கனவும் நிஜமும்

  • 6

“உம்மா! நானாவும் கல்யாணம் முடிச்சு மைனி ஊட்டில செட்டில் ஆயிட்டான். நானும் தங்கச்சும் மட்டும் தான் இருக்கம். ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல கல்யாணத்த முடிச்சி வெச்சா நல்லா இருக்கும் தானே?செலவும் குறையும்.”

“சரி மகள்! அப்போ அப்டியே செய்வோம். அப்போ இந்த விஷயத்தை நான் நானாட்டையும் கோல் பண்ணி சொல்றன் சரியா?”

“ம்ம்.”

“ஹலோ! நானா அஸ்ஸலாமு அலைக்கும் சுகமா இருக்கீங்களா?”

“ஓஹ் தங்கச்சி சொல்லுங்க என்ன விஷயம்.”

“இல்ல நானா” என்று ஆரம்பித்து தயங்கியபடி விஷயத்தை சொன்னாள் ஹப்ஸா.

“சரி தங்கச்சி நான் அப்போ புரோக்கர் மாமா கிட்ட சொல்லி மாப்பிள்ளையை பாக்க சொல்றேன்.”

“ஆஹ் செரி நானா!”

சில நாள் கழித்து ஹப்ஸாவிற்கும் ஹம்தாவிற்கும் திருமணம் நடந்துமுடிந்தது.

“ஹம்தா இங்க வா! நானா நீங்களும் கொஞ்சம் வாங்க! நானா ஏண்டவர் என்ன கூட்டிட்டு வெளிநாட்டுக்கு போக போறாராம். நானும் சரின்னு சொல்லிட்டேன். நீங்களுகள் யாரு செரி உம்மாவ பாத்துக்கிறீங்களா?”

“ஹப்ஸா என்ட நெலம உனக்கு தெரியும் தானே? நான் இப்போ கஷ்டத்துல இருக்கேன். எனக்கு உம்மாவையும் சேர்த்து பாத்துக்கிறது கஷ்டம்.”

“ஹம்தா! நீ என்ன உம்மாவ பாத்துகிறியா?”

“நானா நானும் அவரும் தனியாக வாழனும்டு ஆசபட்ரோம் எனக்கு உம்மாவ பாரம் எடுக்க ஏலா. நீங்களே ஒரு முடிவு ஒன்டு எடுங்க.”

“செரி அப்ப எல்லாருக்கும் கஷ்டம் தானே! வாங்க உம்மா கிட்ட போய் பேசலாம்.”

“உம்மா!”

“ஆ சொல்லுங்க புள்ளகளா என்ன என்ட தங்கங்கள் மூனு பேரும் ஒரே அடியா வந்திருக்கீங்க?”

“உம்மா! ஹப்ஸாவும் ஹப்ஸாட மாப்புளயும் வெளிநாட்டுக்கு போபறாங்களாம். சின்ன தங்கச்சிக்கு தனியாக வாழ ஆசயாம். எனக்கும் கொஞ்சம் கஷ்டம் தானே! அதான் உங்கள.”

“அதுக்கு இனி என்ன மகன் தயங்காம சொல்லுங்க விஷயத்த. இல்ல உம்மா எங்க மூணு பேருக்கும் உங்கள பாக்குறதுக்கு டைம் இல்ல தானே! அதான் உங்கள முதியோர் இல்லத்துல சேர்ப்பொமான்டு கேட்கத்தான் வந்தோம்! நீங்க என்ன சொல்றீங்க உம்மா?”

ஒரு கணம் அத் தாய்க்கு மரணத்தை சந்தித்தது போல் இருந்தது. அவளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருவதை கட்டுப்படுத்திக்கொண்டு புன்னகையோடு, “சரி மகன் அப்படியே செய்வோம்” என்றாள்.

“சரி உம்மா அப்போ நாளக்கு நாம முதியோர் இல்லத்துக்கு போவோம். நீங்க படுத்துக்கங்க இப்போ நான் நாளக்கு காலையிலே வாரேன்.”

ஆஹ் செரி மகன் என்று சொல்லி விட்டு மறுநாள் காலை வரை கவலையுடன் அழுது கொண்டிருந்தாள் அத் தாய்.  மறுநாள் காலை எழுந்தவுடன் மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு பிள்ளைகளிடம் உமமாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டான் அரூஸ் தன் தாயின் வீட்டிற்கு.

“உம்மா ரெடியா நீங்க போறதுக்கு?”

“ஓஹ் மகன் இந்தா வாரன்.”

“ஆஹ் செரி.”

சிறிது நேரத்திற்குப் பிறகு மகன் வாங்க போகலாம் என்று கூறிக் கொண்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த மகனின் காரில் ஏறினாள் அத் தாய். கார் முதியோர் இல்லத்தை நோக்கி புறப்பட்டது. மனதில் அளவில்லா கவலையுடன் தனது பிள்ளைகளை நினைத்து கொண்டே சென்றால் அத் தாய். சற்று நேரத்தில் அவர்கள் முதியோர் இல்லத்தை சென்றடைந்தனர். சற்று நேரத்திற்குப் பிறகு,

“உம்மா அப்போ நாங்க போறம். நீங்க இரீங்க சரியா ஏதாச்சும் தேவப்பட்டா கோல் பண்ணுங்க சரியா!”

“சரி மகன் நீங்க பத்திரமாக போங்க வாப்பா”

என்று சொல்லி கட்டி அணைத்து முத்தமிட்டால் அத் தாய்.

“செரி அப்போ நாங்க போறம்”

என்று சொல்லிவிட்டு தாயின் அருமை புரியாமல் முதியோர் இல்லத்தை விட்டு வெளியேறினான் அரூஸ். சிறிது நேரம் கழித்து அரூஸ் அவனுடைய வீட்டை வந்தடைந்தான்.

“ஆஹ் நீங்க வந்துட்டீங்களா? எல்லா பிரச்சினையும் முடிஞ்சு தானே?”

“ஓ..ஓ.. எங்க புள்ளகள்?”

“அதுகள் தூக்கம். செரி நீங்க போய் தூங்குங்க நாளக்கி மீதிய பாக்கலாம்.”

“செரி.”

மறுநாள் காலை,

“வாப்பா! வாப்பா! உம்மா, என்னமோ சொன்னாங்க. நீங்க உமமாவ எங்கேயோ கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டீங்கண்டு. உண்மையா அது. அப்போ நாங்களும் கல்யாணம் முடிச்சதுக்கு பொறவு உங்களையும் உம்மாவையும் அங்கதானே கொண்டு போய்வுடனும்”

என்று கேட்டவுடன் திடுக்கிட்டு அதிர்ச்சியில் கண்விழித்தான் அரூஸ் தூக்கத்திலிருந்து. இவன் கண்ட கனவு ஒரு கணம் அவனது வாழ்க்கையையே புரட்டிப் பார்க்க வைத்தது அவனுக்கு. அவன் அவனது உம்மாவிற்கு செய்த துரோகத்தையும் அவனது உம்மா அதனால் அனுபவித்த வலிகளையும் அப்போதுதான் அவன் உணர்ந்தான். ஆனால் எந்தவித பயனும் இல்லை ஏன் என்றால் அவனின் தாய் உயிரோடு இல்லை.

இது போன்று தான் சிலரின் வாழ்க்கை வரலாறுகளும் இருக்கும் போது தாய் தகப்பனின் அருமை புரிவதில்லை இல்லாதபோது தான் புரிகிறது.

தாய் தகப்பனை நடுரோட்டில் விடும் பிள்ளைகளுக்கு ஒரு நாளும் நல்லது நடக்காது எந்நாளும் கேடுதான்.

Fasool Muhammadh Fasroon
உடநிதிகமை, கெக்கிராவ

“உம்மா! நானாவும் கல்யாணம் முடிச்சு மைனி ஊட்டில செட்டில் ஆயிட்டான். நானும் தங்கச்சும் மட்டும் தான் இருக்கம். ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல கல்யாணத்த முடிச்சி வெச்சா நல்லா இருக்கும் தானே?செலவும் குறையும்.” “சரி…

“உம்மா! நானாவும் கல்யாணம் முடிச்சு மைனி ஊட்டில செட்டில் ஆயிட்டான். நானும் தங்கச்சும் மட்டும் தான் இருக்கம். ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல கல்யாணத்த முடிச்சி வெச்சா நல்லா இருக்கும் தானே?செலவும் குறையும்.” “சரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *