நல்லெண்ணம்

நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தெரியாத தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து நமக்குள் வைத்துக் கொண்டு இரட்டை வேடம் பூண்டு பழகுவது தான்.

ஆனால் எங்களின் பார்வையில் நல்லவராக தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையில் கெட்டவராகவும் அல்லது வேறு ஒரு வகையிலும் எங்களிடம் கெட்டவராக தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு வகையிலும் பார்க்க கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

ஏன் எனில் வெளித்தோற்றத்தை பார்க்கும் எம்மை போல அல்லாஹ் வெளித்தோற்றத்தை பார்க்கவில்லை. மாறாக இறைவன் உள்ளங்களையே பார்க்கிறான்.

ஒருவர் செய்யும் ஒரு செயல் அந்த மனிதன் எந்த நிலையில் ஏன்? எதனால்? எதற்காக? செய்கிறான் என்பவை அறியாமல் எமக்கு வெளியில் தெரிகின்றவைகளைத் வைத்து இவர் கெட்டவர், நல்லவர் என்று முடிவு செய்வது தவறாகும்.

எனவே தங்கள் முன் உண்மையாக தெரிபவை அதை செய்த அந்த நபருக்கும் அல்லாஹ்வுக்குமே தெரியும் அதன் உண்மையான உண்மை தன்மை.

“நான் கண்ணால பார்த்தன் அவ, அவன் இப்படி” என்று அடுத்தவர்களிடம் நீங்கள் தவறாக புரிந்த விடயங்களை சொல்லி அவதூறு செய்யாதீர்கள், அநியாயம் அளிக்க பட்டவனின் துஆ இறைவினிடம் நேரடியாக சென்று விடும்.

எனவே பிறரை பற்றி சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் அனைவரையும் நல்ல எண்ணத்துடன் பார்ப்பதன் ஊடாக எங்கள் யார் மனதிலும் ஷைத்தானின் குணம் ஆகிய பொறாமை, போட்டி, வஞ்சகம் என்ற கெட்ட குணங்களை தவிர்த்து அனைவருடனும் நல்ல உறவோடு வாழ முடியும்.

நிந்தவூர் றிசாமா
SEUSL

நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தெரியாத தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து நமக்குள் வைத்துக் கொண்டு இரட்டை வேடம் பூண்டு பழகுவது தான். ஆனால் எங்களின் பார்வையில்…

நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தெரியாத தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து நமக்குள் வைத்துக் கொண்டு இரட்டை வேடம் பூண்டு பழகுவது தான். ஆனால் எங்களின் பார்வையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *