பேனா முனை

  • 11

வாசிப்பெனும் போசனையை
வாசகர்கள் சுவைத்திடவே
வழங்கட்டும் களமதனை
வளமான-உன் பேனா முனை!

பல்நூறு எழுத்துக்களில்
பக்குவமான பாடம் பல
பயில்ந்திடவே பல்லுள்ளம்
பரவட்டும் -உன் பேனா முனை!

சந்தேகக் கணைகளை
களையட்டும்-உன் பேனா முனை!
சரித்திர வரலாற்றை
படைக்கட்டும்-உன் பேனா முனை!

தஃவாக் களமதிலே
தவழட்டும்-உன் பேனா முனை!
தடைகள் பல தாண்டியே
உயரட்டும்-உன் பேனா முனை!

சமூகத்தின் எழுச்சிக்காய்
சமாதான விடிவிற்காய்
சலிக்காமல் உழைக்கட்டும்
சரியான தருணமதில்

உள்ளக்கிடக்கைகளை
உரசிப் பார்க்கும்
ஆயுதமாய் மாறட்டும்
உன் பேனா முனை!
மாற்றம் பல காணட்டும்
உன் பேனா முனை!

அருளாளன் உனக்களித்த
மகத்தான அருளதனை
மதித்து நீ நோக்கியே
திரும்பிடு நீ
அடைந்திடவே
அவன் பொருத்தமதை!

J.Noorul Shifa
SEUSL

வாசிப்பெனும் போசனையை வாசகர்கள் சுவைத்திடவே வழங்கட்டும் களமதனை வளமான-உன் பேனா முனை! பல்நூறு எழுத்துக்களில் பக்குவமான பாடம் பல பயில்ந்திடவே பல்லுள்ளம் பரவட்டும் -உன் பேனா முனை! சந்தேகக் கணைகளை களையட்டும்-உன் பேனா முனை!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *