நித்யா… அத்தியாயம் -38

  • 16

”நீ…. நீயா?” அவள் வெடவெடத்துப் போனாள்.

அங்கே கோரமாகச் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன்,

”அடி ஒனக்கு என்னவிட அந்த வினோத் எப்டி ஒசந்தவனானான். ஒன்ன” கோபத்துடன் நெருங்கியவனை,

“பிளீஸ் ஏதும் செஞ்சிடாத என்ன விட்ரு” கதறினாள்.

“போடி நா ஒன்ன எவ்ளோ பைத்தியமா விரும்பின தெரியுமாடி ஆனா நீ  நீ என்ன மதிக்கவேயில்ல”

அவளது முடியைப் பிடித்து இழுத்தான். அவள் கதறியதும் விட்டு விட்டு,

“பாவி பாவி என்ன கொலகாரனாக்க போறதே நீ தான்டி”

”விக்னேஷ் விக் னேஷ்”

கதறியவளது வாயைப் பொத்தி அடக்கினான். அந்த பனியிரவு மழைபோலவே அவளது ஆத்மாவும் ஓய்ந்து கொண்டிருந்தது. காலையில்,

”டேய் விக்கி அவ செத்துட்டாடா” பதற்றத்துடன் கார்த்திக் சொன்னதும்,

தனது சேர்ட் பட்டனை போட்டபடி முகத்திலிருந்து சிறுபுன்னகையுடன்,

“இப்போ அந்த வினோத் இந்த பாழாப்போன பொணத்தயா கட்டிகுவான்”

பயங்கரமாகச் சிரித்துவிட்டு, பயத்துடன் நித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் பக்கம் திரும்பி,

“கூல் டா இந்த பொணத்த தூக்கி பாத்ரூம்ல போட்டுடு மறக்காம தண்ணிய தொறந்துவுடு”

தனது காரியம் வெற்றிபெற்ற களிப்பில் வீடு நோக்கி சென்றான் விக்னேஷ்.


இவ்வளவும் சொல்லி முடிந்த லட்சுமி அழத் தொடங்கினாள். அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், சட்டென எழுந்து,

”அப்போ விக்னேஷ் தா எங்கக்காவ கொல பண்ணானு தெரிஞ்சும் ஏ அவன் ஜெயிலுக்கு போகல்ல?” கத்தினாள்.

பெருமுச்சுடன் அவளை நெருங்கி,

”சரியான புரூப் பொலிசுகு இன்னும் கெடக்காததால அந்த கேஸ க்லோஸ் பண்ணிட்டாங்க” கண்கள் சிவப்பேற அவளை முறைத்தவள்,

”அப்போ வினோத் என்ன பண்ணாரு? அவர தானே அக்கா தேடி போனா”

லட்சுமி அவளிடம் பயம் கலந்த பார்வை வீசினாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUS

”நீ…. நீயா?” அவள் வெடவெடத்துப் போனாள். அங்கே கோரமாகச் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன், ”அடி ஒனக்கு என்னவிட அந்த வினோத் எப்டி ஒசந்தவனானான். ஒன்ன” கோபத்துடன் நெருங்கியவனை, “பிளீஸ் ஏதும் செஞ்சிடாத என்ன விட்ரு”…

”நீ…. நீயா?” அவள் வெடவெடத்துப் போனாள். அங்கே கோரமாகச் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன், ”அடி ஒனக்கு என்னவிட அந்த வினோத் எப்டி ஒசந்தவனானான். ஒன்ன” கோபத்துடன் நெருங்கியவனை, “பிளீஸ் ஏதும் செஞ்சிடாத என்ன விட்ரு”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *