அம்மா

அம்மா கைப்பட தீட்டுகிறேன்
சுழன்றோடும் காலச் சக்கரத்தில்
சுவடுகளாய் என் மனதில்
பதிந்துள்ள நினைவுகளை

என் விழிகளில் அழுதிட
இமைகளில் சிரித்திட
உணர்வுகளில் உறைத்திட
இன்னிசையை இரசித்திட
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
இனிய தேவதை நீதான் அம்மா

அகவை பல கடந்தும்
ஆவல் கொள்கிறேன்
மீண்டும் உன் மடியில்
மழலையாக தவழ்வதற்கமெழுகென உன்னை உருக்கி
மெதுவாக என்னைச் செப்பனிட்டு
என்னை சுடராய் மாற்றி விட்டாயே

நான் சிரித்தால்
உன் உதடுகள் சிரிக்கும்
நான் அழுதால்
உன் கண்ணில் தூரல் காண்பேன்
நோயொன்று வந்தால
நொந்து நூலாகுவாய்
பசியென்று சொன்னால்
புசிக்க ருசியாய் ஊன் அளிப்பாய்

நான் உலகில் அவதரிக்க
நீ மறு ஜனனம் எடுத்தாயே
நான் கண் மூடி உறங்க
நீ பல ராத்திரிகள்
தூக்கம் தொலைத்தாயே

வாகைகள் நான் சூடினால்
மலர் ஆரங்கள் சூடிடுவாய்
தோல்வியதை நீ கண்டால்
நான் துவண்டு விடாது
தோள் கொடுப்பாய்

உலகின் உறவுகளை
உன்னில் கண்டேன்
உண்மைக் காதலை
உன் கண்ணில் கண்டேன்
என் கண் மணியே

என் முதல் ஆசனும் நீயே
நான் பற்றி ஏறிய
வலுவான ஏணியும் நீயே
நான் சிகரங்கள் தொட
வித்திட்டவளும் நீயே

என் வானில் பௌர்ணமியும் நீயே
என் காலங்களில் வசந்தமும் நீயே
நான் சலிக்காமல் பார்க்கும் ஓவியம் நீயே
தெவிட்டாமல் படிக்கும் காவியமும் நீயே

இறைஞ்சுகிறேன் இறைவனிடத்தில்
உனக்கான நன்றிக்கடனை உவகையுடன்
நிறைவேற்ற வாய்ப்புக்களைத் தரும்படி

Mishfa Sadhikeen

அம்மா கைப்பட தீட்டுகிறேன் சுழன்றோடும் காலச் சக்கரத்தில் சுவடுகளாய் என் மனதில் பதிந்துள்ள நினைவுகளை என் விழிகளில் அழுதிட இமைகளில் சிரித்திட உணர்வுகளில் உறைத்திட இன்னிசையை இரசித்திட கடவுளால் பரிசளிக்கப்பட்ட இனிய தேவதை நீதான்…

அம்மா கைப்பட தீட்டுகிறேன் சுழன்றோடும் காலச் சக்கரத்தில் சுவடுகளாய் என் மனதில் பதிந்துள்ள நினைவுகளை என் விழிகளில் அழுதிட இமைகளில் சிரித்திட உணர்வுகளில் உறைத்திட இன்னிசையை இரசித்திட கடவுளால் பரிசளிக்கப்பட்ட இனிய தேவதை நீதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *