ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்

ஆயிஷா ரழி அவர்கள் கூறுகிறார்கள் : நான் தீனில் ஸைனைப் (உம்முல் முஃமினீன்) ரழியைப் போல் ஒரு சிறந்த பெண்ணை கண்டதில்லை .

  1. அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அஞ்சக் கூடியவர்கள்.
  2. உண்மையை பேசக் கூடியவர்கள்.
  3. இரத்த பந்த உறவை சேர்த்து நடப்பார்கள்.
  4. அதிகமாக சதகா (தர்மம்) கொடுப்பார்கள். (அதிகம் தர்மம் கொடுத்த காரணத்தினால் அவர்களுக்கு நீண்ட கையுடையவர் என்று அழைக்கப் பட்டார்கள்).
  5. தர்மம் கொடுக்கும் விடையத்தில் அதிகம் அல்லாஹ்வை வழிப் படுவார்கள்.
  6. தர்மத்தின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடுவார்கள்.

ஒரு முறை உமர் ரழி அவர்கள் ஸைனப் ரழி அவர்களுக்கு சேர வேண்டிய நன்கொடைத் தொகை 12 ஆயிரம் கொடுத்தனுப்பினார்கள் அது அனைத்தையும் தர்மம் கொடுத்து விட்டு அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி கூரினார்கள் இது தான் உமர் ரழி யிடமிருந்து எனக்கு வரும் கடைசி நன்கொடையாக இருக்கும் என்று. பிறகு அவர்கள் கூறியது போன்று அதற்கு பிறகு உமர் ரழி அவர்களின் ஆட்சிக் காலத்திலையே மரணித்து விடார்கள் .

P.T. Kaseer Azhary

Leave a Reply