உங்கள் ஜனாஸா மதிக்கப்பட வேண்டுமா?

  • 10

அதிகமான voice notes, articles என்பன பெருநாள் shopping பற்றி வெளியிடப்பட்டுள்ளன. அதனால் முஸ்லிம் சமூகமும் பெண்களும் சதித் திட்டத்துள் சிக்காது தப்ப, பாதுகாப்பாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளது. எனவே நான் மீண்டும் அதைப் பற்றி பேச வரவில்லை. அது நம் அனைவருக்கும் உணர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் நாம் பாதுகாப்பாக இருப்போம் என நான் நம்புகிறேன்.

அந்தவகையில் எமது முஸ்லிம் சமூகம் corona virus தொற்றினால் எதிர்நோக்கும் இன்னுமொரு அவலநிலை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், பெருநாள் shopping குறித்து ஒரு விழிப்புணர்வை ஊட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அது என்னவெனில், அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் corona தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்காது அடக்கம் செய்யவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

ஒன்று, இதுவரை சில முஸ்லிம் சகோதரர்களின் சடலங்கள், அக்குடும்பங்களினதும் மற்றும் பல முஸ்லிம்களினதும் எதிர்ப்பையும் மீறி எரித்து சாம்பலாக்கப்பட்டன.

மற்றொன்று, ஓர் முஸ்லிம் சகோதரியின் சடலம் corona தொற்றிருந்ததாக அரச தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்ட பின்னர், அவருக்கு corona தொற்று காணப்படவில்லை என வைத்திய சான்றுகள் நிரூபித்தன.

இவ்விரண்டையும் நோக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. வேண்டுமென்றே நம்மீது அம்புகள் எறியப்படுகின்றன. இஸ்லாத்தில் ஓர் மையித், உயிரோடு உள்ள மனிதனை போல் மதிக்க வேண்டும் என நம் இறைவனும் தூதரும் நமக்கு அருளியுள்ளனர். சீரான முறையில் குளிப்பாட்டி, அழகிய முறையில் கபனுடுத்தி, தொழுவித்து, அடக்கம் செய்தலே நாம் ஜனாஸாவுக்கு வழங்கும் மரியாதையும் இஸ்லாமியனின் கடமையுமாகும்.

எனவே, இஸ்லாத்தை பாதுகாக்கவும் இஸ்லாமியனான எம் கடமையை நிறைவேற்றவும் மற்றும் நம் ஒவ்வொருவரின் மையத்தும் அழகிய முறையில் சிறந்த மய்யித்தாக இறைவனை சென்றடைவதற்காகவும், நாம் ஒரு முறை அல்ல பல்லாயிரம் முறை சிந்திக்கவேண்டும், பெருநாள் shopping பற்றியும் அநாவசிமாக பாதைகளில் சுற்றுவது பற்றியும்.

என்ன சதித்திட்டமோ, இன்று முதலான திடீர் தொடர் ஊரடங்கு சட்ட நீக்குதலில். நாம் பாதுகாப்பாக இருப்போம், இறைவனிடம் மன்றாடுவோம், அந்த நாயனே சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன். எச் சதித்திட்டமும் அவனிடம் பலிக்காது.

நான் மீண்டும் கூறுகிறேன், என் ஈமானிய சகோதர சகோதரிகளே! உங்கள் ஒவ்வொருவரிதும் ஜனாஸாவும் மதிக்கப்பட வேண்டுமா? இல்லை, எரித்து மிதிக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள். உங்கள் பாதுகாப்பு உங்களுக்கே. முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதும் நம் அனைவரினதும் தலையாய கடமையும் பொறுப்பும் ஆகும்.

நலன் விரும்பும் இஸ்லாமியன்,
Manazir Mansoor
Akurana

அதிகமான voice notes, articles என்பன பெருநாள் shopping பற்றி வெளியிடப்பட்டுள்ளன. அதனால் முஸ்லிம் சமூகமும் பெண்களும் சதித் திட்டத்துள் சிக்காது தப்ப, பாதுகாப்பாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளது. எனவே நான் மீண்டும் அதைப் பற்றி…

அதிகமான voice notes, articles என்பன பெருநாள் shopping பற்றி வெளியிடப்பட்டுள்ளன. அதனால் முஸ்லிம் சமூகமும் பெண்களும் சதித் திட்டத்துள் சிக்காது தப்ப, பாதுகாப்பாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளது. எனவே நான் மீண்டும் அதைப் பற்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *