அறிஞர்களின் பொன்மொழிகள்

 قــال الإمام ابن القيـم -رحمــه الله-:

فأفضــل الصائميــن أكثرهــم ذكــراً لله عــز وجــل فــي صومهــم.

 [ الوابـل الصيــب (١٥٣) ]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நோன்பாளிகளில் மிகச்சிறந்தவர்கள் தங்களுடைய நோன்பில் அல்லாஹ்வை அதிகம் ஞாபகம் கூர்ந்தவர்களாவர். (நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், பக்கம்: 153)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

أفضل العبادات البدنية الصلاة ثم القراءة ثم الذكر ثم الدعاء.

( مجموع الفتاوى ( ٤٠٢/١٠ )

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உடல் ரீதியான வணக்கங்களில் மிகச்சிறந்தது தொழுகையாகும், பின்பு (குர்ஆன்) ஓதுவதாகும், அடுத்தது (அல்லாஹ்வை) ஞாபகம் கூர்வதாகும், அடுத்தது பிரார்த்தனை செய்வதாகும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 10, பக்கம்: 402)

 قال الإمام ابن رجب الحنبلي -رحمه الله-:

دسائس السوء الخفية تُوجِبُ سُوءَ الخاتمة .

 [ جامع العلوم والحكم – ص ١١٧ ]

இமாம் இப்னு ரஜப் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ரங்கத்தில் மறைந்தள்ள பாவம் இறுதி முடிவு கெட்டதாக அமைய கடமையாக்கிவிடும். (நூல்: ஜாமிஉல் உலூமி வல் ஹிகம், பக்கம்: 117

 قــال الإمام ابن القيـم -رحمــه الله-:

الجزع والتسخط والتشكي يزيد في المصيبة ويذهب الأجر.

( مدارج السالكين (١٥٥/٢)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொறுமை இழப்பது கோபப்படுவது முறைப்பாடு சொல்வது போன்றவை சோதனையை அதிகரிக்கும், கூலியை இல்லாமலாக்கும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 155)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قــال الإمام ابن القيـم -رحمــه الله-: فأفضــل الصائميــن أكثرهــم ذكــراً لله عــز وجــل فــي صومهــم.  [ الوابـل الصيــب (١٥٣) ] இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

 قــال الإمام ابن القيـم -رحمــه الله-: فأفضــل الصائميــن أكثرهــم ذكــراً لله عــز وجــل فــي صومهــم.  [ الوابـل الصيــب (١٥٣) ] இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *