யார் தவறு

  • 14

எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன்…பிஸ்மில்லாஹ்…
புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே… அல்ஹம்துலில்லாஹ்…

கொரோனா எம் நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்டம் காட்ட அங்குலம் கூட அசைய முடியாமல் அடிக்கணக்கில் தூரம் பேணி அமைதியான நிலையில் ஊரும் சமூகமும் இருக்க உள்ளமோ உருக்கிய இரும்பு போல் கொதித்தெழுகிறதாம் எம் சமூகத்திற்கு, இனவாதம் தலைதூக்கி உள்ளதாகவும் ஆட்டிப்படைக்கும் கொரோனாவை வைத்து அரசியல் செய்வதாகவும் மரணித்த ஜடத்தை வைத்து இனவாதம் புரிவதாகவும் ஆங்காங்கே செய்திகள் பரவுகின்றன. உண்மையாகவும் இருக்கலாம் இல்லை பொய்யாகவும் இருக்கலாம் அல்லாஹ் அறிந்தவன். எனினும் நான் தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரு விடயம் தான் இனவாதத்திற்கு வித்திடுபவர்கள் நாங்கள் என்பதை. இதை யாராலும் மறுக்கமுடியாது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் முடிந்து ஒரு வருடம் முடவடையப்போகிறது ஆப்சிபீடமேறிய கட்சி கூட இன்னும் பிரதான குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கவில்லை.

அதற்குள் இந்த கொரோனா. இலங்கையின் அரசியல் இனவாதம் மையபடுத்தியதோ இல்லையோ, ஆனால் தற்போது இனவாதம் தலைதூக்குவதாக கூறுகின்றனர். சரி, இதற்கு பிரதான இரு ஊடகங்கள் துனைபோவதாகவும் பேசுகின்றனர். இதைத்தான் கடந்தவருடமும் செய்தனர். சரி ஹிரு, தெரன ஊடகங்கள் துனைபோவதாக கூறுவதற்கு சாட்சி கேட்டால் முஸ்லிம்களது பிழையை மட்டும் காட்டுகிறார்கள் என்கிறார்கள். முஸ்லிம்கள் தவறு செய்தால் காட்ட தான் செய்வார்கள். அது இனவாதமா?? ஏனைய மக்கள் செய்வதை காட்டுவதில்லையாம். ஆம் காட்ட மாட்டார்கள். சற்று நடுநிலைமையாக சிந்திக்கவும் உள்ளத்திற்கு என் வாதம் புரியும்.

முஸ்லிமாகிய நாம் எமது ஒரு நிறுவனத்திற்கு வேலை ஆள் எடுப்பதற்கே முஸ்லிம் ஒருவருக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். இவ்வளவு ஏன் எம் ஊரில் அதிலும் முஸ்லிம்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் நடக்கும் எத்தனையோ பிரச்சனைகளை மஸ்ஜித் நிர்வாகம் தலையிட்டு அதை தீர்த்து பிறசமூகத்திற்கு மத்தியில் எம் சமூக மானத்தை காப்பது இனவாதமா? இதைத்தான் அவ்வூடகங்கள் செய்கின்றன. இவ்வளவு இனவாதம் பற்றி பேசும் உங்களிடம் ஒரு கேள்வி. முஸ்லிம்கள் செரிவாக வாழும் ஒரு பிரதேசத்தில் ஒருவன் அதுவும் முஸ்லிமல்லாதவன் வந்து குழப்பம் செய்தால் அவனது உயிருக்கு உத்தரவாதம் உண்டா? இல்லை. ஏன் அங்கு மனிதத்தன்மையை விட இனவாதம் தானே தலை தூக்குகிறது.

இவ்வாறு இரு தரப்பும் புரிந்துகொள்வதில் தான் இனவாதம் ஒழியுமே தவிர முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் அல்லாஹ்வை மறந்த கருத்துக்களை பரப்புவதால் அல்ல. நான் மிக வேதனையுடன் கூறுகிறேன். முகநூலில் கொந்தளிப்பவர்களே. நீங்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் செரிவாக வாழும் பிரதேசத்தை சேர்ந்தவராகதான் இருப்பீர்கள். ஷரீஆ துறை மாணவன் என்ற வகையிலே நான் இருக்கும் ஊர் பௌத்த பெரும்பான்மையை கொண்டது.

அண்மையில் என் உடல்நல தேவைக்காக எமது ஊர் வைத்தியசாலைக்கு சென்றேன். அங்கு பெயரை கேட்டதுமே முஸ்லிம் என்று புரிந்து கொண்டார்கள். அவ்வாறு அறிந்தும் அவர்கள் நான் வைத்தியசாலையில் இருந்த இரண்டு நாட்களும் எனக்கு செய்த பணி போதும் அவர்கள் மத்தியில் இனவாதம் இல்லை என்பதை திரும்பவும் சொல்கிறேன். நாம் முஸ்லிம்கள் ஆனால் இது பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. நாம் விட்டுக்கொடுத்தாலே அவர்களும் விட்டுத்தருவார்கள்.

இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவிரும்புகிறேன். சென்ற வருடம் முதல் இனவாத ஊடகம் என வாய்கிழிய பேசி நீங்கள் சாதித்தது என்ன? முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் தேவை என்று குரலெலுப்பியவர்களே எங்கே அந்த ஊடகத்தை உருவாக்க நீங்கள் செய்த பங்களிப்பென்ன? முகநூலில் பிரபல்யத்திற்காக கருத்து பதிவது ஒரு உண்மை முஸ்லிமின் குணமல்ல. எம் சமூக எத்தனை இளைஞர்கள் யுவதிகள் ஊடக துறையில் ஆர்வமிருந்தும் இன்னும் உரிய வாய்ப்பின்றி திண்டாடுகின்றனர்.

அன்று தனி முஸ்லிம் ஊடகம் தேவை என குரல் கொடுத்தவர்கள் சற்று முயற்சித்து வளமான ஊடகத்திற்கு அடித்தளமிடவாவது முடிந்ததா? எதுவுமே செய்யாத எமக்கு என்ன தகுதி உள்ளது இனவாதத்தை தூண்டுகிறார்கள் என கூறுவதற்கு. இங்கு முஸ்லிம்கள் தான் இனவாதிகள் என குறிப்பிடவரவில்லை. எம் தரப்பு பிழைகளை நிவர்த்தி செய்து விட்டு அடுத்த சமூகத்திற்கு விரல் நீட்டுங்கள் என்கிறேன்.

யாவரும் மனிதரே. தவறுகள் இரு தரப்பிலும் நிகழலாம். மண்ணித்து பொறுத்து இறைவனிடம் வேண்டுமே தவிர பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என வீரவசனம் பேசுபவர்களை நம்பி சமூகத்தை காட்டி கொடுத்துவிடாதீர்.

பஸீம் இப்னு ரஸூல்
நிகவெரட்டிய.

எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன்…பிஸ்மில்லாஹ்… புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே… அல்ஹம்துலில்லாஹ்… கொரோனா எம் நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்டம் காட்ட அங்குலம் கூட அசைய முடியாமல் அடிக்கணக்கில் தூரம் பேணி…

எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன்…பிஸ்மில்லாஹ்… புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே… அல்ஹம்துலில்லாஹ்… கொரோனா எம் நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்டம் காட்ட அங்குலம் கூட அசைய முடியாமல் அடிக்கணக்கில் தூரம் பேணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *