மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று வந்தேன்

  • 7

இருட்டு சூழ ஒன்னும் விளங்க வில்லை. நேரத்திற்கு சாப்பாடு வகை வகையான சத்துக்கள் ஒரு வழியாக வந்து கொண்டிருந்தது. கண் திறக்க முடியவில்லை.

பழகி விட்டேன், கொஞ்சம் நிறை கூடினேன். இடைவெளி விட்டு தந்தது ஏதோ ஒரு வகை மெத்தை போல இருந்தது.

ஏதோ சின்ன சின்ன சத்தங்கள் காதில் விழ, கால் வலித்தது போலும் எனக்கு எட்டி உதைத்தேன்.

அல்லாஹ் நான் இப்படி உதைத்து இருப்பேன் என்று எனக்கு தெரியாது. யாரோ ஒருத்தி அழு குரல்.

பிறகு சொல்ல முடியாத அளவு சிரிக்கிறாள். ஹபி, இங்க பாருங்க கைய தாங்க. என்று என்னை மெதுவாக தடாவ வைத்தாள் அவள் முகம் எனக்கும் தெரியாது என் முகம் அவளுக்கும் தெரியாது.

எனக்கு தூக்கம் போயிட்டு போலும், என்னங்க துடிப்ப காணல என்ன என்று அவள் துடிக்க.

அந்த சத்தம் கேட்டு நான் மீண்டும் எட்டி உதைத்தேன். மீண்டும் அதே அழுகை அவள்.

பார்த்தீங்களா என்ன ஆள் உங்க பிள்ள. டேடாட சத்தம் கேட்டு உதைக்கிறான். “வாடா எங்க செல்லக் குட்டி வெளில” அப்போ இருக்கு என்று சொல்ல எனக்கு இந்த பேச்சு ரொம்ப புடிச்சி இருந்திச்சி. அவள பார்க்கணும் போல ஒரு அவா.

அவள் என் உதை வலி தாங்கி சிரிக்கிறாள். எனக்கு இப்போது அழுகையாக உள்ளது. இவ்வளது வலி என்னால் கிடைத்தும் அவள் சிரிக்கிறாள் என்று. காலம் கடந்தது நானும் ரொம்ப சொகுசாக இருந்தேன்.

ஒரு நாள் இரவு, எனக்கு ரொம்ப கஷ்டம் ஆக இருந்தது நானும் எவ்வளவு நேரம் தான் இருட்டுக்க இருக்குற எனக்கு ரொம்ப கோபம்.

என்னமோ தெரியா எனக்கு நடந்ந. திடீர் என்று அவள் அழுகிறாள் இல்லை இல்லை துடிக்கிறாள், இல்லை இல்லை, மரண வலி உணர்ந்தாள் அவள்.

முடியல அல்லாஹ் என்று கதருக்கிறாள். கத்துகிறாள் அவள் உலத்துகிறாள் அவள் கையை அவளே கடிக்கிறாள்.

எங்கோ கொண்டு போகிறார்கள். மகள் அழாதே கொஞ்சம் நேரம் தான், என்று யாரோ சொல்ல, தங்கம் அழாதே மா, என்று ஒரு சத்தம், என்னங்க ஏன் நீங்க அழுரிங்க என்று வலியில் துடித்த அவள் யாருக்கோ ஆறுதல் சொல்கிறாள். பாரு உயிர் போகுது அதுல அவள் ஆறுதல் கூட சொன்னாள் பாரு அதான் சொல்ல வார்த்த இல்ல.

நானும் குலுங்கி குலுங்கி போய்க் கொண்டு தான் இருக்கிறேன். நின்று விட்டது என் குலுக்கம். நான் வந்து சேர்ந்துட்டன் போல.

டொக்டர் என்று சத்தம் அப்பறம் எனக்கு என்ன நடந்த என்று எனக்கும் தெரியா. அவள் கதறல் மட்டும் என் காதில் ஒலித்தது.

துடிக்கறாள் கத்துறாள் கதருக்கிறாள். பின்பு ஒரே ஒரு சத்தம் உலகமே அந்த சத்தம் தாங்க ஈடாகாது.

அப்ரோம் அந்த சத்தம் திடீர்னு நின்று விட்டது.

அப்ரோம் “ம்மா ம்மா ங்ம்கா ங்ம்கா” என்று ஒரு வித்தியாசமான ஒரு சத்தம் அட அது என் வாயில இருந்து புது சத்தம்.

என் கண்ணு ரொம்ப கூசினிச்சி என்ன வெளிச்சம் அப்ப தான் வெளில வந்திருக்கன் போல.

ரெத்தம் ஆறா ஓடினிச்சி. என் மேல் எல்லாம் ரெத்தம் யாரோ என்ன கொண்டு போய் என்ன மெல்ல துடைச்சாங்க. ஆனால் அவள் சத்தம் காதில் எனக்கு விழல.

எல்லாரும் ஏதோ ஏதோ கதைக்காங்க. எனக்கு அந்த வாசகம் பாடம். அந்த லேடி மரணிச்சிட்டா, அந்த வாசகம் கேட்க. கணவர் மட்டும் உள்ள எடுங்க என்று யாரோ சொல்ல, அந்த செய்தி கேட்டு அவன் துடிக்கின்றான். முத்தமிட்டு முத்தமிட்டு கதருக்கின்றான். ரெத்த ஆறாய் கிடக்கும் அவளை கண்டு,

எனக்கு அவள பார்க்கணும் போல, அவளால தானே நான் வெளில வந்த. என்னால தாங்க முடியாம நானும் அழுறன்.

ம்ஹும் ம்ஹும் ஒரு ஒரு பெரிய சத்தம், டொக்டர், என்று அந்த முத்தமிட்டவர் கத்த அனைவரும் சூழ.

ஏதோ ஏதோ செய்றாங்க. இப்படி ரெண்டு மூணு மணித்தியாலம் போயிருக்கும்.

அப்போ யாரோ என்ன வாங்கி முத்தமிட்டு என் முஜும் சிக்கிட்டு சட்டனு என் கண்ணுல ஒரு துளி அங்க பார்த்தா அது தானாம் கண்ணீர் துளியாம்.

பிறகு நிறைய பேரு என்ன பார்த்து கண்ண பாரு டேடா தான் வாய பாரு, என்று சொல்ல. நானும் யாரு டா அது என்று பார்த்தா அவர் தான், எனக்கு டேடா இவர் தான் என்று காண்பித்தாள் என்னை பெற்ற என் தேவதை என் தங்கம் என் அழகி என் உலகம் அவள் தான் என் தாய்.

மதியுங்கள் உங்கள் தாயை, மதியுங்கள் பெண்களை ஒவ்வொரு பெண்ணும் தாய் தான்.

உங்களை பெற்றவளும் உங்களை தந்தை ஆக்கியவளும் உங்ளுக்கு என்றுமே உயிர் தான். ஆண்களே நீங்கள் உணரா வலி பிரசவம். அதுவே அவள் உணர்ந்தது போதும் உங்கள் நடத்தை பேச்சு உங்கள் தாயையும் சுடக் கூடாது உங்கள் மனைவியையும் சுடக் கூடாது.

அன்னை தினம் இன்று அல்ல, எத்தினமும் அன்னையர் தினம் தான்.

நிந்தவூர் றிசாமா
SEUSL.

இருட்டு சூழ ஒன்னும் விளங்க வில்லை. நேரத்திற்கு சாப்பாடு வகை வகையான சத்துக்கள் ஒரு வழியாக வந்து கொண்டிருந்தது. கண் திறக்க முடியவில்லை. பழகி விட்டேன், கொஞ்சம் நிறை கூடினேன். இடைவெளி விட்டு தந்தது…

இருட்டு சூழ ஒன்னும் விளங்க வில்லை. நேரத்திற்கு சாப்பாடு வகை வகையான சத்துக்கள் ஒரு வழியாக வந்து கொண்டிருந்தது. கண் திறக்க முடியவில்லை. பழகி விட்டேன், கொஞ்சம் நிறை கூடினேன். இடைவெளி விட்டு தந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *