புகைப்பிடிப்பவர்களே! இப்பொழுதுமா?

  • 9

ஏழைகள் சாப்பிடுவதற்கு வழியில்லாத காலத்தில் கூட, புகைப்பிடிப்பவர்களை Corona அதிகம் தாக்குவதாக அறிக்கை வந்திருந்தும் கூட, புகைப்பிடிப்பவர்கள் Smoke ஐ விடாது பணத்தை வீணடித்து, எரித்து தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்கின்றர்.

ஏன் இந்த முக்கியத்துவம்? ஐங்காலத் தொழுகை கடமை என்பது பொன்றல்லவா புகைப்பிடிப்பாளர்கள் சிகரெட்டில் வைத்திருக்கும் பற்றும் கடமையும் இருக்கின்றன! அழிவை தமக்குத் தாமே தம் கரங்களால் தேடுபவர்கள் உலகில் இருப்பார்கள் எனில் அதிகம் புகைப்பிடிப்பாளர்களைத் தான் சுட்டிக்காட்ட முடியும்!

நெருப்பை அள்ளி வாயில் போட்டு விழுங்குவதும் ஒன்று தான் கொஞ்சம் கொஞ்சமாக புகைத்து புகைத்து கங்கை உரிவதும் ஒன்று தான். உடம்புக்கும் கேடு, பணத்திற்கும் கேடு! எவ்வித ஆரோக்கியத்தை ஏற்படுத்தாத ஒன்றுக்காக வியர்வை சிந்தி உழைத்த பணங்கள் வீணாக எரிந்து சாம்பலாகுவது தான் வியப்பாகவுள்ளது.

உடலுக்கு கேடு விளைவிக்கும் புகைத்தல் ஹராம்! பணத்தை வீண் விரயம் செய்வதும் ஹராம்! இரண்டு பாவங்களான ஹராம்களை ஒருக்கே செய்துவிட்டு நல்லவர்களாக குடும்பத்திலும் சமூகத்திலும் வலம் வருவது மிகக் கேவலான செயலாகும்.

அனைவரும் மறுமையில் உழைத்தவை, செலவழித்த முறை என்பவை கேள்வி கணக்காக கேட்கப்பட்டு விடையளிக்கும் வரை நகர முடியாத நிலை ஏற்படும் என்பதை கவனத்திற் கொண்டு செயற்படுவோம்.

திருந்துவதற்கான சந்தர்ப்பம் இருக்கும் போது, காலத்தை தாமப்படுத்தாது இப்பொழுதே புகைத்தலை கைவிட்டு, தௌபா செய்து நல்லடியார்களாக வாழ முயல்வதே ஏற்புடையதாகும்.

நட்புடன்
Azhan Haneefa

Monetize your website traffic with yX Media

ஏழைகள் சாப்பிடுவதற்கு வழியில்லாத காலத்தில் கூட, புகைப்பிடிப்பவர்களை Corona அதிகம் தாக்குவதாக அறிக்கை வந்திருந்தும் கூட, புகைப்பிடிப்பவர்கள் Smoke ஐ விடாது பணத்தை வீணடித்து, எரித்து தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்கின்றர். ஏன் இந்த…

ஏழைகள் சாப்பிடுவதற்கு வழியில்லாத காலத்தில் கூட, புகைப்பிடிப்பவர்களை Corona அதிகம் தாக்குவதாக அறிக்கை வந்திருந்தும் கூட, புகைப்பிடிப்பவர்கள் Smoke ஐ விடாது பணத்தை வீணடித்து, எரித்து தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்கின்றர். ஏன் இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *