கொரோனாவினால் கஷ்டப்படும் கொரன்டின் வாசிகள்

  • 19
புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து Nazreen Nawfel (MBBS UG) அவர்களின் அனுபவப் பகிர்வு

இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பல திட்டங்களில் ஒன்றே வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளை 14 – 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்கின்றமையாகும். இவ்வாறு புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரே மாவனல்லையைச் சேர்ந்த  Nazreen Nawfel. இவர் பங்களாதேஷ்ஷில் மருத்துவத்துறையில் உயர்கல்வியை தொடரும் மாணவனாகும். இவர் தமது அனுபவ பகிர்வை பின்வருமாறு கூறுகிறார்.

“நான் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளேன். இங்கு வெளிநாடுகளில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் சலிப்பான நேரங்களில் (Boring Time) மூன்று மாடிகளிலும் உள்ள இளைஞர் யுவதிகள் சமூக இடைவெளியைப் பேணி ஆடல் பாடல் என நேரத்தை கழிக்கின்றோம்.

இவ்வாறு தனிமைப்படுத்தும் போது உடல், உள மற்றும் சமூக ரீதியாக பல இன்னல்களை முகங்கொடுக்க நேரிடுகின்றோம். குறிப்பாக பிறரை கொரோனா நோய் ஏற்பட்டிருக்குமா என்று சந்தேகக் கண்ணுடன் பார்க்க நேரிடுகின்றது.

மேலும் இங்கு தமக்காக சிரமம் பாரது மத சுதந்தித்தையும் பேணி சேவையாற்றும் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டார்.

முழுமையான அனுபவப் பகிர்வு கானொளி வடிவில்

 

புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து Nazreen Nawfel (MBBS UG) அவர்களின் அனுபவப் பகிர்வு இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பல திட்டங்களில் ஒன்றே வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளை 14…

புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து Nazreen Nawfel (MBBS UG) அவர்களின் அனுபவப் பகிர்வு இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பல திட்டங்களில் ஒன்றே வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளை 14…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *