வெற்றியின் இரகசியம்

  • 10

“இன்று பலருக்கு சாதிக்கும் ஆசை நிறைய காணப்படுகிறது.”

“நான் அப்படியாகவேண்டும், இவரைப்போல் சாதிக்கவேண்டும், இந்த அடைவை அடையவேண்டும். என்று பலவிதமாக கனவு கண்டுக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.”

ஆனால் அதை அடையும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல். அதே போல் அதை அடையும் போது ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தடுமாற்றம். போன்ற விடயங்களால் பின்வாங்குகின்ற பலரைப் பார்க்கலாம்.

லட்சியத்தை சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தின் மீது குறியாக இருக்க வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் இது அல்லாமல் சாதிக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்து போதாது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றியாளர்களின் சாதனை பெரியவை. அதே போல் சோதனை கடுமையானவை.

ஆக ஒரு இலக்கை அடைவதில் ஏற்படும் தோல்வி, கஷ்டம் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல. தோல்வியில் இருந்து பெற்ற பாடத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே நம்முடையே சாமர்த்தியம்.

ஒவ்வொரு துன்பமும் ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு நெஞ்சு பொறுக்காத வேதனையை தம்மோடு அதற்கு சமமான அல்லது அதை விட பெரிய பயனுள்ள விதையை சுமந்தே வருகின்றன. (நெப்போலியன் ஹில்)

ஒரு முறை சார் ஐசக் நியூட்டன் தனது வெற்றிக்கான காரணத்தை இவ்வாறு கூறினார்.

” நான் ஒரு மேதை என்பதனால் அல்ல எனது தொடர் முயற்சியே வெற்றிக்கு காரணம்” என்றார்.

இன்று பெயர் கூறி புகழும் சாதனையாளர்கள் அனைவரும் தோல்வி எனும் கசப்பை சுவைத்தவர்களும், விடா முயற்சியோடு ஈடுபட்டவர்களே ஆவார்கள்.

“ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் என்ற பெண் 06 வயதில் கண்களை இழந்தாள். கேட்கும் திறமையையும் இழந்தாள். என்றாலும் சளைக்கவில்லை ஆசிரியரின் துணையோடு 20 வயதில் ஒரு எழுத்தாளராக மாறி “ஹானர்ஸ் பட்டம்” பெற்றாள் காரணம் விடா முயற்சியே.

எனவே முயற்சிகள் செய்வதற்கு முட்டுக்கட்டையாக தம் தோல்விகளை காரணமாக வைத்து விடக்கூடாது.

மோசமான அனுபவங்கள் தான் நம்மை இன்னும் புத்திசாலியாக்கும் என்பதை மறக்கக்கூடாது.

When the going gets tough.
The tough get going

களைப்பு உன்னை கோளையாக்கி விடாதே
உன் கனவுகளை அது களவாட விடாதே

Faslan hashim
SEUSL
BA ®

“இன்று பலருக்கு சாதிக்கும் ஆசை நிறைய காணப்படுகிறது.” “நான் அப்படியாகவேண்டும், இவரைப்போல் சாதிக்கவேண்டும், இந்த அடைவை அடையவேண்டும். என்று பலவிதமாக கனவு கண்டுக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.” ஆனால் அதை அடையும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல். அதே…

“இன்று பலருக்கு சாதிக்கும் ஆசை நிறைய காணப்படுகிறது.” “நான் அப்படியாகவேண்டும், இவரைப்போல் சாதிக்கவேண்டும், இந்த அடைவை அடையவேண்டும். என்று பலவிதமாக கனவு கண்டுக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.” ஆனால் அதை அடையும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல். அதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *