வீரப்பெண்ணே எழுந்திரு

  • 46

வீரப்பெண்ணே எழுந்திரு
வீர நடை கொண்டு
வீண் பேச்சுக்கள் அதை
உன் நாவினின்றும் எடுத்தெறி

பெண்ணியம் அதற்கு
கண்ணியங்கள் கிட்டும் வரை போராடு
சமத்துவம் என்பது இங்கில்லை
நீ எழுந்து போராடும் வரையிலும்

கல்யாணச் சந்தைகளில்
காட்சிப் பொருளாகும் நீ
இன்றைய உலகச் சந்தைகளில்
அறிவுப் பொருளாய் மிளிர்ந்து விடு

நாளைய வெற்றிப் பதிவுகள் உனதாகலாம்
அடுப்பங்கரைக்குள் அடிமையென வாழாதே
அண்டவெளிகளுக்குள் மங்கையர் பெயர் பொறிக்கும் காலம் இது

போலிச் சடங்குகள் அதை தூக்கி எறி
இந்தக் கலியுகம் உனக்கானதே
அடக்கு முறைக்கெதிராய் குரல் கொடு
ஆனால் இங்கு உன்னை அடக்கவும்
குரல்கள் காத்திருக்கும்
அதற்கு செவி சாய்க்காதே

பிற்போக்கு எண்ணங்களுக்கு
முட்டுக்கட்டைகள் இடு
முற்போக்கான எண்ணங்கள்
உதிக்கலாம் உன்னில்

நம்பிக்கை அதை முழு மூச்செனக் கொள்
நாளை நீ வாகைகள் சூடலாம்
தலைக்கனம் அதைத் தகர்த்தெறி
அது தலைக்கு கணமாகும்

பாரதி காலத்து மடமைப் பெண் என கலி யுகத்திலும் பெயர் பூணாதே
அடக்குமுறை எனும் கூட்டை
உடைத்துக் கொண்டு
வன்முறைகளைக் கடந்து வா

அடிமை வாழ்வினின்று
விடுதலையான சுதந்திர பட்சியாய்
வெளியுலகில் பறந்திடலாம்
சாதனைப் பயணங்களை நோக்கி

Mishfa Sadhikeen

வீரப்பெண்ணே எழுந்திரு வீர நடை கொண்டு வீண் பேச்சுக்கள் அதை உன் நாவினின்றும் எடுத்தெறி பெண்ணியம் அதற்கு கண்ணியங்கள் கிட்டும் வரை போராடு சமத்துவம் என்பது இங்கில்லை நீ எழுந்து போராடும் வரையிலும் கல்யாணச்…

வீரப்பெண்ணே எழுந்திரு வீர நடை கொண்டு வீண் பேச்சுக்கள் அதை உன் நாவினின்றும் எடுத்தெறி பெண்ணியம் அதற்கு கண்ணியங்கள் கிட்டும் வரை போராடு சமத்துவம் என்பது இங்கில்லை நீ எழுந்து போராடும் வரையிலும் கல்யாணச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *