நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்

  • 18

முன் இருந்த சமூகத்துக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்களுக்கும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏன் என்றால் எங்களுடைய உள்ளத்தில் தக்வா வரவேண்டும் என்பதற்க்காக அதாவது பாவங்களை விட்டு நப்ஸை கட்டுப் படுத்திக் தக்வாவுடன் நாம் இருக்க அல்லாஹ் இந்த நோன்பைக் கடமையாக்கி இருக்கிறான்.

ஒரு மனிதன் பாவம் செய்ய இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். நப்ஸ் அடுத்தது ஷைத்தான். ஆனால் இந்த ரமழான் மாதம் ஷைத்தான் விலங்கிடபட்ட மாதம் ஆகும். தொழச் சொல்லி ஏவியும் தொழாத மனிதர்கள் இன்று தராவீஹ் எத்தனை ரகஅத் என்றாலும் விழுந்து விழுந்து தொழுவுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் ஷைத்தானுடைய ஊசலாட்டம் குறைவு என்பது தான்.

அல்லாஹ் ஷைத்தானை விலங்கிட்டு விட்டு ரமழானை தந்தது மனிதனுடைய உண்மையான ரூபத்தை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஷைத்தான் இல்லாத நேரத்திலும் ஒரு மனிதன் படம், பாட்டு, ஹராமான செயல்கள் என்ற பாவமானவற்றை விட்டு விடாமல் செய்து வருகிறான் என்றால் அது தான் அவருடைய உண்மையான நிலை என்று உணர்த்தச் செய்கிறான் அல்லாஹ்.

எனவே தூய்மையான மாதத்தில் தூய்மையாக இருந்து மரணிக்கும் வரை அந்த தூய்மை நிலைத்து நிற்க ஒவ்வொருத்தருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்

நிந்தவூர் றிசாமா
SEUSL

முன் இருந்த சமூகத்துக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்களுக்கும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏன் என்றால் எங்களுடைய உள்ளத்தில் தக்வா வரவேண்டும் என்பதற்க்காக அதாவது பாவங்களை விட்டு நப்ஸை…

முன் இருந்த சமூகத்துக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்களுக்கும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏன் என்றால் எங்களுடைய உள்ளத்தில் தக்வா வரவேண்டும் என்பதற்க்காக அதாவது பாவங்களை விட்டு நப்ஸை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *