இங்கிதம்
- by admin
- 23
இஸ்லாத்தின் பெருமிதம்
இறை தீனின் அடித்தளம்
இறையோறின் போதனை
இங்கிதம்
பேரிடி விழுந்தாலும்
பெருமழை சூழ்ந்தாலும்
ஷிர்க் தவிர்ந்து
சிறு அசைவிலும்
பெற்றோராய் எம்மைப்
பார் பார்த்திட
பெற்றெடுத்தோர் சொல்
புரளாமை
இங்கிதம்
உன்னை நம்பி
உன்னுடன் வந்து
உனக்காய் வாழ்ந்து
உன்னுள் கலந்திட்ட
மனைவி உன்னால்
கலங்கிடாமை
இங்கிதம்
உன்னை தாங்கி
உனக்காய் உழைத்து
உன்னுடன் பயணிக்கும்
கணவன் சொல்
மதித்தல்
இங்கிதம்
உம்மை பெற்றோராக்கி
உம்மால் வந்து
உம்முடன் வாழ்ந்து
உம்மைக் காதலிக்கும்
பிள்ளைகளுடன்
உடனிருத்தல்
இங்கிதம்
இயல்புக்கேற்ற இலக்கணம்
உளமறிந்து உரைத்தல்
உணர்வுகளை மதித்தல்
புன்னகைத்து நேசித்தல்
இதயம் கவர்தல்
ஸலாத்தை பரப்புதல்
முன்மாதிரி வாழ்க்கை
இங்கிதத்தில் இனியன
குறை காணும்
குற்றக் கண்ணாடி கழைதல்
குற்றம் காணும்
குறைக் கண்ணாடி அகற்றல்
இங்கிதத்தில் இன்பம்
இயல்பாய் வாழ்
இங்கிதம் கொள்
ரெளத்திம் பழகு
இங்கிதம் கொள்
மனிதம் காண்
கர்வம் துற
சுயம் போற்று
சுவனம் நுழை
இங்கிதம் இயம்பி
ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.
இஸ்லாத்தின் பெருமிதம் இறை தீனின் அடித்தளம் இறையோறின் போதனை இங்கிதம் பேரிடி விழுந்தாலும் பெருமழை சூழ்ந்தாலும் ஷிர்க் தவிர்ந்து சிறு அசைவிலும் பெற்றோராய் எம்மைப் பார் பார்த்திட பெற்றெடுத்தோர் சொல் புரளாமை இங்கிதம் உன்னை…