வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 03

  • 10

“மனதைக்கட்டுப்படுத்தி மறுமை வாழ்க்கைக்காக உழைக்கின்றவரே புத்திசாலி, மனம் போன போக்கில் வாழ்ந்து இறைவன் மீது கற்பனையாக நம்பிக்கை வைப்பவன் அறிவிலி”. (திர்மிதி)

எமது வாழ்க்கையை இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் அமைத்துக்கொள்வதினூடாக நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று இதற்கு முன்னுள்ள பதிவில் பார்த்தோம் அதே போல் இரண்டாவது செய்ய வேண்டிய விடயம். ‘

இலட்சியவாதியாக இருத்தல்

இலட்சியமற்றவர்களே நிம்மதியற்றவர்கள்.  எமக்கான உயர்ந்த இலட்சியத்தை இனம் கண்டு கொண்டால் பின்னர் அதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றும் மன நிம்மதியை பெற்றுத்தரும் இன்பமாக அமையும்.

“இஸ்லாமிய வரலாற்றில் 5 வது கலீபாவாக போற்றப்படும் மேதை உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வீட்டை இஸ்லாமிய வீடாக மாற்ற கலீபா அப்துல் மலிகின் மகள் பாத்திமாவை திருமணம் முடித்தார். பின் மதீனா ஆளுனர் அதன் பின் நீதிமிக்க கலீஃபா இறுதி என் மனம் சுவனத்தை விரும்புகிறது நிச்சயமாக நான் போவேன். இது தான் என் இலட்சியம் என்றார் அதேபோல் நடந்த வரலாற்று சம்பவத்தை அறிந்திருக்கிறோம்.

‘அதேபோல் போற்றப்படும் ஒரு தளபதி தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை தளபதி பதவியில் இருந்து உமர் ரலி நீக்கிய பின் மக்கள் காரணத்தை கேட்டபோது “நான் போர் புரிவது உமருக்காக அல்ல என் இறைவனுக்காக என்றார்.” ‘இது தான் ஒரு இலட்சியவாதியின் பண்பாகும்.’

தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒருவர் தான் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களை சிறையில் வைத்த நேரம் கூறிய பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “எனது எதிரிகளால் என்ன என்ன செய்திட முடியும்? ‘எனது சுவனமும், எனது நிம்மதியும் என் உள்ளத்தில் அல்லவா உள்ளது.’ ‘நான் எங்கு சென்றாலும் அது என்னுடனல்லவா வருகின்றது.’என்னை சிறைவைத்தால் இறைவனுடன் தனித்திருக்க எனக்கொரு சந்தர்ப்பத்தை அமைத்து தருகின்றனர். என்னை கொலை செய்தால் அது வீரமரணம் என்றார். என்னவொரு இலட்சிய வேற்கை உள்ளவர். எனவே நிம்மதியான உள்ளத்தை பெற்றோர் எதையும் துணிவுடன் எதிர்க்கொள்வார்கள்.

ஆனால் இன்று ஒவ்வொருவரின் இலட்சியங்களைப் பார்த்தால் சொல்வதற்கே கேவலமாக இருக்கிறது. குறுகிய நேர இன்பத்திற்காக மனிதர்கள் படும் கஷ்டம், அர்ப்பணிப்பு சொல்லவா வேண்டும் அந்த அளவு தியாகம் செய்கிறார்கள். இதனால் நேரம் பணம், ஆரோக்கியம், நிம்மதி போன்றவற்றை இழப்பதையன்றிவேறில்லை.

எனவே எமது அறிவு, ஆற்றல், வீரம், துணிவு, காலம் போன்றவற்றை இறை திருப்தியைப்பெற்றுத்தரும் இலட்சியத்திற்காக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ். நிச்சயமாக நிம்மதி எம்மை நோக்கி வரும்.

தொடரும்….
Faslan hashim
South eastern university of sri lanka
BA ®


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


“மனதைக்கட்டுப்படுத்தி மறுமை வாழ்க்கைக்காக உழைக்கின்றவரே புத்திசாலி, மனம் போன போக்கில் வாழ்ந்து இறைவன் மீது கற்பனையாக நம்பிக்கை வைப்பவன் அறிவிலி”. (திர்மிதி) எமது வாழ்க்கையை இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் அமைத்துக்கொள்வதினூடாக நிம்மதியை பெற்றுக்கொள்ள…

“மனதைக்கட்டுப்படுத்தி மறுமை வாழ்க்கைக்காக உழைக்கின்றவரே புத்திசாலி, மனம் போன போக்கில் வாழ்ந்து இறைவன் மீது கற்பனையாக நம்பிக்கை வைப்பவன் அறிவிலி”. (திர்மிதி) எமது வாழ்க்கையை இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் அமைத்துக்கொள்வதினூடாக நிம்மதியை பெற்றுக்கொள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *