வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 04

  • 16

“மேலும் அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக அமைத்துள்ளான். ” (நஹ்ல் :80)

‘நிம்மதியை பெற்றுக்கொள்ளும் அடுத்த விடயம் அன்பை பறிமாறிக்கொள்ளல், அன்பு நிறைந்த குடும்பமாக மிளிருதல் ஆகும்.

“அன்பு செலுத்துங்கள் நிம்மதி தானாக வரும்.” இன்று உலகில் எத்தனையோ மனிதர்கள் வசதிகள் இருந்தும் சண்டைகளும், தற்கொலைகளும் நிகழக் காரணம் அன்புக்கான ஏக்கம் தான்.

“நபி ஸல் அவர்கள் யாருக்காவது உபதேசிக்க நாடினால் முதலில் புன்முறுவல் அல்லது அன்பை வெளிப்படுத்தி ஏதாவது ஒரு விடயத்தை செய்யத்தூண்டுவார்கள்.”

அன்றாடம் எங்களைச்சுற்றி இருப்பவர்களிடம் நேரடியாக அன்பை வெளிப்படுத்த தயங்குகிறோம்.

நபி ஸல் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை ஆரத்தழுவி “இறைவா! இவரை மார்க்க ஞானமுடையவராக ஆக்குவாயாக..” இரு தடவை துஆ கேட்டார்.

இன்று கைப்பேசியில் காலம் தள்ளும் நாம் கையருகே இருக்கும் அன்பானவர்களை ஏனோ புரிந்து கொள்ள, அன்பை வெளிப்படுத்த மறந்து விட்டோம்.

“நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ‘எனது மனைவி ஆயிஷாவே நான் அதிகம் விரும்பும் நபர்’ என்று ஒற்றை வார்த்தையில் அன்பை வெளிப்படுத்தியதை அறியவில்லையா?

அலி( ரழி) கூறினார்கள். “எனது மனப்பெண்ணும், மன அமைதியும் நபிகளாரின் மகள் தான். அவளே எனது வாழ்வு, அவளே எனது நிம்மதி, அவளின் சதைத்துண்டு என் சதையுடனும், இரத்தத்துடனும் கலந்து விட்டது.” என்றார்.

அது மாத்திரமா…. ‘முஆவியா ரழி தனது மகனைப்பற்றி இவ்வாறு கூறினார். “எனது உள்ளத்திற்கு இனிப்பான ஒரு கனி” என்று அருமையான மொழிநடையில் வர்ணித்தார்.

ஒரு அரபுக்கவிஞர் கூறுகிறார்.

“என தருமை மகனே காலம் முழுவதும் நீ என் மகிழ்ச்சி உன் அன்பு ஒரு போதும் குறைவதுமில்லை, குன்றுவதுமில்லை உன்னோடு புன்னகைப்பது போன்ற செல்வம் இவ்வுலகில் வேறில்லை” என்றார்.

“மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ‘கதீஜாவின் அன்பு என் இரத்த நாளங்களில் எல்லாம் கலந்துள்ளது’ என்று ஒரு தடவை கூறினார்கள்.”

இன்னும் பல சம்பவங்களை வரலாற்றினூடாக பார்க்கலாம். ஆக மேற்கூறிய சம்பவங்களிலிருந்து அறியலாம் எவ்வாறெல்லாம் அன்பாக இருந்துள்ளார்கள் அதேபோல் எப்படியெல்லாம் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பதை.

எனவே உலகமே இன்று ஏங்கிக்கொண்டிருக்கும் ஒன்று தான் அன்பு. அதை சரியாக சரியான விதத்தில் உரிய நபருக்கு உரிய முறையில் கொடுத்தால் நிம்மதியை கிடைக்கும், பிரச்சினைகளும் எம்மை விட்டுச்செல்லும்.

எனவே அன்பை வெளிப்படுத்த தயங்கக்கூடாது. தனது எதிர்ப்பார்ப்புக்களை யாராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கே தான் திருப்தியும், மன அமைதியும் கிடைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

முற்றும்…
Faslan hashim
SEUSL
BA ®

“மேலும் அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக அமைத்துள்ளான். ” (நஹ்ல் :80) ‘நிம்மதியை பெற்றுக்கொள்ளும் அடுத்த விடயம் அன்பை பறிமாறிக்கொள்ளல், அன்பு நிறைந்த குடும்பமாக மிளிருதல் ஆகும். “அன்பு செலுத்துங்கள்…

“மேலும் அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக அமைத்துள்ளான். ” (நஹ்ல் :80) ‘நிம்மதியை பெற்றுக்கொள்ளும் அடுத்த விடயம் அன்பை பறிமாறிக்கொள்ளல், அன்பு நிறைந்த குடும்பமாக மிளிருதல் ஆகும். “அன்பு செலுத்துங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *