ஒரு தாயின் அறிவுரை

  • 10

கருவில் உரு காணாது
உன்னை சுமக்கும் என்னை
பொண்ணால் நீ அலங்கரிக்க வேண்டாம்

மாடி மனைவில் நீ குடியமர்த்த வேண்டாம்
மணி மாலையால் நீ மகுடம் சூட்ட வேண்டாம்

சான்றோர் என் மகனை உயர்ந்தோன்
என போற்ற சன்மார்க்க வழியில்
உன் செயல் காண்தலே என் குளிர்ச்சி

பற்பல குணங்களும் உன் பொற்பெயர் ஏந்த
தகாத குணங்கள் அத்தனையும் உன் வழி நீங்க
குர்ஆனை நெஞ்சில் எடுத்து செயல்களில்
இருப்பாட்டி இன்பம் காண் மகனே

உலகில் உனக்கான பொருள் தேடி
நான் போவேன்
கடலின் ஆழம் வரையும்
உனக்காக நான் மூழ்குவேன்

மூச்சுவரை பேச்சில் உண்மை பாய்ச்சிடு
முடிந்தவரை நீதத்தில் நீ நிலைத்திரு

முடியாது போனாலும் அநீதிய அனுகிடாதே
உள்ளமொன்று திடமாகிடுகையில்
வழி கெடுக்கவும் உன் வழி
மறிக்கவும் எவருமில்லை

பழிச் செயல் ஆகாது
அனுமதி என்றாலும்
அது வேண்டாம் மகனே
அறவழி ஒன்று போதும் உனக்கு

தலைக்கனம் தகாது
அடுத்த கணம் அழித்துவிடும் ஆயுதம் அது
பெருமை எதற்கு பொறுமை உண்டானால்
மறுமை உனக்கு மணக்கும் மகனே

கசடு கொண்டு மனதில்
கறை பதித்து கரை கடக்க நினையாதே
இறை நம்பிக்கையை விதைத்திடு மனதில்
விளைச்சல் கண்டிடுவாய் மறுமையில்

தொழுகை உண்டு உள்ளம் காக்க
மானம் பேன நோன்பு உண்டு
ஏழை வயிற்று புலம்பல் உணர
ஸக்காத் உண்டு பாவங்கள் கரைய
ஹஜ் உண்டு நன்மைகள் பல வேண்டி வர
பச்சைப் பாலகனாய் மீண்டு வர

மகனே துன்பங்களைக் கடந்து செல்ல தயங்கிடாதே
சிறாத்தல் முஸ்தகீம் உண்டு
நீ கடந்து செல்ல (மீசான்) தாராசு உண்டு
உன் செயல்கள் பிரித்தளக்க

மறுமை உண்டு உன் இருப்பிடம் நிர்ணயிக்க
மஹ்ஷர் உண்டு உன் அரசன் முன் ஆஜராக
வேறு என்ன வேண்டும் உலகில்
உனக்கு இறைவனன்றி

ஏரூர் நிலாத்தோழி
ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம்
ஏறாவூர்
இலங்கை


கருவில் உரு காணாது உன்னை சுமக்கும் என்னை பொண்ணால் நீ அலங்கரிக்க வேண்டாம் மாடி மனைவில் நீ குடியமர்த்த வேண்டாம் மணி மாலையால் நீ மகுடம் சூட்ட வேண்டாம் சான்றோர் என் மகனை உயர்ந்தோன்…

கருவில் உரு காணாது உன்னை சுமக்கும் என்னை பொண்ணால் நீ அலங்கரிக்க வேண்டாம் மாடி மனைவில் நீ குடியமர்த்த வேண்டாம் மணி மாலையால் நீ மகுடம் சூட்ட வேண்டாம் சான்றோர் என் மகனை உயர்ந்தோன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *