸுப் ஹனீபா
தொகுப்பு – அஷ்ஷெய்க் அப்துல் வாஜித்( இனாமி)

 

உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கி பயணிக்கிறது. மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதியும், பதட்டமும் அதிகரித்து வருகின்றது. உலகையே அடக்கி, ஆள நினைத்த, வல்லரசுகள் கூட அமைதி பெற்றன. உலகம் வளர்ச்சிப் பாதையில்…

உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கி பயணிக்கிறது. மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதியும், பதட்டமும் அதிகரித்து வருகின்றது. உலகையே அடக்கி, ஆள நினைத்த, வல்லரசுகள் கூட அமைதி பெற்றன. உலகம் வளர்ச்சிப் பாதையில்…

14 thoughts on “சோதனைகளின் போது இஸ்லாம் கூறும் போதனைகள்

  1. Good way of explaining, and nice piece of writing to take information regarding my presentation subject, which i am going to deliver in college.

  2. Howdy! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website goes over a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you are interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Terrific blog by the way!

  3. Hi there just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same results.

  4. Thank you a bunch for sharing this with all folks you really recognize what you are talking approximately! Bookmarked. Please also talk over with my web site =). We could have a link trade agreement among us

  5. Hello there! I just would like to give you a huge thumbs up for the great info you have here on this post. I’ll be coming back to your website for more soon.

  6. What i do not realize is actually how you’re not really a lot more smartly-appreciated than you may be right now. You are so intelligent. You realize therefore significantly on the subject of this topic, produced me in my opinion believe it from so many various angles. Its like men and women aren’t interested unless it’s something to accomplish with Woman gaga! Your personal stuffs nice. All the time maintain it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *