COVID – 19 எண்ணப் பதிவுகள் – 01

  • 10

[cov2019]

முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி வைரஸ் “கொரோனா” உலகத்தை அப்படியே ஸ்தம்பிதமடையச் செய்து உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் ஏற்கனவே உலகம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியாது திண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அவற்றை எல்லாம் பின்தள்ளி இன்று முழு உலகிற்கும் ஒரு பாரிய சவாலாக மாறி இருக்கிறது இந்த “கொரோனா.” ஏலவே நாம் வாழுகின்ற இந்த பூமியில் எல்லாம் நாடுகளும் சந்தித்த சவால்களாக,

  1. புவி வெப்பமடைதல்
  2. சூழல் மாசடைதல்( வளி,நீர், நிலம் )
  3. உள்நாட்டுப் பேர்
  4. போதைப்பொருள்
  5. இயற்கை வளங்களின் நிறைவு.
  6. வல்லரசு நாடுகளின் அதிகாரப் போட்டி
  7. தொழிநுட்ப வளர்ச்சியின் எல்லை மீறல்
  8. மக்கள் ஒரு வகை மனவழுத்தத்தில்

என்பனவற்றை முன்னிலைப்படுத்த முடியும். ஆனால் “கொரோனா” இன் பின்னரான உலகம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை அவதானிக்கின்றபோது மேலே கூறப்பட்ட அனைத்து காரணிகளுக்குமான தீர்வுகளா இவை என என்னத்தோனுகின்றது.

கடந்த வாரம் சீனாவில் பல்லாண்டுகளுக்கு பின்னர் நீல ஆகாயத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக ஒரு பதிவினை காணக்கூடியதாக இருந்தது. அதேபோல இலங்கையின் வளிமண்டலத்தில் மாசற்ற காற்றினை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது. மற்றும் கடலில் அறிய புதியவகை மீனினங்கள் தற்போது மேலே வருவதாக ஒரு தகவல்.

இது இவ்வாறு இருக்க முழு உலகத்திலும் யுத்த நிறுத்தம், வல்லரசு நாடுகளுக்கு தங்களுடைய பலத்தினை மீட்டி பார்க்க வைத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் ஒருவகையான மனவழுத்தத்தில் சுற்றித்திரிந்த மக்களை எல்லாம் வீடுகளில் தங்கவைத்து குடும்பத்தோடு கழிக்க வைத்துள்ளது இதனால் கணவன், மனைவி,பிள்ளைகள் என சந்தோசமாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது
அதிகமானவர்கள் வீட்டுத்தோட்டம் செய்து மனநிம்மதி அடைவதை காணக்கூடியதாக இருக்கிறது.

அரசியல், இனம், மதம்,நிறம், பணம் என்று பிரிந்து நின்ற மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். இருப்பினும் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் எமது சகோதரர்கள் வாழ்க்கை செலவுகளுக்கு கஷ்டங்களை எதிர்கொள்வது கலவையை தருகிறது.

மறுபுறம் அரசாங்கம், செல்வந்தர்கள், அரசியல் சார்பற்ற நிறுவனங்கள், என எல்லோரதும் அயராத முயற்சியால் உதவிகள் வழங்கப்படுகின்றது. அவசரமாக இந்த மோசமான நிலைமை உலகை விட்டு நீங்கி ஒரு புத்தம் புதிய உலகை எதிர்பார்த்து இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்.


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

[cov2019] முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி வைரஸ் “கொரோனா” உலகத்தை அப்படியே ஸ்தம்பிதமடையச் செய்து உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் ஏற்கனவே உலகம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியாது திண்டாடிக்கொண்டிருந்த…

[cov2019] முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி வைரஸ் “கொரோனா” உலகத்தை அப்படியே ஸ்தம்பிதமடையச் செய்து உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் ஏற்கனவே உலகம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியாது திண்டாடிக்கொண்டிருந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *