கற்ற கல்வியே காதல்

  • 26

ஏகாந்த இரவுகளின் ஏக்கப் போர்வைக்குள்
நான் காணும் நிசப்த கனவுகள் கோடி….
அடைவதே என்னொரு உயர்வு…
தடை வர  அனுமதி ஏது தளாராதே கனவே…!

நெஞ்சாங் குழியோரம் …
பஞ்சாக கொஞ்சும் …
அஞ்சாத நெஞ்சம் தந்தது கொஞ்சம்…
பட்டமும் வாழ்வும்..
காணாமல் போக .
காணலை  காதலிப்பேனோ..?

காயங்களை நானாய்…
கால்களில் லாடங்களாய் கோர்ப்பேனோ..?
கன்னியின் கண்ணழகை பாடி நான்..
பாதை தோய்வனோ…?

விழி விழித்து நான் படித்து …
பழியாக்கி வலி சுமப்பதோ…?
புரியாத மொழியோடு
மங்கையின் பின்னே…
திரிவதுவா கனவின் அடைவு…?

ஓடோடி உழைத்து ஓய்வேனோ…?
ஒரு பெண்ணிலே அன்பு வளர்த்து …
அவளாலே மதி மறந்து…
நீர் மீதிட்ட கோலமாய்
கோலாறாகிப் போவேனோ…?

அன்றியும்… அஃது
கனவல்ல என் நிஐமுமல்ல…
பெண்ணிலல்ல என் கண்ணும்…
பெண்ணாலல்ல என் எண்ணமும்..

கற்ற கல்வியே என் இளந்துடிப்பு….

அதனால் விதைத்த கனவை ….
அறுவடை செய்வதே
என்  உழைப்பு …..
அஃதே என் இலட்சியம்…
அதிலே என் நிம்மதி….

ஏரூர் நிலாத்தோழி
ஏறாவூர்

ஏகாந்த இரவுகளின் ஏக்கப் போர்வைக்குள் நான் காணும் நிசப்த கனவுகள் கோடி…. அடைவதே என்னொரு உயர்வு… தடை வர  அனுமதி ஏது தளாராதே கனவே…! நெஞ்சாங் குழியோரம் … பஞ்சாக கொஞ்சும் … அஞ்சாத…

ஏகாந்த இரவுகளின் ஏக்கப் போர்வைக்குள் நான் காணும் நிசப்த கனவுகள் கோடி…. அடைவதே என்னொரு உயர்வு… தடை வர  அனுமதி ஏது தளாராதே கனவே…! நெஞ்சாங் குழியோரம் … பஞ்சாக கொஞ்சும் … அஞ்சாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *