வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.

  • 10

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்!

சிலரது தோட்டம்
பூக்கள் நிறைந்து வரவேற்கும்
சிலரது தோட்டம்
ஒரு சில பூக்களோடு
ஓரமாய் ஒழிந்திருக்கும்

சிலரது தோட்டம்
செடிகளோடு மட்டுமே
செழிப்பாக ஆடி அசையும்

சிலரது தோட்டம்
செடிகளோடு முட்கள்
நிறைந்திருக்கும்
பூக்களே இல்லாமல்

சிலரது தோட்டம்
செழிப்பே இன்றி
சிதறிப்போயிருக்கும்
சின்னாபின்னமாக.

சிலரது தோட்டம்
பூத்துக் குலுங்காவிட்டாலும்
செம்மையாக செதுக்கப்பட்டிருக்கும்.

சிலரது தோட்டம்
இரம்மியமாக
இரசனையோடு இருக்கும்

சிலரது தோட்டம் ஆரவாரமாக
சிலரது தோட்டம் அமைதியாக

ஒவ்வொரு தோட்டமும்
ஒவ்வொரு விதம்
செடிகளும் பூக்களும் பலவிதம்

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்! சிலரது தோட்டம் பூக்கள் நிறைந்து வரவேற்கும் சிலரது தோட்டம் ஒரு சில பூக்களோடு ஓரமாய் ஒழிந்திருக்கும் சிலரது தோட்டம் செடிகளோடு மட்டுமே செழிப்பாக ஆடி அசையும் சிலரது தோட்டம் செடிகளோடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *