இப்படிக்கு ரமழான்

  • 12

உனக்காய் வந்தேன் உன் வாசல்
மிகுந்து வரவேற்றாய்
பூரித்து போனேன்

நாட்கள் நகருகின்றது
உன்னை விட்டும்
நான் விடை பெற

நான் நகரும் நாட்கள்
உன் பாவ அழிவுக்கே
மனமுவந்து என்னை
கடைசி வரை ஏற்றுக்கொள்

என் தவணை முடிய
மூன்றாக என்னை பங்கிட்டு
முதல் பத்தாய்
உன்னை விட்டுப் போகிறேன்

ஆனால் நீயோ
முதல் நாளன்று
என்னை வரவேற்றது
போல் இல்லை
இப்போது உன் வரவேற்பு
மங்கியது ஏனோ

பழகப் பழகப்
பாலும் புளிக்கும்
நானும் புளித்து விட்டேனோ
மறந்து விட்டாய் போலும்
என் ஒவ்வொரு உதயமும்
நான் உனக்காய்
கொண்டு வரும் அருள்களை

அல்லாஹ்வின் அருளோடு ரமழானில்
நான் பிறந்தேன்
பாவ சுமை மக்கள் தலை தாக்க
அதை இறக்கி வைக்க வந்த
நானே இன்று கால ஓட்டமாய்
ஓடிக் கொள்கின்றேன்
உன்னையும் இழுத்துக் கொண்டு

ஆனால் நியோ
என் ரஹ்மத் அறியாமல்
என்னை தட்டிக் கழிக்கின்றாய்
மனிதா! நன்றி மறவாதே

அடுத்த முறையும் நான் இருப்பேன்
இதே போல் வருகை கொள்வேன்
சபதம் கொள்கின்றேன் உன்னிடம் நான்

கொஞ்சம் யோசி
நீயும் என்னைப்போல்
இருப்புக் கொள்வாயா என்று

பாவம் செய்யும் மனிதனைப்
படைத்து அதற்கு
பாவக் கறை நீக்கியையும்
தந்த இறைவனின் கட்டளை மறந்து
இன்னும் முடங்கி கிடக்கின்றாயே
இறை பிடி மிகப் பலமானது

இரண்டாவது பத்தில் இருக்கின்றேன்
தவ்பா செய்து மீண்டு கொள்
இன்னும் என்னை பூரணப்படுத்தி
குறை இன்றி வழி அனுப்பு
நாளை மறுமையில்
உன் ஒளி விளக்காய்
ரய்யான் வாயிலில்
நான் உனக்காக காத்திருப்பேன்

இப்படிக்கு நான் தான் ரமழான்

நிந்தவூர் றிசாமா
SEUSL

உனக்காய் வந்தேன் உன் வாசல் மிகுந்து வரவேற்றாய் பூரித்து போனேன் நாட்கள் நகருகின்றது உன்னை விட்டும் நான் விடை பெற நான் நகரும் நாட்கள் உன் பாவ அழிவுக்கே மனமுவந்து என்னை கடைசி வரை…

உனக்காய் வந்தேன் உன் வாசல் மிகுந்து வரவேற்றாய் பூரித்து போனேன் நாட்கள் நகருகின்றது உன்னை விட்டும் நான் விடை பெற நான் நகரும் நாட்கள் உன் பாவ அழிவுக்கே மனமுவந்து என்னை கடைசி வரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *