வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 01

  • 10

“எந்த மனிதன் உலக வாழ்க்கை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி மறுமை குறித்து அதிகம் கவலை கொள்கிறானோ அவனுடைய வாழ்க்கையில் தன்னிறைவை, சந்தோஷத்தை ஏற்படுத்துவான். “

‘உலக அலங்காரங்கள் அவனை முட்டி மோதும், அவனுக்கு முன்னும், பின்னும் கவர்ச்சியாக தோற்றமளிக்கும். ‘ ‘என்றாலும்’ அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

“ஆனால்’ யார் உலகத்தை நினைத்து கவலை கொள்கிறார்களோ!! அவரது கன்னுக்கு முன்னால் எவ்வளவு தான் சொத்து, செல்வம் இருந்தாலும் அவனுடைய உள்ளம் ஏழ்மை தன்மையை, திருப்தியற்ற, நிம்மதியற்ற வாழ்க்கையை உணர்வான்.

‘என்றாலும்’ அவன் உலகத்தை துரத்திக்கொண்டே கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவான். எனினும் இறைவன் விதித்தது மட்டுமே அவனுக்கு கிடைக்கும்..

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். சொத்து, செல்வத்தை சம்பாதிப்பது போன்று நிம்மதி, சந்தோஷத்தை சம்பாதிக்க முடியாது. அதனை இறைவனால் மட்டுமே தர முடியும். எல்லா செயல்களையும் இறைவனுக்காகவும், மறுமைக்காகவும் செய்கின்ற பொழுதே நிம்மதி எங்களை நோக்கி வந்து சேறும்.

‘ஸஹாபாக்கள் ஏழைகள் தான் என்றாலும் நிம்மதியாக வாழவில்லையா??

சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் தான் ஈடுபடவில்லையா??

‘ஒன்றே ஒன்றுதான் மறுமைக்காக வாழ்ந்தார்கள் நிம்மதியான வாழ்க்கையை பெற்றார்கள்.’ எனவே நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் சிலவற்றை தொடர் பதிவாக தரலாம் என்று நினைக்கிறேன் . இனிவரும் பதிவுகளில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்

“நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு குர்பானியும், என் வாழ்வும், மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்..” (அன்ஆம் :162)

தொடரும்…
Faslan hashim
SEUSL
BA ®


Advertising that works - yX MediaMonetize your website traffic with yX Media

“எந்த மனிதன் உலக வாழ்க்கை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி மறுமை குறித்து அதிகம் கவலை கொள்கிறானோ அவனுடைய வாழ்க்கையில் தன்னிறைவை, சந்தோஷத்தை ஏற்படுத்துவான். “ ‘உலக அலங்காரங்கள் அவனை முட்டி மோதும், அவனுக்கு…

“எந்த மனிதன் உலக வாழ்க்கை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி மறுமை குறித்து அதிகம் கவலை கொள்கிறானோ அவனுடைய வாழ்க்கையில் தன்னிறைவை, சந்தோஷத்தை ஏற்படுத்துவான். “ ‘உலக அலங்காரங்கள் அவனை முட்டி மோதும், அவனுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *