நெறிப்படுத்தப்பட வேண்டிய மாணவ ஆளுமைகள்

  • 108

கொரோனா பற்றிய செய்திகளால் நிரம்பி வழியும் இன்றைய ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடுதலை தூண்டிய செய்திகள்தான்,

“தன்னியக்க தண்ணீர் குழாயை கண்டுபிடித்த திஹாரி ஹம்தான்”

“அரிவாளுடன் நேரலை கானொளி (Live Video) வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய ‘நிகவரட்டிய சஹான்’ பொலிஸாரால் கைது”

இச் செய்திகளை பார்த்ததும் முதலில் யாரு நிகவரடிய சஹான்? அரிவாளுடன் என்ன பேசியிருப்பான்? பொங்கியுள்ள இனவாதத்தில் எண்ணெய் வார்த்திருப்பான? என பல எண்ணங்களுடன் அந்த இளைஞனை பற்றி தேடுதல் துவங்கினேன்.

தேடுதலில் பத்து நிமிடங்கள் சிங்களத்தில் உரையாடும் கானொளி சிக்கியது. இதில் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி, நிகவரடிய சஹான் 90 கிட்ஸ் பரம்பரை ஒரு இளைஞனாக இருக்கும் எண்ணத்தில் தேடினேன். ஆனால் அவனும் ஓர் 2k கிட்ஸ் மாணவன். (90 கிட்ஸ் பரிதாபம்)

12, 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவனாக இருந்தாலும் பேச்சு மற்றும் அரிவாளுடன் மேற்கொள்ளும் சைகை (Action) அதாவது மாணவர்கள் பயன்படுத்தாத சிங்கள தூஷண வார்த்தைகள், கொலை அச்சுறுத்தல் என்று ஏதோ ஓர் பாதாள உலகத் தலைவனின் பேச்சு போலிருந்தது. இது நடிப்பா அல்லது உண்மையில் நதீரா மக்ஸ் (Nadeera Max), செல்லக்கர மலியா ஆகியோருடன் ஏற்பட்டு பிரச்சினைக்கு அச்சுறுத்தி ஏசுவதா என்பது ஊகிக்க முடியாத வண்ணம் பேச்சு மற்றும் முக அமைப்புகள். என்றாலும் இன்று நேரடி கானொளிகளில் வெளிவரும் சில தனிப்பட்ட ரகசிய பேச்சு வார்த்தை போல் “மகன் கத்தியேங்க?” என்ற தாயின் குரலுக்கு அவசரமாக பதிலளிக்கும் விதம் அரசனாக இருந்தாலும் தாயிக்கு பிள்ளை தான் என்பதை அம் மாணவன் நிரூபித்துவிட்டது.

இக் கானொளியில் குறிப்பிடும் நதீரா மக்ஸ் (Nadeera Max), செல்லக்கர மலியா ஆகியோர் யார் என்று தேடுகையில், அவர்களின் பேச்சு அமைப்புகள் இது ஓர் நடிப்பு, ஒரு சிலரால் திரை மறைவால் இயக்கப்படுகிறது. இதில் பாடசாலை செல்லும் மாணவர்கள் மாத்திரமல்ல 8ශ්‍රේණියේ අයිය என்ற பெயரில் ஓர் முதியவரும் இதில் இடம்பெறுகிறார்.

நதீரா மக்ஸ் (Nadeera Max), செல்லக்கர மலியா ஆகியோர் மற்றவர்களை அச்சுறுத்தினாலும் இடைக்கிடை இந்த Facebook Page கு Like பண்ணுக YouTube Channel ஐ Subscribe பண்ணுக என்ற வேண்டுதல் விடுத்தமை, அவ்வாறே நிகவரடிய சஹானின் குறித்த கானொளி மூலம் சிங்கள சமூக மட்டத்திலும், வீட்டிலும் எதிர்ப்புக்கள் வருவதை தொடர்ந்து ஓர் மாணவனுக்குள்ள பண்புகளுடன் இலங்கையரிடம் மன்னிப்புக் கேட்கும் போது அவன் குறிப்பிடும் தனது YouTube Channel Subscribe ஐ கூட்டுவதற்காக இவ்வாறு மேற்கொண்டாதாக குறிப்பிட்டான். அவ்வாறே சமூக வளைத்தளத்தில் Facebook Page like, YouTube Channel Subscribe என்பவற்றை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு பலரும் குறித்த கானொளிகளை தொடர்ந்தும் மீள் பிரசுரம் செய்தவண்ணமுள்ளனர். You Tube Channel Subscribe, Facebook Page Like என்பவற்றின் இலக்கு வருமான உழைத்தல் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

அதாவது மேற்குறிப்பிட்ட மூன்று சிறுவர்கள் மற்றும் முதியவர் ஆகியவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி அவர்களின் பெயர்களை வைரலாக்கி அவர்களின் பெயரில் Facebook Account, Page, Group, YouTube Channel உருவாக்கி வருமானம் உழைக்கும் இலக்குடன் சிலர் திரைமறைவில் செயற்பட்டுள்ளனர் போல் உள்ளது. மேலும் குறிப்பிட்ட சிறுவர்களின் Facebook Account, 2020 ஜனவரி – ஏப்ரல் இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து பாடசாலை மாணவச் சமூகத்தை இலக்காகக் கொண்டு பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதாவது வானொலி ஆசான், குருகெதர, குரு வரய என்று பல பெயர்களில் வானொலிகள், தொலைக்காட்சி சேவை, இணையத்தளங்கள், வட்ஸ்அப் குழுமங்கள், முகப்புத்தக பக்கங்கள் என அரசாங்கத்தினாலும், தனியாரினாலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக மாணவப் பருவ பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்கவும், அவர்களை அமைதிப்படுத்தி தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கைததொலைபேசியை ஒப்படைத்தனர். இதனால் பாடசாலை மாணவர்களிடம் கைத்தொலைபேசி மற்றும் இணையதளப் பாவனையும் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.

அதாவது எந்தளவு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு பல சான்றுகள் சிறுவர் பாதாளக் குழு கானொளியில் உள்ளது. ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

வீட்டுக்கு வெளியே குறித்த மாணவன் தனது “மன்ன” என்று அழைக்கப்படும் பாரிய கத்தியை வைத்து அச்சுறுத்தி நேரலை கானொளியில் உரையாடும் போது, வீட்டில் இருந்து அம்மா கேட்கிறாள், “கத்தி எங்க?” “என்னிடமுள்ளது” என்று கூறும் பிள்ளை தோட்டத்தில் கத்தியுடன் என்ன செய்கிறான் ‘மரம் வெட்டுகிறானா? இளநீர் பறிக்கிறானா? அல்லது வேறு ஏதும் செய்கிறானா?’ என்று வீட்டை விட்டு வெளியே வந்து தாய் பார்க்கவில்லை. இது தாய் சேய் உறவு விரிசலின் ஓர் வடிவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

குறிப்பிட்ட கானோகளில் தோன்றும் மாணவர்கள் டீன்ஏஜ் என்றழைப்படும் முன் கட்டிளமைப் பருவ வயது மாணவர்களாகும். இப்பருவத்தில் மாணவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்களினால் ஆர்வக்கோளாரு மற்றும் இனக்கவர்சி என்பன ஏற்படுகின்றன. இங்கு குறிப்பிட்ட மாணவர்களிடம் இவ்வாறு செயற்படக் காரணம் ஆர்வக்கோளாராகும்.

இப்பருவ மாணவர்களை கவனமாக கண்டிப்புடன் வளர்க்க வேண்டும்? கண்டிப்பு என்பது அடித்து நோறுக்குதல் அல்ல. மாறாக ஒரு செயற்பாட்டின் விளைவுளை முதல் கட்டமாக அழகாக எடுத்துரைத்ததலாகும். மேலும் தீவிரக் கண்காணிப்புடன் எங்கு போகிறான்? என்ன செய்கிறான்? என்பதை ஓர் உளவாளி போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு மேலாக இப்பருவ பிள்ளைகளை அன்பாக ஆதரவாகத்தான் கண்காணிக்கவேண்டும். வீட்டில் பெற்றோரின் அன்பு ஆதரவு குறையும் போது அதனை வீட்டிக்கு வெளியே தேட ஆரம்பிப்பான். இதனை அன்று வீட்டுக்கு வெளியே பாடசாலையில் தேடினார்கள். ஆனால் இன்று அதற்கு வெளியே சமூகவலைத்தளத்திலும் அன்பு ஆதரவை தேட ஆரம்பித்துள்ளனர்.

உதாரணமாக முன்னிளைமைப் பருவ வயதில் காதல் தொடர்பு உருவாகக் காரணம். இப்பருவத்தில் ஓர் பெண் பிள்ளைக்கு வீட்டில் அன்பு ஆதரவு செலுத்தாத போது, அதை அன்பு ஆதரவை பாடசாலையில் மாணவனொருவன் செலுத்தினால் அவனை இப் பெண் பிள்ளை காதலிக்க ஆரம்பிக்கிறான். இவ்வாறு பாடசாலைக் காதல் அன்பு வலைகள் 90கிட்ஸ்க்கு பாடசாலையில் மாத்திரமே கிடைத்தது. ஆனால் இன்றுள்ள 2k கிட்ஸ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வெளியே சமூக வலைத்தளங்கள் மூலம் இனந்தெரியாத நபர்களால் Chatting மூலம் அன்பு, ஆதரவு, வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றது.

இன்றுள்ள கொரோனா காலம் அனைவரும் தனிமையிலுள்ள காலம். அவ்வாறுதான் குறித்த சிறுவர் பாதாள குழுவும் வீட்டிற்கு வெளியே தனிமையில் உள்ள போது அவர்களின் பெற்றோர்களின் அன்பை விஞ்சிய போலி அன்பை காட்டி உள்ளத்தில் “தானும் ஓர் சண்டியன்” என்ற ஆர்வக்கோளாரை உருவாக்கி வழி நடாத்தப்பட்டதன் வெளிப்பாடே இவை.

அவ்வாறே இலங்கை சமூகத்தில் விரைவாக சமூகமயப்பட்டு வைராலாகும் விடயம் இவ்வகை பயனற்ற கானொளிகள் என்பது கவலையான விடயாகும்.

பெற்றோர்களே! இதற்கு மாற்றமாக நீங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை கைப்பேசியை கொடுத்து முடக்கி வைக்காமல் அவர்களை அன்பாக ஆதரவாக வழிகாட்டினால் அவர்களையும் ஓர் இளம் ஆளுமையாக உருவாக்கலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதே காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இன்று சமூகத்தில் வைரலாகாத அந்தச் செய்தி இதுதான்,

“தன்னியக்க தண்ணீர் குழாயை கண்டுபிடித்த திஹாரி ஹம்தான்”

இவ்வாறு சிறுவர் பாதாளக் குழு வைரலாகி பொலிஸும், சிறுவர் நன்நடத்தை நிலையம் என்று செல்லும் போது சமூகத்தில் வைரலாகாத செய்தியும் ஓர் இளம் கண்டு பிடிப்பாளரும் உள்ளார். அவர்தான் திஹாரியைச் சேர்ந்த ஹம்மாத் பின் இக்ராம் இம் மாணவன் தனது வீரத்தை முகப்புத்தகங்களில் காட்டவில்லை. வீட்டில் பெற்றோரிடம் கூறி பெற்றோரின் ஆதரவுடன் கண்டுபிடித்துள்ளான். தற்போது கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற அடிக்கடி கை கழுவ வேண்டும். ஆனால் பொது தளங்களில் இவ்வாறு தண்ணீர் குழாய் மூலம் கை கழுவும் போது குழாய் பிடி மூலமும் கொரோனா பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு தீர்வாகவே சுயமாக இயங்கும் சவர்காரத்துடன் கூடிய தண்ணீர் குழாயை உருவாக்கியுள்ளான்.

இவ்வாறு அவன் கண்டுபிடித்ததன் அனுபவத்தை கூறும் போது பின்வருமாறு கூறுகிறான்.

“தற்போதைய கொரோனா தொற்று பரவும் இக் காலத்தில் அடிக்கடி கைகழுவும் படி சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இதற்கு ஒரு தீர்வாகவே பெற்றோரின் அனுமதியுடன் இதனை அமைத்தேன்,” என கூறினான்.

அதாவது இம் மாணவன் தான் செய்யவுள்ளது பற்றி நேரலை காணொளி போடவில்லை. பெற்றோரின் ஆதரவுடன் கண்டு பிடித்தான்.

இங்கு ஹம்தானின் தாய், நிக்கவரடிய சஹானின் தாய் இருவரும் தன் பிள்ளைகளுடன் நடந்து கொண்ட முறைகள்தான் அப்பிள்ளைகளின் செயற்பாடுகளில் பிரதிபலித்தது.

பிள்ளைகளை கண்டுபிடிப்பாளனாக மாற்றுவதும் பாதாள உலகத் தலைவனாக மாற்றுவதும் உங்கள் கைகளில் உள்ளது. எனவே உங்கள் பிள்ளைகளை அன்பாக, ஆதரவாக கண்காணிப்புடன் வளருங்கள்.

Ibnuasad

கொரோனா பற்றிய செய்திகளால் நிரம்பி வழியும் இன்றைய ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடுதலை தூண்டிய செய்திகள்தான், “தன்னியக்க தண்ணீர் குழாயை கண்டுபிடித்த திஹாரி ஹம்தான்” “அரிவாளுடன் நேரலை கானொளி (Live Video) வெளியிட்டு…

கொரோனா பற்றிய செய்திகளால் நிரம்பி வழியும் இன்றைய ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடுதலை தூண்டிய செய்திகள்தான், “தன்னியக்க தண்ணீர் குழாயை கண்டுபிடித்த திஹாரி ஹம்தான்” “அரிவாளுடன் நேரலை கானொளி (Live Video) வெளியிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *