நான் அபாயா பேசுகிறேன்!

  • 5

அபாயாவின் சோகக்
கதறல் கேட்கின்றதா?
பெண்கள் மனசாட்சி
இதைப் பார்த்து விழிக்கின்றதா?

நான் இருந்தேன் – உன்
அவ்றத்தை மூட
ஏன் கிழித்தாய்? – என்
தேகம் அழுகின்றதே!

என் பேரில் உடுக்கும்
உடுப்பால் நிம்மதி இல்லை- இன்று
அந்நியரின் பார்வையில்
உனக்கு விடுதலை இல்லை!

ஓ பெண் இனமே!
உன் எதிர்காலம் எங்கே?
உன் கண்ணியத்தை நீயும்
குறைப்பது முறையா?

செல்வந்த பூமி அதிலே
உன் உடைக்கு துணி
தான் பத்தவில்லயா?

இஸ்லாத்தின் போர்வைக்குள்ளே உனக்கு
பெஷன் ஷோ ஒன்று கேட்குதா?

உடுக்கின்ற உடுப்பில் ஒழுக்கம் தான் இல்லை
எதுவென்று கேட்டால் அபாயா தான் பிள்ளை

ஓ பெண்ணே!
நீ ஆடவரை மயக்கும் பொருளா?
யாவும் வாங்கி விட்டாய்
உன் கையில் ஏதும் மிச்சம் இல்லையே

நாகரீக உடைக்கு ஏன்
நீ அபாயா என்று கூறுறாய்?

இதைத் தட்டி கேட்க உரிமைகள் இல்லை
மார்க்கத்தை தேட தேடல்கள் இல்லை

ஓ பெண்ணே!
நீ மறுமையை மறப்பது சரியா?

Noor Shahidha.
Badulla.

அபாயாவின் சோகக் கதறல் கேட்கின்றதா? பெண்கள் மனசாட்சி இதைப் பார்த்து விழிக்கின்றதா? நான் இருந்தேன் – உன் அவ்றத்தை மூட ஏன் கிழித்தாய்? – என் தேகம் அழுகின்றதே! என் பேரில் உடுக்கும் உடுப்பால்…

அபாயாவின் சோகக் கதறல் கேட்கின்றதா? பெண்கள் மனசாட்சி இதைப் பார்த்து விழிக்கின்றதா? நான் இருந்தேன் – உன் அவ்றத்தை மூட ஏன் கிழித்தாய்? – என் தேகம் அழுகின்றதே! என் பேரில் உடுக்கும் உடுப்பால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *