யாவுமானவன்

  • 18

பகல்களை விழுங்கி
இரவுகளை விசாலமாக்கும்
தனிமையான பொழுதுகளிலும்
துணையாக ஒருத்தன் இருக்கிறான்

பக்கமிருந்து ஆற்றுவதும்
தேற்றுவதும் அவனே
மறைவாய் இருந்து இரை தருவான்
நிறைவாய் என் வாழ்வில்
நிறைந்தவன் அவன்

அவனுக்காக நடக்கும்போது
என் பாதங்களின் தோள்களில்
புன்னகையை காண்கின்றேன்

அவனுக்காக தனித்து நிற்கும் பொழுதுகளில்
அவன் இல்லத்தின் ஒரு தூணாய்
மாறி விட துடிக்கின்றேன்

அவனுக்காக தரை மீது நெற்றி பதிக்கயில்
அதுபோல் ஆறுதல் ஒன்று
இல்லாதது போல் உணர்கின்றேன்

தனித்திருந்து அவனோடு பேசுகையில்
அவன் பக்கம் இருப்பது போல்
வலி மறந்து புத்துணர்வு காண்கின்றேன்

அவனுக்காக அதான் உரைக்க முந்தி செல்கையில்
முன்வரிசையில் நடுவினில் நான் நிற்​கையில்
மரணத்தையும் ஏற்கும்
மனதை உணர்கின்றேன்

அதிகாலை தஹஜ்ஜுத் வேளை
பள்ளிவாயலின் முதல் வருகை
என்னுடையதாகையில்

முதல் தக்பீருக்காய் நான்
விரைந்து எழும்புகையில்
அகிலத்தையே வென்று விட்ட
திருப்தி எனக்குள்

அழும் போது ஆறுதல் தேட
அடைக்கலம் தந்தான்
புன்னகை பரிமாற முகம் தேடுகின்றேன்

உறவுகள் பிரிந்து வந்த போது
என் உலகத்தையே மாற்றி
அமைத்தான் அவன் உருவம்
காண ஏங்குகின்றேன்

தாய் தந்தை பக்கம் இன்றி
தவித்த பொழுதுகளில்
குறைகளின்றி என் வாழ்வின் வழிகளை
அவன் வழியிலாக்கித் தந்தான்
அவன் நிழலில் நானும் நின்றிடத் தவிக்கின்றேன்

அவன் வழியில் நடந்ததால்
அகிலத்தின் முன் தலை நிமிர்கின்றேன்
உயர்த்தி விடுகின்றான்
உதறியவரும் போற்றிட

இளைஞனே…!
சென்று பார் நீயும் அவன் வழியில்
வாழ்க்கை இன்னும் ஓய்வு தரவில்லை
வாழ்ந்து பார் அவன் பாதையில்

மரணம் முட்டும் எல்லை வரை
மனதில் அமைதி நிலைக்கத் தருவான்
பரீட்சித்தாலும் கை விடாது
தாங்கி பிடிப்பான்

ஏரூர் நிலாத்தோழி
ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம்
ஏறாவூர்


Advertising that works - yX MediaMonetize your website traffic with yX Media

பகல்களை விழுங்கி இரவுகளை விசாலமாக்கும் தனிமையான பொழுதுகளிலும் துணையாக ஒருத்தன் இருக்கிறான் பக்கமிருந்து ஆற்றுவதும் தேற்றுவதும் அவனே மறைவாய் இருந்து இரை தருவான் நிறைவாய் என் வாழ்வில் நிறைந்தவன் அவன் அவனுக்காக நடக்கும்போது என்…

பகல்களை விழுங்கி இரவுகளை விசாலமாக்கும் தனிமையான பொழுதுகளிலும் துணையாக ஒருத்தன் இருக்கிறான் பக்கமிருந்து ஆற்றுவதும் தேற்றுவதும் அவனே மறைவாய் இருந்து இரை தருவான் நிறைவாய் என் வாழ்வில் நிறைந்தவன் அவன் அவனுக்காக நடக்கும்போது என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *