மாய விதி

  • 20

மாயப் புன்னகை தாளமிடும்
அந்த அசுர வனத்தில்
ஆத்மார்த்தமாக வாழ்ந்து
கொண்டிருக்கும்
கண்ணாமூச்சு ரகங்கள்
கணக்கிலடங்கா ரணங்கள்

யாரோ ஒருவரின்
வரையப் படாத கதையொன்று
மெல்லமாய் சுவாசம்
கொள்வதாய்
அசுரவனத்தின் அகாலங்கள்
அவ்வப்போது ஓர் அசரீரியில்
அமைதி கொள்கிறது

தசாப்தங்கள் விரண்டு
யுகங்கள் நீண்டு
இன்னுமந்த அசரீரி ஒளித்துக்
கொண்டுதான் இருக்கிறது
அந்த கதையை மட்டும்
படிக்க இயலவில்லை

ஒரு கணம்
அந்த மாயாவின் தந்திர லீலை
இந்த அசரீரியிலாவது அரங்கேறிய
இருக்கலாம்

இரவுகளின் நிசப்தங்களுக்குள்
கங்குள்களின் சப்தங்களும்
ஓநாய்களின் ஊழைகளும்
இன்னும் அந்த மாயாவின் அலரலும்
காட்டேரி கதையொன்றை
தூசு தட்டி நினைவூட்டுகிறது

ஏரூர் நிலாத்தோழி
ஏறாவூர்

மாயப் புன்னகை தாளமிடும் அந்த அசுர வனத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சு ரகங்கள் கணக்கிலடங்கா ரணங்கள் யாரோ ஒருவரின் வரையப் படாத கதையொன்று மெல்லமாய் சுவாசம் கொள்வதாய் அசுரவனத்தின் அகாலங்கள் அவ்வப்போது ஓர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *