படைத்தவனின் பக்கம் மீளுவோம்

  • 6

முழு உலகமும் கண்ணுக்கு தெரியாத ஒரு அற்ப நோயினால் (வைரஸ்) உளப்பிரச்சினைக்கு உள்ளாகி தடுமாற்றத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். நாளுக்கு நாள் மனிதன் பீதியினால் அவதியுறுகின்றான். இந்த அற்ப வைரஸின் பயத்தினால் பொருளாதாரத்தை விட்டு, வியாபாரத்தை விட்டு, தொழிலை விட்டு வீட்டிற்குள்ளே அவன் முடங்கிக் கிடக்கின்றான். அவ்வாறு வெளியே சென்றாலும், தனது சகோதரனுடனும் நெருங்கி பேச, பழக அஞ்சுகின்றான். அவ்வாறே ஒன்றாய் இருந்த நண்பனுடனும் கலந்துறவாடாமல் அவனை விட்டு தூரமாகின்றான். இவையனைத்தும் நாம் காதால் கேட்டு, கண்ணால் காணும் நிதர்சன உண்மையே.

இவ்வனைத்துக்கும் காரணம் என்ன?

இவ்வளவு காலமும் எமக்கு வாழ்க்கை தந்து மட்டிட முடியாத அளவு கேளாமலே அருட்கொடைகள் தந்து, அனைத்து படைப்பினங்கள், ஜீவராசிகளையும் விட கண்ணிய உயர் அந்தஸ்த்தை தந்து, ஆரம்பமும், முடிவும் இல்லாத இணை துணையற்ற பரிசுத்தமானவனும், புகழுக்குரியவனும், வணங்குவதற்கும் தகுதியான, எம் கண்களுக்கு தெரியாத எம் ஏக இறைவன் அல்லாஹ்வை மறந்து, அவனைப் பயப்படாமல் வாழ்வதே காரணமாகும்.

நாம் கண்ணுக்கு விளங்காத எம் படைப்பாளன் அல்லாஹ்வைப் பயப்படாமல், அவனை மறந்து கண்ணெதிரே உள்ள உலகத்தை, அதன் இன்பங்களில் பெருமையடித்துக் கொண்டிருந்தோம். அனைத்தும் எமது சக்தி, திறமை, முயற்சியினால் நடக்கின்றன என கர்வங் கொண்டோம். நாம் வாழும் இவ்வாழ்க்கையே அல்லாஹ் எமக்குத்தந்த அருட்கொடை என்பதை மறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இதன் விளைவு, அவனின் கோபத்தின் ஒரு புறத்தை கண்கூடாய் காண்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு அற்ப உயிரை முழு உலகையுமே ஆட்டங்காண வைத்தான், அடக்கினான். நான்தான் உயர்ந்தவன், பலமிக்கவன் என கர்வத்துடனிருந்தவர்களையும் நடுநடங்க வழிசெய்தான். வல்லரசுகள் என்றோம், விஞ்ஞான உலகம் என்றோம், நவீன சாதனங்களுடைய தொழில்நுட்ப உலகு என்றோம் எல்லாம் அவன் முன்னால் சுக்குநூறாகி தவிடுபொடியாகி விட்டன.

முழு உலகிற்குமே எத்தி வைக்கின்றோம்.

“ஏ உலகமே! ஏ மனித சமூகமே! ஏக நாயன் அல்லாஹ் ஒருவனே! அவனைக் கொண்டே அனைத்தும் இயங்குகின்றன. எந்த ஒரு வஸ்துமே அல்லாஹ்வின் உதவி இல்லாமல் இயங்கவே முடியாது. அவன் தனித்தவன். இணைதுணை அற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. நூம் அவனின் பக்கம் மீழுவோம். அல்லாஹ்வின் மகத்துவத்தை உள்ளத்தில் பதிய வைப்போம். அவனுக்கு நாம் அடிமை அவன் எம் எஜமான் என்பதை உள்ளத்தால் ஏற்று, எம் செயலாலும் நிரூபிப்போம். தனிமையிலும் சரி, சேர்ந்திருக்கும் போதும் சரி எந்நிலையிலும் நன்றி மறவாத, முற்றிலும் அவனுக்கு வமிப்பட்டு அவனும் அவன் தூதரும் காட்டித் தந்த வழியினிலே வாழ்வோம். இவ்வாறு நாம் வாழ்ந்தால், முழு உலகையும் அல்லாஹ் எம்வசப்படுத்தித் தருவான். எல்லா பிரச்சினைக்குமான தீர்வு அவன் வசமே உள்ளது. எனவே, நாம் சரணடைவோம், கீழ்ப்படிவோம் படைப்பாளனின் பக்கம். அல்லாஹு அக்பர்.”

Ibnu Iqbal

முழு உலகமும் கண்ணுக்கு தெரியாத ஒரு அற்ப நோயினால் (வைரஸ்) உளப்பிரச்சினைக்கு உள்ளாகி தடுமாற்றத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். நாளுக்கு நாள் மனிதன் பீதியினால் அவதியுறுகின்றான். இந்த அற்ப வைரஸின் பயத்தினால் பொருளாதாரத்தை விட்டு,…

முழு உலகமும் கண்ணுக்கு தெரியாத ஒரு அற்ப நோயினால் (வைரஸ்) உளப்பிரச்சினைக்கு உள்ளாகி தடுமாற்றத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். நாளுக்கு நாள் மனிதன் பீதியினால் அவதியுறுகின்றான். இந்த அற்ப வைரஸின் பயத்தினால் பொருளாதாரத்தை விட்டு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *