ரமழான் மாதத்தை மன நிறைவுடன் வரவேற்போம்!

  • 24
ரமழானின் வருகை
  • ரமழான் தலைப்பிறை என்றதும் வீடுகள் முன்னரே கழுவி சுத்தமாக்கப்பட்டுவிடும்.
  • ரமழான் வருகையை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர்.
  • பேரீத்தம் பழங்கள் பள்ளிவாயல்களூடாக விநியோகிக்கப்படும்.
  • விநியோகிக்கப்படுவதற்கு முன் தேவைக்கு ஏற்ப கடைகளில் கொள்வனவு செய்வர்.
  • தயிர், வாழைப்பழங்களை வாங்கி தயாராக வைத்திருப்பர்.
  • அரிசி மற்றுமுண்டான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வைப்பர்.
  • பள்ளிவாயல்கள், வீடுகள் அலங்கரிக்கப்பட்டு, நறுமணங்களால் கமழும்.
மறு பக்கம் வணக்கங்கள் பக்கம் சற்று கவனம் செலுத்தினால்…
  • ஒவ்வொருவரும் முழுமையாக ஓதி முடிப்பதற்காக தனித்தனி அல்குர்ஆனை முற் கூட்டியே தயாராக வைப்பர்.
  • திக்ர்கள், ஸலவாத்கள், இஸ்திஃபார்கள் என நாவுகள் இறைவனை தியானிக்கும்.
  • ஸதகாக்கள், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவற்றை மன நிறைவுடன் முஸ்லிம்கள் செய்வர்.
  • வீண் தர்க்கம், சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்து நடப்பர்.
  • ஒரே இறைவனை திருப்திப்படுத்தும் நோக்கில் பகலில் நோன்பிருந்து இரவில் கியாமுல் லைல்/தராவீஹ் மற்றும் வித்ர் தொழுகைகளை நின்று வணங்குவர்.
  • இரவில் இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை புரிவர்.
  • பகல் வேளைகளில் இச்சைகளை கட்டுப்படுத்தி, உணவு, பாணங்களைத் தவிர்த்து இறைவனது கட்டளைக்கு வழிப்படுவர்.
  • முதல் நாளில் பள்ளிகள் முழுக்க தொழுகையாளிகள் நிறைந்து வழிவர்.
  • அல்குர்ஆனை ஓதி முடிப்பதற்கு பள்ளிகள் தோறும் மன்ஸில் முறையை பேணி ஆண்கள் ஓதுவர்.
  • இறுதி பத்தில் லைலதுல் கத்ரை அடைந்துகொள்ளும் முயற்சியில் களமிறங்கி இஃதிகாப் இருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
  • இறுதி பத்தின் இறுதி நாட்களில் குறிப்பாக ஷவ்வால் பிறை கண்டதும் ஸகாதுல் பித்ர் வழங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
  • ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு தொழுகைகளுக்குப் பின் அல்குர்ஆனை அடையாளம் வைத்து வைத்து ஓதுவர்.
  • 27ம் இரவை லைலதுல் கத்ராக எண்ணி நிகழ்ச்சி நிரலை தயாரித்து ஸஹர் வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
குதூகலம்/மகிழ்வு ரீதியானவை.
  • சிறுவர்கள் உட்பட பெரியோர் வரை எல்லோரது முகங்களிலும் சந்தோசக் கலை வெளிப்படும்.
  • காலையில் பள்ளிவாயல்களில் கஞ்சி காய்ச்சி மாலையில் ஊர் மக்களுக்கு விநியோகிப்பர்.
  • கஞ்சி வாங்குவதற்கு ஆனந்த வெள்ளத்தில் மிதந்தவாறு சிறுவர்கள் அவாவுடன் வாலிகள், லோட்டாக்களுடன் செல்வர்.
  • பகல் வேளைகளில் சிறுவர்கள் கிராமத்து விளையாட்டுகள் விளையாடுவர்.
  • மாலையானதும் வீடுகளில் சிற்றுண்டிகள் தயாரிப்பதில் தாய் மற்றும் சகோதரிகள் ஈடுபடுவதுடன் இப்தாருக்குரிய ஏற்பாடுகளையும் செய்வர்.
  • தற்பொழுது வீட்டுத் தயாரிப்பு குறைந்து கடைகளில் இப்தாருக்குரிய ready made உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வர்.
  • இப்தாரில் கஞ்சியை பிரதான கதாநாயகனாக திகழ வைப்பர் (இல்லையேல் இப்தார் திருப்தியாகாது).
  • மாலையானதும் இப்தாருடைய வேளையை எதிர்பார்த்து காத்திருப்பர்.
  • இறுதிப் பத்தில் அதிகமானோர் பெருநாளுக்காக புத்தாடைகள் கொள்வனவு செய்வதில் ஈடுபடுவர்.
  • அக்காலத்தில் தாய்மார்கள் இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள் செய்வதில் மும்முரமாக செயற்படுவர்.
  • ஷவ்வால் பிறையை இலங்கை வானொலி முஸ்லிம் சேவை அறிவிப்பதை எதிர்பார்த்து குதூகலத்துடன் காத்திருப்பர்.
  • பிறை கண்டதும் வீடுகள், பள்ளிகள் எங்கும் தக்பீர் ஒலிகள் கேட்கும்.

கொரோனா நிலவும் இக்காலத்திலும் இவ்வளவு அருமையான, சங்கையான, அமல்களது பருவகாலமான இம்மாதத்தின் வருகையை இம்முறையும் நிறைவான மனதுடனும், நன்மைகளை கொள்ளையடிக்கும் பேரவாவுடனும் வரவேற்போம்.

اللهم بلغنا رمضان وليلة القدر وارزقنا فيه بالرحمة والمغفرة والعتق من النار وقنا من فيروس كورونا

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா




yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

ரமழானின் வருகை ரமழான் தலைப்பிறை என்றதும் வீடுகள் முன்னரே கழுவி சுத்தமாக்கப்பட்டுவிடும். ரமழான் வருகையை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். பேரீத்தம் பழங்கள் பள்ளிவாயல்களூடாக விநியோகிக்கப்படும். விநியோகிக்கப்படுவதற்கு முன் தேவைக்கு ஏற்ப கடைகளில் கொள்வனவு…

ரமழானின் வருகை ரமழான் தலைப்பிறை என்றதும் வீடுகள் முன்னரே கழுவி சுத்தமாக்கப்பட்டுவிடும். ரமழான் வருகையை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். பேரீத்தம் பழங்கள் பள்ளிவாயல்களூடாக விநியோகிக்கப்படும். விநியோகிக்கப்படுவதற்கு முன் தேவைக்கு ஏற்ப கடைகளில் கொள்வனவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *