அந்த இரவு

  • 11

ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில்

இரவுகள் ஆயிரம்
இனிய கதைகள் பேசும்
இவ்வாண்டின்
இன்பம் தரு
அந்த இரவின் கதை இது

வெட்கித் தலை குனியாது
வெடுக்கென முகம் சுழியாது
வெற்றிக்காய் என்றெண்ணி
வெறுமனே கொஞ்சம் கேளீர்

அழகிய இராப்பொழுது
அவனின் பேச்சின் மகிமை
அவனின் அன்புக் கட்டளைகள்
அவனின் எதிர்பார்ப்புக்கள்
அத்தனையும் சுமந்த
அல்குர்ஆன் இறங்கிய
அற்புத இரவே அது
லைலதுல் கத்ர்

ஆடிக் கழிவு போல்
ஓடி வந்து
கோடி நன்மைகள் பெருக்கித்தரும்
ஆயிரம் மாதங்களையும் விட
அதுவே சிறந்த இரவு
லைலதுல் கத்ர்

வானவர் கூட்டம் பூமிதனில்
வாகாய் இறங்கி
வசதியாய்
வலம் வரும்
வண்ணமான இரவு
லைலதுல் கத்ர்

மன்றாடி
மனந்திரும்பும்
மாந்தர் மனம்
மகிழ்ந்து பூரிக்க
சாந்திகள் சொரிந்திடும்
சாந்தமான இரவு
லைலதுல் கத்ர்

களைப்பின் விழிம்பில்
கடின பாதங்களும்
கரைந்து தோய்ந்து
கனதி பாராது
நின்று வணங்கினால்
நிம்மதியுறும் செய்தியொன்றை
நித்தமே தாங்கிய இரவு
“முன் செய்த பாவக்கறைகள்
முழுவதுமாய் கழுவப்படுமாம்”
லைலதுல் கத்ர்

இரட்டை ஐந்துகளாம்
இறுதிப் பத்தின்
ஒற்றை இரவுகளில்
ஓர் நாள் வந்திடுமே
இனிமை கொண்டு
பக்குவம் பூண்டு
பறக்கத் சொரியும்
இவ்வாண்டின்
முதலிரவு!
அதுவே லைலதுல் கத்ர் இரவு!

ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில் இரவுகள் ஆயிரம் இனிய கதைகள் பேசும் இவ்வாண்டின் இன்பம் தரு அந்த இரவின் கதை இது வெட்கித் தலை குனியாது வெடுக்கென முகம் சுழியாது வெற்றிக்காய் என்றெண்ணி…

ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில் இரவுகள் ஆயிரம் இனிய கதைகள் பேசும் இவ்வாண்டின் இன்பம் தரு அந்த இரவின் கதை இது வெட்கித் தலை குனியாது வெடுக்கென முகம் சுழியாது வெற்றிக்காய் என்றெண்ணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *