மாணவர்கள் ஆசிரியர்களுடன் பணிவுடன் நடந்துகொண்ட முறைகள்

  • 44

1. இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபிஈ (இமாம் ஷாபிஈ) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “எனது ஆசிரியர் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களது முன்னிலையில் நான் இருக்கும் போது புத்தகத்தின் தாள் சத்தம் கூட அவர்களுக்கு கேட்காமலிருக்க மிகவும் மிருதுவாக தாளை புரட்டுவேன்.”

2. இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களது மாணவர் அர்ரபீஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் நான் தண்ணீர் அருந்துவதற்குக் கூட துணிவு பெற்றதில்லை.”

3. இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நான் எனது உஸ்தாத் ஹம்மாத் ரஹிமஹுல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக அவர்களது வீட்டின் பக்கம் எனது கால்களை நீட்டியதில்லை, இருவரது வீடுகளுக்குமிடையில் ஏழு சிறிய வீதிகள் உள்ளன, ஹம்மாத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணித்தது முதல் நான் தொழும் ஒவ்வொரு தொழுகையிலும் எனது பெற்றோருடன் சேர்த்து அவர்களுக்கும் இஸ்திக்பார் செய்வேன்.”

நூல்: அபீருஸ் ஸமான் பீ பழாஇலி வஅதாபி வஅஹ்காமி ரமழான், அஹ்மத் ஸய்யித் அபுல் அமாஇம், பக்கம் 58-59

அஸ்(z)ஹான் ஹனீபா


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

1. இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபிஈ (இமாம் ஷாபிஈ) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “எனது ஆசிரியர் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களது முன்னிலையில் நான் இருக்கும் போது புத்தகத்தின் தாள் சத்தம் கூட…

1. இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபிஈ (இமாம் ஷாபிஈ) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “எனது ஆசிரியர் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களது முன்னிலையில் நான் இருக்கும் போது புத்தகத்தின் தாள் சத்தம் கூட…

2 thoughts on “மாணவர்கள் ஆசிரியர்களுடன் பணிவுடன் நடந்துகொண்ட முறைகள்

  1. 434959 841417Hello there. I needed to inquire some thingis this a wordpress website as we are thinking about transferring across to WP. Moreover did you make this theme all by yourself? Cheers. 453360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *