பாலித தேவப்பெருமயின் சேவையை நிறுத்தி கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

தனது பொதுமக்களுக்கான உணவு மற்றும் உலருணவு வழங்கும் இப் பொதுச் சேவையை நிறுத்தி தன்னை கைது செய்யுமாறு மத்துகம பொலிஸில் BR/816/20 இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாலித தேவப்பெரும தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இதனால் பொது மக்களின் வாழ்வாதரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பொதுவாக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சேவைகள்  மந்தகதியிலே காணப்படுகிறன.

இச் சந்தர்ப்பத்தில் குறித்து செல்ல வேண்டிய ஓர் அரசியல்வாதியே முன்னால் அமைச்சர் பாலித தேவப்பெரும அவர்கள். இவரின் சேவையை களுத்தரை மாவட்டத்தில் பரவலாக காணமுடிகின்றது. என்றாலும் இன்று தனது சேவை பற்றிய அனுபவத்ததை தனது முகப்புத்தகத்தில் வௌியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவிக்கையில்,

தனது பொதுமக்களுக்கான உணவு மற்றும் உலருணவு வழங்கும் இப் பொதுச் சேவையை நிறுத்தி தன்னை கைது செய்யுமாறு மத்துகம பொலிஸில் BR/816/20 இலக்கத்தில் தனக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இது பற்றி தெரிவிக்கையில் இது அரசியல்சார்ந்த சதி திட்டமெனவும் தெரிவித்தார்.

 

Monetize your website traffic with yX Media


Leave a Reply