கொரனவும் – பரணவும்

  • 21

“4 கிழமையாக ஊட்டுக்குள்ள அடஞ்சி ஈக்கியேனே. என்ன வாழ்க்கதான் இது.” என்று சிந்தித்தவனாக கோரானா பற்றிய கவிதை கிறுக்குதலில் ஈடுபட்டான் அஸ்லம்.

அகிலத்தை அழிக்க அணுகுண்டிருந்தும்
உன்னை அழிக்க முடியவில்லை – கொரோனா

என்ற அவனது கவிதை எழுதுவதை குழப்பிவிட்டது இரவு நேர வானொலிச் செய்திகள்.

“முதலில் தலைப்புச் செய்திகள்
ஏப்ரல் 19 முதல் கொரோனா இல்லாத இலங்கை¸
மே மாதம் 11ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோயாளிகள் இணங்காணவில்லை.
இனி விரிவான செய்திகள்.”

“இன்டைய நிவ்ஸ் எல்லாம் பொஸிடிவ் நிவ்ஸ் ஆகதான் இருக்குது. ஆனா 19ம் திகதியென்டு Date செல்லி கொரோனாவ இல்லாமலாக்குரண்ட இது ‘இலக்ஷனுக்காக கொரோனாவ வீட்டுக்கு அனுப்பும் முயற்சி போல்தான் ஈக்கி’ பார்க்கும் நடக்குமா என்டு?” என்று மீண்டும் அஸ்லம் கவிதை எழுதுவதில் மூழ்கினான்.

அணு வந்தாலும் அரசியல் வாதியின்
சதி முடிவதில்லை – ஈழத்தில்
மதியிருந்தும் மறந்து விட்டது
மத பேதத்தால் மருந்தைத் தேட

என்று கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் நேரம் 10 மணியை நெருங்கவே எதாவது நல்ல செய்தியையொன்றை கேட்டு மனதை திடப்படுத்தலாம் என்று இறுதியாக பரண தொலைக்காட்சியின் இரவு நேர பிரதான செய்திகளை பார்க்கவென தொலைக்காட்சியை திறந்தான். உடனே வீட்டில் உள்ள அனைவரும் செய்தி பார்க்கவென தொலைக்காட்சியை சூழ்ந்து கொண்டனர்.

அஸ்லமின் குடும்பம் நடுத்தரமானது. வீட்டில் தாய் தந்தையுட்பட தங்கை அப்ராவுடன் தாயின் தாய் ஆஸியத்தும்மா. பச்சைக் கம்பலம் விரித்தாடும் வயலும் மலையும் சார்ந்த தென்னிலங்கையின் மீ- எல்லைக் கிரமாத்தின் மலையடிவரத்தில் இவர்களின் வீடமைந்துள்ளது. அவர்களின் தாயின் பரம்பரையிலே அக்காணி கிடைத்தது. பரம்பரையென்றால் உறவினர் என்றடிப்படையில் அன்வர் மாமாவும் பரீனா மாமியும் அஸ்மா மய்தினியும்தான் மாத்திரம்தான். அவர்கள் தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக கொழும்பில் வாழ்கின்றனர். அன்வர் சீனாவிலிருந்து கைத்தொலைபேசிகளை இறக்குமதி செய்து. தலைநகரில் விநியோகம் செய்பவர். அவரும் தொழில்நிமித்தம் மாதந்தம் சீனாவுக்கு சென்று வருபவர்.

“கொழும்பில் குரோனா நோயாளியொன்று இணங்காணப்பட்டு குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.” என்று தலைப்புச் செய்திகளுடன் செய்தி ஆரம்பமாகியது.

“ஸ்ரீ லங்காவுக்கு கொரோனா வராட்டி இந்த TV Channel கு நிவ்ஸே இல்ல” என்று எரிச்சலை உமிழ்ந்தவளாக அப்ரா தொடர்ந்தும் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது¸

“நேற்று மரதானப் பகுதியில் இனங்காணப்பட்ட முஸ்லிம் கொரோன நோயாளி கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி சீனாவிலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர். மேலும் இவர் இங்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர். மேலும் இவருக்கு கொரோனா நோய் இனங்காணப்பட்டது தனிமைப்படுத்தலில் 14 இருந்த பின்னர் வீட்டுக்கு வந்து 5 நாட்களிலாகும். இந்நிலையில் இவரின் வீட்டில் வசித்த மனைவியும்¸ பிள்ளையும் பரிசோதனைக்காக கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.”

என்ற செய்தியை குறித்த நோயாளியான அன்வர் மற்றும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளான பரீனா¸ அஸ்மாவின் புகைப்படம் மற்றும் வீட்டையும் ஒளிபரப்பிய வண்ணம் கூறப்பட்டது. இதைத் தீடிரெனக்கண்ட அதிர்ச்சியில் இருதய நோயாளியான ஆஸியத்தும்மா மயங்கி விழுந்தாள்.

“அந்த கொரோனாவை விட பெரிய வைரஸ் இந்தப் பரண TV தான்” எனக் கூறியவனாக அஸ்லம் 1990கு அழைப்பினை ஏற்படுத்தினான்.

Ibnuasad


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

“4 கிழமையாக ஊட்டுக்குள்ள அடஞ்சி ஈக்கியேனே. என்ன வாழ்க்கதான் இது.” என்று சிந்தித்தவனாக கோரானா பற்றிய கவிதை கிறுக்குதலில் ஈடுபட்டான் அஸ்லம். அகிலத்தை அழிக்க அணுகுண்டிருந்தும் உன்னை அழிக்க முடியவில்லை – கொரோனா என்ற…

“4 கிழமையாக ஊட்டுக்குள்ள அடஞ்சி ஈக்கியேனே. என்ன வாழ்க்கதான் இது.” என்று சிந்தித்தவனாக கோரானா பற்றிய கவிதை கிறுக்குதலில் ஈடுபட்டான் அஸ்லம். அகிலத்தை அழிக்க அணுகுண்டிருந்தும் உன்னை அழிக்க முடியவில்லை – கொரோனா என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *