மனிதமுள்ள ஊடகங்கள்

  • 21

மறைக்கப்படும் நீதியை
உலகிற்கு வெளிக்காட்ட
வேண்டிய ஊடகங்கள்
இனவாத இயக்கங்களாய்
மாறிப் போனது ஏனோ

உலகையே கோரோனா உழுக்க
இலங்கை மட்டும் ஏன்
இனக் சாயம் பூசும்
அரசியலாய் மாறிப்போனதே

அறிவுக்கு எட்டாத
அபூர்வமான விஷயங்ளும்
ஒரு இனத்தின்
அடையாளமாய் மாறிவிட்டது
இன்று சில ஊடகங்களில் வழிநடத்தால்

கேட்பவர்கள் எல்லாம் கோமாளி
என நினைத்து விட்டாயோ
இல்லை உனக்கு எதிராய் அவர்களும்
குரல் கொடுக்க தொடங்கி விட்டார்கள்

பொய் வதந்திகளை கூறி
எதையும் சாதித்துவிட முடியாது
கேட்கும் காதுகளும் பார்க்கும் கண்களும்
சிந்தனையோடு கடந்து செல்கிறது
சிந்திக்கும் மனிதர் மத்தியில்
உன் சித்திர நாடகம் அரங்கேறாது

ஊடகத்தின் பணி என்னவென்று அறியாது
ஊடகம் என்ற பெயரில்
இனவாதத்தை தூண்டும்
அரசியல்தான் உன் நடத்தைகள்

துப்பாக்கியில் இருந்து வரும்
தோட்டாக்களை விட
பொய்யான வதந்திகள்
மனிதகுலத்துக்கு ஆபத்து என
நீ அறிந்து கொண்டும்
படிப்பறிவு உன்னில் இருந்தோம்
பகுத்தறிவு அற்றவனாய்
ஏன் இந்த ஆட்டம்

அரசியல் எனும் போர்வைக்குள்
அடைபட்டு விட்டாயோ
மீண்டு வர முயற்சி செய்யாத
நீ வீழப் போவது இப்போது

உணர்வுகளை கொன்று
உயிர் வாழ்வதை விட
மரணிப்பது மேல்
ஊடகத்தின் பணி என்னவென்று
அறிந்து நடந்து கொள்
இல்லை என்றால்
பண்பானவர்கள் உன்னை
கண்டு கொள்ளாமலே
கடந்து செல்வார்கள்

ஊடகம் என்பது
ஒரு இனத்தைச் சார்ந்தது அல்ல
மானிட குலத்திற்கு
மகாத்தான பணிகள் செய்ய வேண்டியது
மனிதமுள்ள ஊடகங்கள்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

 


Advertising that works - yX MediaMonetize your website traffic with yX Media

மறைக்கப்படும் நீதியை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இனவாத இயக்கங்களாய் மாறிப் போனது ஏனோ உலகையே கோரோனா உழுக்க இலங்கை மட்டும் ஏன் இனக் சாயம் பூசும் அரசியலாய் மாறிப்போனதே அறிவுக்கு எட்டாத அபூர்வமான…

மறைக்கப்படும் நீதியை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இனவாத இயக்கங்களாய் மாறிப் போனது ஏனோ உலகையே கோரோனா உழுக்க இலங்கை மட்டும் ஏன் இனக் சாயம் பூசும் அரசியலாய் மாறிப்போனதே அறிவுக்கு எட்டாத அபூர்வமான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *