இரா (ரை)

  • 13

கோரோனா அப்டேட்கள்
அடிக்கடி வந்து குவிய
கைப்பேசியோ கோரமாக
கவலையோடு கட்டிலில் சாய்கிறேன்

காதருகே வந்து கிசுகிசுக்கிறது
கோபத்தை இருமடங்காக்கிறது
கடித்ததால் ஏற்பட்ட தளும்பல் கண்டு
கிணத்தாழம் வரை என் விரக்தி

எழுந்து கொள்கிறேன்
எரியவைத்து விளக்கை
ஏடாகூடமாய் என்னில் திட்டிக்கொண்டு
அண்ணார்ந்து பார்க்கிறேன்
எங்கே அதுவென
அலசலொன்று கண்ணால்

இரண்டு மூன்றென
எண்ணுமளவு கொன்றுவிட்டு
இருமாப்புடன்
ஓட்டிக்கொள்கிறேன்
கட்டிலில் நானும்
ஆழமாய் ஓர் தூக்கம்
இனியென்ன பிரச்சினை
என்று எண்ணி
ஆறுதலயாய் மீண்டும்
கண்ணயர்கிறேன்

அலாரம் போல் மீளவும் காதருகே
அவ்விடத்தையே சுற்றிக்கொள்ள
இரத்தவோட்டமோ வேகமாகிறது
இடைஞ்சலால் எழுந்த கோபம்கொண்டு

மீளவும் எழும்பி
மோதி என்ன பயன்
மனதில் நினைத்துக்கொள்ள
மெல்லன உறிஞ்சி
தன் வேலையை
மகிழ்வாய் முடித்துக்
கொண்டு செல்கிறது
மணிமுள்ளை விட
சிறிய நுளம்புக்கூட்டம்

கோரோனாவுக்குப் பின்
கோரமாய்
கவிழ்க்க வரும் டெங்கு
காப்போம்
நம் சூழலை சுத்தமாய் என்றும்

Binth Ameen

கோரோனா அப்டேட்கள் அடிக்கடி வந்து குவிய கைப்பேசியோ கோரமாக கவலையோடு கட்டிலில் சாய்கிறேன் காதருகே வந்து கிசுகிசுக்கிறது கோபத்தை இருமடங்காக்கிறது கடித்ததால் ஏற்பட்ட தளும்பல் கண்டு கிணத்தாழம் வரை என் விரக்தி எழுந்து கொள்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *