முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பாதுகாத்தல்

முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பாதுகாத்தல்

வந்தேறு குடிகளென்ற
வாதங்களைத் தகர்த்தெறிந்து
பூர்வீகச் சொத்துக்களை
சேதங்களின்றி காத்தல் வேண்டும்

புனிதம் மிகு புண்ணிய பூமிகளும்
மனிதம் போற்றும் வாசிகசாலைகளும்
தொன்மை நிறை நூதனசாலைகளும்
மேன்மையென ஏற்றுதல் வேண்டும்

விசித்திரம் நிறைந்த
சரித்திரப் புரட்டுகளை
சான்று கொண்டு பதித்திடல்
சாலச் சிறந்ததன்றோ???

அடிச்சுவடுகளே இன்றி
அடியோடு அழிக்கப்படும் வரை
நொடிப்பொழுதில் கண்ணிமைத்திடாது
விடி கொண்டிட விழித்தெழுவோம்!

தார்மீகப் பணிகள்
ஏராளமதை தாராளமாகப் புரிந்து
பூர்வீக முஸ்லிம்கள் நாமென்றே
யுகம் முழுதும் உரைத்திடுவோம்….

ILMA ANEES
WELIGAMA
SEUSL

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


கவிதை வியூகம் வெளியீட்டு மையம்