நகருக்கு ஆடை வாங்க வருபவர்களே! இது உங்களுக்குத்தான்

  • 16
நிகவெரட்டியவிற்கு ஆடை வாங்க வருபவர்களா நீங்கள், உங்களுக்கு தான்

அருளாளன் அன்பாளன் ஏக வல்லோன் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ்.

அல்லாஹ் எம் அனைவருக்கும் செய்த மாபெரும் அருள் இன்னுமொரு ரமழானை எமக்கு இந்த இக்கட்டான நிலையில் அருளியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

“ரமழான் வந்தால் கொடிகட்டிப்பறக்கும் கஞ்சி வாளிகளை இம்முறை காணவில்லை. தராவீஹ் என அல்லோலப்படும் சமூகத்தை காணவில்லை. சோட்டீஸ் வண்டிகளை காணவில்லை. அந்த பாட்டிட இந்த பாட்டிட என போட்டி போடும் இப்தார்களுக்கு செல்வோரை காணவில்லை. பள்ளிக்கு அஸருக்கு மட்டுமாவது செல்லும் இளைஞர் கூட்டத்தை காணவில்லை.” இப்படியான வாசகங்கள் நான் நிகவெரட்டிய நகர வீதிக்களை அணுகி வினவிய போது கிடைத்தன.

நான் ஏன் வழமைக்கு மாற்றமான நிலை என வினவினேன்.

“தம்பி எங்கட நாட்டுக்கு வந்து எங்க பக்கத்துக்கும் கொரோனா அங்கிள் வந்து சுத்திட்டு இருக்காருன்னு கேள்வி.  அதான் ஊரடங்குன்னு ஏதோ போட்டிருக்குறாங்களாம். அதான் இந்த நெலம” “நோன்புக்கு முன்னுக்கே அந்த அங்கிள் வந்துட்டாரே” என நான் கேட்க “அதான் தம்பி பாருங்களேன். வழமயவிட இந்த முற சிங்கள தமிழ் மனுஷர்களும் டவுன் பக்கம் வந்தது கொரவு. அவுங்கட பெருநாள் என்டா எப்புடி கலகட்டும் இந்த டவுன். ஸ்பீக்கர் போட்டு கொடி எல்லாம் கட்டி கலர் லைட் போட்டு கல கட்டுர டவுன் இந்த முற வெறும் இருட்டா இருந்திச்சிப்பா. கோடி கனக்கு பிஸ்னஸ் பன்னுற பொடவ கடயெல்லாம் கோழிகுஞ்சுக்கு கூட புக ஏலாம மூடிட்டானுங்கடா பாரேன். என்னமோ சில்லர கட, பாமசி கட கள் மட்டும் ஏதோ சின்ன பிஸ்னஸ் பாத்திருக்கும் மத்தபடி காஞ்சி போய் இருந்திச்சுப்பா இந்த டவுன்.”

“அதான் நாளைக்கு (11) எல்லாம் முடியுதே. எங்கட முஸ்லிம்ஸ்க்கு பெருநாள் கொண்டாட அல்லாஹ் வழி செஞ்சிட்டான். இனி எங்கடவங்க வருவாங்க. எங்கட ஊர் மட்டுமில்ல. கனுக்கெட்டி, கல்பனாவ, நம்முவாவ, மதவாக்கொளம், சங்கட்டிகொளம், பன்னவ, வெல்பொதுவெவ, எல்லா முஸ்லிம் ஊரும் இனி நிகவெரட்டி டவுன்ல தான். சும்மா கலக்குவம்ல.” என்றேன் நான்.

“ஒனக்கு மூல இல்லயா? பைத்தியமா? தல சரில்லயா? இதாடா ஒன்ட இஸ்லாம்? ஓன்ட அல்லாஹ் இதயா சொல்லுரான்? நீ இந்த நாட்டுக்கு இரக்கமில்லயா? நீ என்ன தீவிரவாதியா? அடுத்தவங்கட மனநெலய புரிஞ்சிக்க மாட்டியா? எல்லா முஸ்லிமும் இப்டியா? கல்நெஞ்சக்காரவங்கடா நீங்க.”

ஆம். என் உறவுகளே! இந்த மேல் தொடுக்கப்பட்ட கேள்விகள் வேல்களாக தற்போது அம்புகளில் ஏற்றப்பட்டு இழுத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த வேல்கள் இன்னுமொரு மியன்மாரை இன்னுமொரு பேருவலையை உருவாக்க சக்தி பெற்றன. விடயம் என்னவென்றால் இது தான் தற்போதைய நிகவெரட்டிய நகரின் நிலை. முழு நாட்டு மட்டுமல்ல உலக நிலையும் இதுவே. இன்னொரு புறம் வறுமை. ஒருவேலை உணவுக்கு கூட வழியின்றி பட்டினி நோன்பிருக்கும் மக்கள் உள்ள நம் ஊரில் ஒருவன் மகிழ்ச்சியாக கோலாகலாமாக பெருநாள் கொண்டாடினால் அவன் மனிதாபிமானமற்றவன். ஒன்லைனில் ஓடர் செய்து ஆடை வாங்குகிறீர்கள். பெருநாள் தொழுகைக்கே வாய்ப்பில்லாத நிலையில் ஏன் இத்தனை செலவு. அந்த செலவை வைத்து ஓர் ஏழையின் கண்ணீர்துடைக்கலாமே.

ஒரு நிகவெரட்டிய வாழ் அறிவைத்தேடும் மாணவன் என்ற வகையிலே. சமூக வலைதளத்தில் ஒரு ஊடகவலயமைப்பின் முக்கிய பொறுப்பில் இருப்பவன் என்ற வகையிலே. ஜனாதிபதி ஊடக பிரிவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவன் என்ற வகையிலே, பல அரசியல் தலைமைகளது ஊடக வலையமைப்புகளுடன் கிட்டிய உறவு இருப்பவன் என்ற வகையிலே எம் ஊர் மற்றும் அதனை சூழ உள்ள முஸ்லிம் ஊர் வாசிகளிடம் வேண்டிக்கொள்வது. இலங்கையில் மாபெரும் நாடகம் ஒன்று அரங்கேற காத்திருக்கிறது. அதற்கான நுழைவுச்சீட்டு முஸ்லிம்களே. அந்த அடிப்படையில் எமது ஊரை காப்பது. பிற மதத்தவருடனான உறவை பேனுவது எமது பொறுப்பு. எனவே இம்முறை பெருநாள் கொண்டாட வேண்டாம் என என்னால் கூற இயலாது. அதற்கான ஆடைகள் வாங்க கூட்டம் கூட்டமாக குறிப்பாக பெண்கள் மற்றும் வாலிபர்கள் பிறமதத்தவர் பெரும்பான்மையாக வாழும் நகரங்களுக்கு நுழையாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என கூறிக்கொள்கிறேன். குறிப்பாக நிகவெரட்டிய நகரை இவ்வருடம் தவிர்த்து கொள்வது பல நன்மைகளுக்கு வித்திடும் என வேண்டி இவ்விடயத்தில் ஊர் தலைமைகள் குறிப்பாக மஸ்ஜித் நிர்வாகங்கள் அதிக கவனம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

சிந்திக்கும் உள்ளம் நிலைமையை உணரும். உணர்ந்த உள்ளம் நியாயத்தை புரியும். வீட்டில் அடங்கும். வீராப்பு பேசி வீரநடை போடும் உள்ளம் சிந்திக்காது. நியாயத்தை புரியாது. வீட்டிலும் அடங்காது. அந்த உள்ளம் தான் எம் சமூகத்தின் துரோகிகளுக்கு வழி அமைக்கும். பல உயிர்களை கொல்லும் ஒரு சமூக நிம்மதியை அழித்த உள்ளமாக ச்சீ. ஒரு மிருகமாக வரலாறு பேசும்.

இது நிகவெரட்டியை மையமாக வைத்து எழுதப்பட்டாலும் முஸ்லிம் சமூகம் உள்ள அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். அனைவரையும் சென்றடைய இயன்றளவு பகிருங்கள்.

என்றும் நிகவெரட்டிய புதல்வன்
Faseem Ibnu Rasool

நிகவெரட்டியவிற்கு ஆடை வாங்க வருபவர்களா நீங்கள், உங்களுக்கு தான் அருளாளன் அன்பாளன் ஏக வல்லோன் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ். அல்லாஹ் எம் அனைவருக்கும் செய்த மாபெரும் அருள் இன்னுமொரு ரமழானை எமக்கு இந்த…

நிகவெரட்டியவிற்கு ஆடை வாங்க வருபவர்களா நீங்கள், உங்களுக்கு தான் அருளாளன் அன்பாளன் ஏக வல்லோன் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ். அல்லாஹ் எம் அனைவருக்கும் செய்த மாபெரும் அருள் இன்னுமொரு ரமழானை எமக்கு இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *