அரசியல் அனாதைகள்

  • 14

தென் இலங்கையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 100 000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்களை பிரதிநிதிப்படுத்துவப்படுத்தி பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எவரும் தெரிவாகியில்லை. இதனால் தென் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர்.

இன்று நாட்டில் விருப்பு வாக்கு முறைமை காணப்படும் விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுயிலுள்ள இந்நாட்டிலே, தென்மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் வாக்காளர் தொகையையும் எடுத்து நோக்குகின்ற போது ஒன்றிணைந்து வாக்காளிப்பதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வோர் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளும் வாக்குப்பலம் காணப்படுகின்றது. என்றாலும் இதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை பிரதேச அரசியல்வாதிகள் பள்ளிவாசல்கள் மற்றும் சமுக நல அமைப்புகளுடன் இணைந்து  மேற்கொள்ளவில்லை. இதனால் இதுவரை எவரும் மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகில்லை

இந்நிலையில் அடுத்த உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்பவற்றுக்காக புது எல்லைகள் வகுக்கப்படுவதொடு புது பிரதேச சபைகளும் உருவாக்கப்படுகின்றது. மேற்படி புதிய தேர்தல் சட்ட மூலம் நாட்டில் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மை சமுக உள்ளுராட்சி அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு வைக்கும் நியதியின் அடிப்படையில் எல்லை பிரிக்கும் ஆபாயம் உள்ளது

உதாரணமாக புதிய தேர்தல் சட்டம் மூலம்  அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியில் முஸ்லிம்கள் வாழுகின்ற அதுரலிய பிரதேச சபையை, போர்வை முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜிதை ஓர் எல்லையாக கொண்டு 2 பிரதேச சபையாக பிரித்தால் அதுரலிய பிரதேச சபைக்கான முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைத்துவிடும். தற்போது 1000-1300 கும் இடைப்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் அதுரலிய பிரதேச சபைக்கு உள்ளது. இது அவ்வாறு பிரிக்கப்பட்டால் 5௦௦ஆக குறையும் அபாயம் உள்ளது. இதனால் தற்போது உள்ள பிரதேச சபைக்கான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். அல்லது இல்லாமல் ஆகிவிடும்.

இது உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய எல்லை பிரிப்பதன் ஊடாக தென் இலங்கை முஸ்லிம்களை அரசியல்  அனாதையாக்கும் புதிய முறையாகும்.

புதிய தேர்தலுக்காக மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளுக்கான எல்லைகளோ வட்டாரங்களோ அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளோ முடிவு செய்யவில்லை. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இவ்விடயங்களில் முஸ்லிம் பிரதேச அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டும்.

Ibnu Asad

 

தென் இலங்கையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 100 000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்களை பிரதிநிதிப்படுத்துவப்படுத்தி பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எவரும் தெரிவாகியில்லை. இதனால் தென் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாக…

தென் இலங்கையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 100 000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்களை பிரதிநிதிப்படுத்துவப்படுத்தி பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எவரும் தெரிவாகியில்லை. இதனால் தென் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *