இப்தார்

  • 8

டைம் 6 மணி ஆகுது, பக்கத்து வீட்டு ஸல்மா தாத்தாட வீட்ல எந்த சத்தமும் இல்ல, குட்டீஸ்ட சத்தமும் இல்ல. என்னயோ தெரியல, போய்ப் பார்ப்போம்னு நானா வாங்கி வந்த ஷோர்ட் ஈட்ஸ்ல பெடிஸ் ரெண்டும், ரோல்ஸ் ஒன்னும் எடுதுட்டு போனேன் ஸல்மா தாத்தா வீட்டுக்கு. வாசற்படியில நின்னு ஸலாம் சொல்லியும் யார்ட சத்தமும் இல்ல. வாசற்கதவு திறந்து இருந்ததால நானே வீட்டுக்குள்ள நுழஞ்சேன் மறுபடியும் ஸலாம் சொல்லிட்டு.

ஸல்மா தாத்தா கிட்சன்ல இருந்து குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்தா. அவங்கட கண்ல இருந்து கண்ணீர் வடிஞ்சிட்டே இருந்திச்சு. விறகு அடுப்புல சட்டி ஒன்னு வெச்சி இருந்திச்சு.

சங்கடமான நிலையில நான் “ஸல்மா தாத்தா…!” என்று பேச… “ஆ… வாமா..” என்று கண்கள் ரெண்டயும் தன் முந்தானையால துடச்சிட்டே சொன்னாங்க.

“ஸலாம் சொன்ன, நான் பேசிப் பார்த்த, யார்ட சத்தமும் இல்ல, அதான் நானே உள்ளுக்கு வந்தன்” என்று சொன்னதும்

“இல்ல, பேசினய் கேட்கல்ல, அடுப்புல அரிசி வெச்சிருக்கு, அது தான் கிட்சன்ல இருந்தே ஓதிக்கொண்டிருக்குற” என்று பதில் தந்தாங்க. ஸல்மா தாத்தாட கடைசி குட்டி ரீமாக்கு ரெண்டு வயதாக இருக்குற போதே ஸல்மா தாத்தாட Husband எக்ஸிடன்ட் ஒன்னுல மௌதானார். அதனால தான் அழுறயோ என்று என்னைய சமாளிச்சிட்டு,

“அது சரி, எங்க குட்டீஸ்? 4 பேர்ட சத்தமும் இல்ல. விளையாட போனாங்களா?” என்றேன். (சின்ன ஒரு புன்னகை ஸல்மா தாத்தாட) என்ன என்று மறு படியும் கேட்டேன்.

“இல்லமா, அஸர் தொழுத பொறவ் கத சொல்லி அவங்க எல்லாரயும் தூங்க போட்டன். இல்லனா….” என்று சொல்ற நேரம் அவங்கட குரல் நடுங்கியதன் மூலம் உட்புறமா அவங்க அழுதுடு இருக்காங்க என்றத என்னால புரிய முடிஞ்சிச்சு.

“இல்லனா… இப்தார்கு என்ன செய்ற என்று முன்னும் பின்னுமா சுத்திட்டு வருவாங்க” என்ற ஸல்மா தாத்தாட பதில் என்னை அப்டியே உறைய வெச்சிடுச்சி.

“இப்தார்க்கு எல்லாம் ரெடியா”? என்று நான் கேட்க

“ஓ எல்லாம் ரெடி, இனி அதான் சொல்ற தான் இருக்கு” என்று சிரிச்சிட்டே சொன்னாங்க. இப்படி பேசிட்டு இருக்குற டைம்” என்ன ஏதோ தீஞ்ச வாசனை வருது ஸல்மா தாத்தா?” என்று கேட்டன். அப்போ தான் அடுப்புல அரிசி வெச்சதே ஞாபகம் வந்தது ஸல்மா தாத்தாவுக்கு.

“அல்லாஹ் அக்பர்” என்று தன்னையறியாமலே சத்தம் மேல வந்தது.
“என்ன ஸல்மா தாத்தா?”

“இல்ல… சோறு தீஞ்சிட்டு…” என்று சொல்ல..என்ட மனசும் கருகிட்டு. அந்த சோறு இப்தார்க்கு தான் என்றது விளங்கிட்டு எனக்கு.

நான் என்னைய சமாளிச்சிட்டு… “ஸல்மா தாத்தா நான் வந்த விஷயமே மறந்துட்டு, ஆ… இத புள்ளவளுக்கு கொடுங்க, 6:15 ஆகிட்டு, அவங்கள யெழுப்புங்க” என்று சொல்லி, அவங்கட கைல தந்துட்டு வீட்டுக்கு ஓடினேன் கண்கள் கலங்கியவளாக நான்,
பாய் விரித்து, வகை வகையா இப்தார்க்கு எல்லாம் ரெடி பண்ணி இருந்தாங்க உம்மா. நானாவும் தங்கச்சியும் உம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க.

“உம்மா! ஒரு கோப்பைல கஞ்சி கொஞ்சம் ஊத்தி தாங்களே” என்று அவசரமா எடுதுட்டு போனேன் ஸல்மா தாத்தா வீட்டுக்கு.

ஈச்சப்பழம் ஒரு பேக்லயும், நான் கொடுத்த பெடிஸ் ஒரு பேக்லயும்_ ரெண்டு பேக் ஒரு தண்ணி கோப்பையுடன் அவங்க ஐவரும் சுற்றிவர உட்கார்நது, துஆ செஞ்சிட்டு இருந்தாங்க.

“ஸல்மா தாத்தா! உம்மா தந்த உங்களுக்கு தர சொல்லி…”

“வாமா! நோன்பு திறந்துடு போக யேலும்” ஸுப்ஹானழ்ழாஹ்! அவங்களுக்கே நோன்பு திறக்க வழி இல்லாத நேரம்… என்னையும் அவங்க கூட இருக்க சொல்றாங்களே! என்ன ஒரு தூய்மையான மனசு.

“இல்ல, ஸல்மா தாத்தா, இப்போ அதான் கேட்கும் நான் வீட்டுக்கு போரன்” என்று சொல்ற நேரமே, எல்லோரும் எதிர்பார்துடு இருக்குற அதான் காதில விழுந்திச்சு, வீட்டை நோக்கி அவசரமா நடந்தேன்… உள்ளம் ஏதோ சங்கட நிலையுடன்…, எனக்காக பேரிச்சம் பழத்துடன் வாசற்படியிலே, வெளியே வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க உம்மா.

பலஹத்துறை
தஸ்னீமா செய்யது ஸாலிஹீன்

டைம் 6 மணி ஆகுது, பக்கத்து வீட்டு ஸல்மா தாத்தாட வீட்ல எந்த சத்தமும் இல்ல, குட்டீஸ்ட சத்தமும் இல்ல. என்னயோ தெரியல, போய்ப் பார்ப்போம்னு நானா வாங்கி வந்த ஷோர்ட் ஈட்ஸ்ல பெடிஸ்…

டைம் 6 மணி ஆகுது, பக்கத்து வீட்டு ஸல்மா தாத்தாட வீட்ல எந்த சத்தமும் இல்ல, குட்டீஸ்ட சத்தமும் இல்ல. என்னயோ தெரியல, போய்ப் பார்ப்போம்னு நானா வாங்கி வந்த ஷோர்ட் ஈட்ஸ்ல பெடிஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *