இபாதத்
- by admin
- 19
ஏனோ நாம் இன்னும் நெருங்க வில்லை
எல் அளவும் பயமில்லை
மறுமைக்கான தேடலும் இல்லை
முதுமையடையும் வரை
காத்திருப்பு எதற்கு
ஐவேளைத் தொழுகைக்கா
விரைந்து செல்வது எப்போது
கோரோனா வந்தும்
குர்ஆன் நம் கையில் இல்லை
அயல் வீட்டின் தேவை அறியாமல்
நாம் இருப்பது எப்படி
இபாதத் தோடு இணைந்திடுவோம்
இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்
உலகிற்கு வந்த நோக்கம் மறந்தோம்
உலகமே கதி என வாழ்ந்தோம்
மறதியில் மடிந்து கிடந்தோம்
மறுமைக்காக வாழ துணிவோம்
கைபேசியோடு கடந்து விடாது காலத்தை
இறைவனை நெருங்க முயற்சி செய்வோம்
முயற்சித்தால் முடியாதது
எதுவும் இல்லை
இபாதத் தோடு தொடர்வோம்
ஒவ்வொரு நொடியையும்
மறுமைக்கான வாழ்க்கை தேடி
கவிதை காதலன்
அக்குறணை லஷாட்
ஏனோ நாம் இன்னும் நெருங்க வில்லை எல் அளவும் பயமில்லை மறுமைக்கான தேடலும் இல்லை முதுமையடையும் வரை காத்திருப்பு எதற்கு ஐவேளைத் தொழுகைக்கா விரைந்து செல்வது எப்போது கோரோனா வந்தும் குர்ஆன் நம் கையில்…
ஏனோ நாம் இன்னும் நெருங்க வில்லை எல் அளவும் பயமில்லை மறுமைக்கான தேடலும் இல்லை முதுமையடையும் வரை காத்திருப்பு எதற்கு ஐவேளைத் தொழுகைக்கா விரைந்து செல்வது எப்போது கோரோனா வந்தும் குர்ஆன் நம் கையில்…