நித்யா… அத்தியாயம் -37

  • 16

[cov2019]

அவள் கத்துவதைக் கேட்டு அவளருகே ஓடி வந்தவன் சற்று நேரத்தில் சிரித்தான். அவன் மேல் கோபம் கொண்டவள்,

”ஏ விக்னேஷ் சிரிக்றீங்க? நா… நா பயந்துடே…”

வார்த்தைகள் சிக்கின அவளுக்கு. ஒருகணம் அவளது முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ தோன்ற,

”ஸொரி… அது வெறும் கயிறு அதான்…” மேலும் கூறாமல் உள்ளே நடந்தவனைப் பார்த்து,

”வினோத் எப்ப வராரு?” அவளது கேள்வியால் சற்று எரிச்சலடைந்தவன்,

”என்ன அவசரம்? மழ வேற…. அவன் வந்துடுவான்…” இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே இடியோசை காதைப் பிளந்தது.

”கடவுளே…. இவ்ளோ இடிமின்னல்…. அவர காப்பாத்து..” மென்குரலில் பிரார்த்தித்தவளைப் பார்த்து நகைத்தான் விக்னேஷ்.

” நித்யா…. வா..” என்றவன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு டைனிங் ஹோலிற்குச் சென்றான்.

”அண்ணா போன் பண்ணாரு வர லேட் ஆகுமாம். அதனால உனக்கு சாப்டு முடிக்க சொன்னாரு…” பேயரைந்தவள் போல ,

”என்ன வரமாட்டாரா? ” என்றவளை,

”வர லேட்ஆகுமாமா… அதான் ஒனக்கு…” என்று மேசையரைகே அவளை அழைத்துச் சென்றான்.
பகலிலும் ஏதும் சாப்பிடாமல் இருந்தவளுக்கு உண்மையிலும் பசித்தது. எனினும்,

”இல்ல…நா…” ஏதோ மறுக்க வந்தவளை கைகாட்டி,

”அண்ணி…. சாப்டுங்க…. இல்லேனா அண்ணாகிட்ட சொல்லிருவேன்…..”

அவன் அவளை ‘அண்ணி’ என்று விழித்த விதத்திலேயே கவலைப்பட்டு சாப்பாட்டைத் தொட்டாள். சற்று நேரம் யோசனைபடிய விக்னேஷையே பார்த்துக்கொண்டிருந்தாள். திடுமென அவளை நோட்டமிட்டவன்,

”என்ன சாப்பிடாம யோசன?”

”ஓ… ஒங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…”

சாப்பாடு மேலும் இறங்க மறுத்தது. அவசரமாக தண்ணீரை நீட்டியவனைப் பார்த்து கண்ணீர் விட்டாள் அவள்.

”ஹேய்…. என்ன அழுவுற…. சாப்பிடு….”

கண்களைத் துடைத்தவள்,

”ஐ அம் வெரி ஸொரி விக்னேஷ்…. இதுவர மத்தவங்க சொன்னதெல்லாம் நம்பி நா ஒங்கள தப்பா நெனச்சிட்டத…” அவளைப் பேச விடாது,

”அந்த கதய விடுங்க… இதுகு பொறகு எங்க வீட்டுகு வாழ வரப்போறிங்க…. ஒங்கள மதிக்காம வேற யார…?”

பவ்வியமாகப் பேசியவனை இரக்கத்துடன் பார்த்தாள். சற்று நேரத்தில் மின்வெட்டு நிகழ்ந்தது.

”ஐயோ…நித்யா நீ இந்த அறைல இருந்துக்க அண்ணா வரும்வரேல….” என்று ஓர் அறைக்குள் அவளை போகச் சொல்லி கையில் மெழுகுவர்த்தியைக் கொடுத்தான். அதை வாங்கிவிட்டு உள்ளே சென்றவளின் உள்ளம் விக்னேஷின் நல்ல உள்ளத்தை நினைத்து மகிழ்ந்தது. சற்றுநேரத்தில் எல்லாம் சூனியமாகத் தோன்றியது.

‘சீ… வினோத் வந்தாரானால் அவர்கிட்ட இந்த விசயத்த சொல்லலாம்’ மனம் அலுத்துக் கொண்டது.

மழை சோவெனப் பொழிந்து கொண்டிருந்தது. தூக்கமும் குளிரும் அவளை வாட்டின. சற்று நேரத்தில் கட்டிலை நோக்கிச் சென்றாள். தூக்கக் கலக்கத்திலிருந்தவளுக்கு ஏதோ சத்தம் கேட்டு லேசாக விழித்துக் கொண்டாள்.

‘இன்னும் வினோத் வரல… அதுகுள்ள தூக்கம் வேற…’ தன்னையே கடிந்து கொண்டவள் மெழுகுவர்த்தியை எடுக்கச் சென்றபோது அது விழுந்து அணைந்தது. கும்மிருட்டு எங்கும் பரவியது.

நெஞ்சில் ‘லப்டப்’ சப்தம் தோள்களில் கேட்க கட்டிலிலேயே இருந்தவளது கண்களில் ஏதோ ஓர் உருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்தாள். அந்த உருவம் யாரென அடையாளம் காணமுடியவில்லை. மின்னலொன்று பலமாக வெட்டவே அந்த உருவத்தைக் கண்டு பயத்தின் உச்சிக்கே சென்றாள் நித்யா.

தொடரும்….
Rifdha Rifhan
SEUS


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


[cov2019] அவள் கத்துவதைக் கேட்டு அவளருகே ஓடி வந்தவன் சற்று நேரத்தில் சிரித்தான். அவன் மேல் கோபம் கொண்டவள், ”ஏ விக்னேஷ் சிரிக்றீங்க? நா… நா பயந்துடே…” வார்த்தைகள் சிக்கின அவளுக்கு. ஒருகணம் அவளது…

[cov2019] அவள் கத்துவதைக் கேட்டு அவளருகே ஓடி வந்தவன் சற்று நேரத்தில் சிரித்தான். அவன் மேல் கோபம் கொண்டவள், ”ஏ விக்னேஷ் சிரிக்றீங்க? நா… நா பயந்துடே…” வார்த்தைகள் சிக்கின அவளுக்கு. ஒருகணம் அவளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *