GCE O/L பெறுபேறுகளின் பின் மக்கள் சிந்தனைக்கு

  • 14

பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றார்களும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உயர்தரத்தில் என்ன துறையில் கற்பது, எந்தப் பாடசாலையில் கற்பது என்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சகல வசதிகளும் உள்ள பெரிய பாடசாலைகளில் கல்வி கற்ற, நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாரிய பிரச்சனை அல்ல அவர்களது பாடசாலையில் உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம், கலை, வர்த்தகம் ஆகிய எல்லா துறைகளிலும் கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் எமது நாட்டில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன உயர்தரம் கற்பதற்கு பக்கத்தில் உள்ள பாடசாலைக்குச் செல்லவேண்டும், அல்லது தலைநகரில் உள்ள பாடசாலைக்குச் செல்லவேண்டும் அதனையும் தாண்டி வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக பல நூறு கிலோமீட்டர்கள் பிரயாணம் செய்ய வேண்டும். மற்றும் பல இலட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும்.

அதற்கு வசதி உள்ளவர்கள் தங்களது பிள்ளைகளை வெளியே கொண்டு சென்று கற்பிக்க முடியும் வசதி இல்லாத ஏழைகள் என்ன செய்வது?

இது தொடர்பாக எமது ஊர்களில் உள்ள நலன்விரும்பிகள், கல்விமான்கள் கரிசனை செலுத்த வேண்டும். ஏனென்றால் எமது ஊர்களில் இன்னும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள், ஒருவர் கூட இல்லாத ஊர்கள் இருக்கின்றன.

இந்த துறைகளில் எமது கிராமத்தில் இல்லாமல் இருப்பதற்கான பிரதான காரணங்கள்.

  1. எமது கிராமப்புற பாடசாலைகளில் அதற்கான வளங்கள் இல்லை.
  2. மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகள் இல்லை.
  3. வெளிநாட்டு மாவட்டங்களுக்கு சென்று கல்வி கற்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை.
  4. கிராமங்களில் இவற்றின் தேவைகள் உணரப்படாமை.

என்பவற்றை கொள்ளலாம். கடந்தகாலங்களில் நாம் அனுபவித்த துன்பங்களை பார்க்கும் போது எமது கிராமங்களில் அரச துறை அதிகாரிகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

எனவே இவ்வாறானவர்களை திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் GCE O /L பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த காலமே

ஊரில் உள்ள படித்த இளைஞர்கள், தலைவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடி இதற்கான ஏற்பாடுகளை செய்வது காலத்தின் தேவையாகும்.

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்

பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றார்களும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உயர்தரத்தில் என்ன துறையில் கற்பது, எந்தப் பாடசாலையில் கற்பது என்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.…

பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றார்களும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உயர்தரத்தில் என்ன துறையில் கற்பது, எந்தப் பாடசாலையில் கற்பது என்பது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *