அல்லாஹ்வின் அழிவைத் தேடும் வியாபாரிகள்!

  • 12

உண்மையில் அதிக வியாபாரிகள் மக்களின் நெருக்கடி நிலை அறிந்தும் வழமைக்கு மாறாக விலைகளை இரட்டிப்பாக அதிகரித்து விற்பதை பரவலாக காண முடிகிறது, அல்லாஹ்வின் தண்டனை பயங்கரமானது மட்டுமல்லாது நிச்சயமுண்டு என்றாவது உணராது மக்கள் மீது இரக்கமில்லா அரக்க கூட்டங்களாக செயற்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்களில் வந்த மரக்கறி வியாபாரி ஒருவர் தம்புள்ளை மரக்கறி சந்தை மூடியுள்ளதால் இப்பொழுது விலை கூடி என்று பொய்யுரைத்து விற்றார், நான் அவருக்கு “தம்புள்ளை சந்தை திறந்திருக்க ஏன் இவ்வாறு சொல்றீங்க” என்று கேட்ட போது சுதாகரித்த அவர் “இனி பேசி வேலை இல்லை” என்று சொன்னவராக மரக்கறிகளை விற்க ஆரம்பித்துவிட்டார்.

அரிசி, மா, சீனி போன்ற மக்கள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தும் பொருட்களின் விலையைக் கூட இரட்டிப்பாக விற்கும் வியாபாரிகள், சில்லறைக் கடைக்காரர்கள் மனிதாபிமானமற்று செயற்படுவது கவலையளிக்கிறது.

மக்களுக்கு தேவை, எவ்வாறாவது கொள்வனவு செய்து தான் ஆகவேண்டும், நிர்க்கதியான இந்நிலையில் மக்கள் என்ன விலை விற்றாலும் வாங்குவர் எனும் எண்ணங்களுடன் அளவுகடந்து அதியாயகமாக விற்கும் வியாபாரிகள் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்களும் மக்களில் உள்ளவர்கள் தான் உக்களுக்கும் ஒரு நாள் பிரச்சினைகள் வரும் அந்நேரத்தில் பாதிப்படைந்துள்ள மக்கள் சற்றுக் கூட திரும்பிப்பார்க்கமாட்டார்கள் ஏன் உங்களது ஜனாஸாவில் கூட கலந்துகொள்ளாது “இவனா மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் அடாத்து விலைக்கு விற்று மக்களை மேலும் கஷ்டப்படுத்தியவன், இவன்ட ஜனாஸாவுக்கு போறதே மகாப் பாவம்” என்று கூறி ஒதுங்கிவிடுவர்.

மக்களுக்கு தேவையான நேரத்தில் விலையேற்றுபவன் பாவி மட்டுமல்லாது அவன் சாபத்திற்குரியவன் எனும் நபிமொழிகள் கூட உங்களது காதுகளை எட்டவில்லை போலும்! இவ்வாறு மக்களது வயிற்றெரிச்சலிலும் அவர்களது கண்ணீரிலும் வியாபாரம் செய்து ஈட்டும் வருமானம் ஒரு போதும் நிலைக்காது, பரகத் அற்று அழிந்துபோகும்.

சட்டங்கள், தொழில்நுட்ப அறிவுகள், சமூக வலைத்தள பாவனை முறை அனைத்தும் அறிந்த வாலிபர்கள், இவ்வியாபாரிகளை ஏன் நுகர்வு அதிகார சபைக்கு call இன் மூலம் அல்லது பிரதேச சபை/நகர சபை முதல்வருக்கு, DS உத்தியோகத்தருக்கு முறையிட்டு இவர்களது ஆட்டங்களை அடக்க முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் இவர்களுக்கு நல்லறிவை வழங்குவானாக

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

உண்மையில் அதிக வியாபாரிகள் மக்களின் நெருக்கடி நிலை அறிந்தும் வழமைக்கு மாறாக விலைகளை இரட்டிப்பாக அதிகரித்து விற்பதை பரவலாக காண முடிகிறது, அல்லாஹ்வின் தண்டனை பயங்கரமானது மட்டுமல்லாது நிச்சயமுண்டு என்றாவது உணராது மக்கள் மீது…

உண்மையில் அதிக வியாபாரிகள் மக்களின் நெருக்கடி நிலை அறிந்தும் வழமைக்கு மாறாக விலைகளை இரட்டிப்பாக அதிகரித்து விற்பதை பரவலாக காண முடிகிறது, அல்லாஹ்வின் தண்டனை பயங்கரமானது மட்டுமல்லாது நிச்சயமுண்டு என்றாவது உணராது மக்கள் மீது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *